Tuesday 28 July 2015

திரு, அப்துல்காலமை பற்றி எனது பார்வை


ஒருவர் பிறந்தார் இருந்தார் வாழ்ந்தார் இறந்தார் இது மனித குலத்தின் மாற்றபடமாத விதி

உயிர் தோன்றுவதும் மறைவதும் இயற்கையே இருப்பினும் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, என்பதைவிட வேறு என்ன சிறப்பு என திரு, அப்துல்காலாமுக்கு இருக்கு என்பதை அவரை  நேசிக்கும் நெஞ்சங்கள் விளக்கம் தரமுடியுமா

ராணுவ துறைக்கு மட்டுமே
 தரையிலிருந்து வின்னை தாக்கும் பிருத்வி ஏவுகனை
ஆகாஷ் ஏவுகணை,
பீரங்கியை எதிர்த்துத் தாக்கும் நாக் ஏவுகனைகளை தயாரிக்க முன்னோடியாக இருந்தர் திரு கலாம்  அவர்கள்

ஆனால்
சங்கராச்சாரியாரின் காலில் மண்டியிட்டு கிடந்தது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்



திரு, அப்துல்காலம் அவர்களை பலரும் விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை என்றும், சிறந்த ஆசிரியர்  என்றும்
அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர்,  என்றும்
 வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்பட கூடிய சிறந்த மனிதர் என்றெல்லாம் துதிபாடுகின்றனர் அவர் ஊர் அருகே தினசரி தமிழகத்தின் மீனவர்கள் கைது செய்வதும் வலைகளை அறுப்பதும் உயிர்களை கொள்ளுவதுமாக செயல்பட்ட ராஜபக்சே வீட்டில்  கூடி கும்மாளமிட்டு விருந்துண்டு மகிழ்ந்தார் என்பது நம்மில்  எத்தை பேருக்கு தெரியும்



எந்தவொரு நாட்டு விஞ்ஞானிகளுக்கும் சளைத்தவரல்லர் என்று சுமார். 60க்கும் மேற்பட்ட கல்வி, ஆராய்ச்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து வெற்றி கண்டு  பல்வேறு தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்தியவர் கலாம் என்பதில் எனக்கு பெருமையே இருப்பினும் கூடங்குளம் வேண்டாம் என நானும் என்போன்ற பலரும் கூடங்குளம் அனுஉலைக்கு எதிரே உண்ணாநிலையில் இருந்த போது திரு, கலாம் மட்டும் இரவில் 1 மணிக்கு காவல் பாதுகாப்படும் கூடங்குளம் உள்ளே சென்று எல்லாம் சரியாக இருக்கிறது அனுஉலை பாதுகாப்பு என்று சொல்லிவிட்டு விடிய காலைக்குள் 450 பக்கம் விளக்கம் அரசுக்கு அளித்துவிட்டு தெருவில் போராடுகின்ற என்போன்ற படிக்காத பாமர முட்டாள்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லகூட தகுதியற்ற  பெருமைமிகு விஞ்ஞானி கலாம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்



உந்து விசை, செலுத்து அமைப்பு, உயரிய உலோகக் கலவைகள் ஆகியவற்றை டி.ஆர்.டி. ஒ.வின் தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்தாலும்  கூடவே  3 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையிலும் உருகாத உலோகப் பொருட்களை கண்டுபிடிக்க காரணமாக இருந்தாலும்
ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாம் தெருவில் பிச்சை எடுக்கும் பல மனித உயிர்கள் இந்தியாவில் 1 கோடிக்குமேல் இருக்கையில் நாடு வல்லரசு ஆகப்போகுதுனு பகலில் கனவு கானச்சொன்னவர் திரு கலாம் அவர்கள் மனித உயிர்களின் வளர்ச்சிக்கோ அல்லது இந்தியாவின் வாழ்வாதாரத்திற்கோ இவர் என்ன கண்டுபிடிப்புகள் செய்தார்  என்பதை யாராவது என்னிடம் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்

     சேதுகால்வாய் திட்டத்தை  முடக்கும்போதும்
 ஈழத்தில் 2 லட்சம் தமிழ் உறவுகள் கொன்றொழிக்கும்போது எவ்வித கருத்தும் தெரிவிக்காத பெருமைமிகு மனிதர் இந்த கலாம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு இப்படி தமிழனின் வாழ்வாதார பிரச்சனைகளைப்பற்றி கவலைப்பட்டுள்ளாரா திரு கலாம் அவர்கள்

ஒட்டுமொத்தமாக இன்னும் 15 வருடங்களில் தமிழக்தில் மனித உயிர்களே வாழ தகுதியற்ற இடமாக மாறபோகிறது இதைபற்றி யாராவது அதாவது தமிழகத்தில் 8 கோடி தமிழர்களின் வளர்ச்க்கு அறிவுக்கு வழிகோல் செய்தாரா இந்த விஞ்ஞானி கலாம் அவர்கள்

படிப்பு அறிவு என்பது பணம் இருப்பவனுக்கு மட்டுமே என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது ஒரு அனு விஞ்ஞானியாக இதை மாற்ற என்ன செய்தார் திரு கலாம் அவர்கள்

               அனுவிஞ்ஞானிகள் என்று சொல்லிக்கொண்டு  ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் நம் பெருமைமிக்க மனிதர்களில் இவரும் ஒருவர் என்பதை நான் இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்


நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவு
ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்தி வந்த அணுகுண்டு , போன்ற இயற்கை அழிப்புத் திட்டங்களை ஆதரித்துப் பேசிவந்தவர் திரு, கலாம் அவர்கள் என்பதை நான் உறுதிபட தெரிவித்துகொள்கின்றேன்
என்னைபொறுத்தவை தமிழகத்தை சேர்ந்த ஒருவர் விஞ்ஞானியாக ரானுவ வளர்ச்சிக்கு மட்டுமே உயர்வுக்கு நவீன கண்டுபிடிப்புக்கு உதவினார் வாழ்ந்தார் மறைந்தார் வேறு எதையும் செய்யவில்லை

என்ன இவர்மீது எனக்கு வருத்தம் அனுஉலையில் பாதிப்பு இல்லையென்றால் அடுத்த அனுஉலையை டில்லி பாராளுமன்றம் அருகே அமைப்பதற்கு வழிசெய்யவில்லை என்பதுதான்

தமிழகத்திலிருந்து கீரமங்கலம் சிகா

9047357920