Saturday 25 August 2012

நம்ம பதிவர் திருவிழா நீங்க அவசியம் வாங்க

      தமிழகத்தில் மின்சாரம் இல்லா சூழலில்  குடிக்க தண்ணீர் இல்லாத இந்த நேரத்தில் அரசு தயாரிக்கும் மதுபான தொழிற்சாலைக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கின்ற தமிழக முதல்வர் செயலலிதா இருக்கும் திசையை நோக்கி வணங்கிவிட்டு என் கிருக்கலான பதிவை  எழுதுகிறேன் இதோ.....

 

              நிலை மாறும் உலகில் மாறாமல் இருப்பது பதிவு எழுதுகின்ற உள்ளங்களும், எண்ணங்கள் மட்டும்தான் என்பதற்கு எடுத்துக்காட்டாக


            கம்பளிப்பூச்சியாய் கூட்டுக்குள் குறுகி இருந்த பலரை இன்று பலதரப்பட்ட நட்புகளை உறவாக்கிக்கொண்டு தனது எழுத்தின் பயனமாக உலகை சுற்றிவரும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய்! மாறிவிட்டார்கள் நம் வலைப்பதிவர்கள் என்றால் அது மிகையல்ல


உறவுகளே

 சொல்லும் போதே நா கூசுதே..

ஈழத்தில் எம் உறவுகளும், சகோதரிகளும்  நிர்வாணப்படுத்தும்போது  மத்திய அரசில் அங்கம் வைத்துக்கொண்டு கொலைகார காங்கிரஸ் கையை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு


வேர்களுக்கு சுடுதண்ணி ஊற்றிவிட்டு இப்போது

விளைச்சல்மீது அக்கரை கொள்வதுபோல்

                                                                     நடிக்கின்ற

கருணாநிதி, தெருமாவளவன், ராமதாசு, சுப.வீ, அடிமைமணி போன்றோர் நடிப்புகளை கண்டு நெஞ்சுக்குள் எரிகின்ற வயித்தெரிச்சலை பதிவாக கொட்டுவதற்கு ஏற்ற இடம் இந்த பதிவு அல்ல


       தனது இலக்கிய கவிதையாலும், எழுத்து நடை திறமையாளும் கவிதைகளை மட்டுமல்ல வாழ்வில் நாம் சந்திக்கின்ற அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள் நம் பதிவர்கள் என்பதில் நான் எல்லையில்லா மகிழ்வு காண்கிறேன்


    மனிதனின் பலவேறு மனங்களை ஒன்றாக இணைப்பது மட்டுமல்ல நம் மனதிற்குள் எவ்வளவு துன்பச் சுவடுகள் மறைந்திருந்தாலும் நாம் பதிவு எழுதி அதற்கு மறுப்புகளும், பாராட்டுதலும் பெருகின்றபோது இன்பத்தின் உச்சதிற்கு சென்றுவிடலாம் அப்படி ஒரு சந்தோசம்  நம் பதிவர்களின் பதிவை படிக்கும்போது


    அநியாயத்தை கண்டு பொறுக்கவே முடியாமல் மன உளைச்சலோடு அரசியல்வாதிகளின் மீது ஒருவித வயித்தெரிச்சலை கொட்டி பல இளைஞர்களின் நெஞ்சங்களில் அனல்தீயை கக்கும் அளவிற்கு தீயை பற்ற வைக்கும்  தீக்குச்சித்தான் நம் பதிவர்கள் எழுத்து என நினைக்கும்போது  நெஞ்சு உண்மையில் நெகிழ்கிறது,,,



 .       ஊழலலோடு வாழ பழகிகொண்ட மக்களாய் நம்மை பழக்கப்படுத்தியது  மட்டுமல்ல அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பதால் லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு உலக அரங்கில் ஊழலால் மிக கேவலமாக தலைநிமிர்கிறது இந்தியா இதைப்பற்றிய அக்கரை பல பாமர மக்களிடம் கொண்டு செல்கின்ற பதிவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை சொல்லிக்கொண்டு,



     இங்கு இந்தியாவில்  கோவணம் கட்ட வக்கில்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் வறுமையில் சாகும்போது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உலக நாடுகளை சுற்றிப் பார்த்து வந்த செலவு மட்டும் 250 கோடி செலவைபற்றியும்


எந்த ஒரு அரசு அலுவலகம் சென்றாலும்  அங்கே லஞ்சம்  கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்ற பெருமையை உருவாக்கிய 


ஆண்ட கருணாநிதியும்

ஆளுகின்ற செயலலிதா  என்பது நாம் அனைவருக்கும் நன்கு தெரியும் இது நம் தமிழகத்துக்கும் ஏற்பட்டிருக்கும் தலைக்குனிவுதான் 


      ஆனால் இதை மாற்ற முயற்சிக்காமல் 100 ஆண்டுகளில் செய்ய முடியாததை 100 நாட்களில் செய்ததாக 25 கோடி விளம்பரம் செய்த முதல்வர் செயலலிதாவை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் அடாவடிதனத்தை  நம் மக்களிடம் எழுத்தின்மூலம் எடுத்துச்சொல்லி ஓர் விளிப்புணர்வை ஏற்படுத்திகின்றவர்கள் நம் வலைப்பதிவர்கள்தான்



மழைக்காலதில்கூட மழை தராமல் இயற்கை நம்மை வஞ்சித்திருக்கும் இந்த வேளையில்,,,

சென்னையில் பதிவர்களால் சின்ன சின்ன

தூறல் போடும் சிந்தனை துளிகளால்

இன்றும் பலர்  மனசில் பெருவெள்ளமாய்

கடல் கடந்து இதயத்தை தொட்டுவி்ட்ட நதிகளாய்

         நம்மோடு  மனம் மாறி பல கருத்துக்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள் உலகில் ஒட்டுமொத்த சமுதாய மனித இன வளரச்சியின் விடியலுக்காக எப்போதும் உறுதுணையாக திகழ்கின்ற நம் பதிவர்கள்



ஓராயிரம் கதை பேசி

ஒன்றாய் கூடி

ஓயாத நினைவலைகள் நெஞ்சில் பதிய உள்ளார்கள் நம் பதிவர்கள் ஆம்



பதிவர்களுக்கான  சந்திப்பு திருவிழா வருகின்ற 26/8/2012 அன்று சென்னையில் கோலாகலமாக துவங்க உள்ளது,

இதில் யாரெல்லாம் வராங்க தெரிஞ்சிப்போமா?

    வரும் ஞாயிறு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்த பதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும் கவியரங்கில் கலந்து கொள்ள இசைந்தவர்கள் பட்டியல் கீழே ..

பதிவர் பெயர் விபரங்கள் :

1. சி.பி.செந்தில்குமார்(அட்ரா சக்க)ஈரோடு

2. சங்கவி,கோயம்புத்தூர்

3. நண்டு@நொரண்டு,ஈரோடு

4. சுரேஷ் (வீடு) கோயம்புத்தூர்

5. பரமேஷ் ஓட்டுனர்(ஈரோடு)

6. கோவி(காதல்)கோயம்புத்தூர்

7. ஜீவா(கோவைநேரம்) கோயம்புத்தூர்

8. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்

9. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை

10. பிரகாஷ்(தமிழ்வாசி)மதுரை

11. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை

13. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்

14. கருண்(வேடந்தாங்கல்)திருவள்ளூர்

15. ரஹீம்கஸாலி,அரசர்குளம்

16. பிரகதீஸ்(பெரியகுளத்தான்)பெரியகுளம்17. கதிரவன்(மழைச்சாரல்)சேலம்

18. ரேகா ராகவன்,சென்னை

19. கேபிள் சங்கர்,சென்னை

20. உண்மைத்தமிழன் ,சென்னை

21. சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை

22. சிவக்குமார்(மெட்ராஸ் பவன்)சென்னை

23. தத்துபித்துவங்கள்(பிரபாகரன்)சென்னை

24. மோகன்குமார்(வீடு திரும்பல்)சென்னை

25. ரிஷ்வன்,சென்னை

26. டி.என்.முரளிதரன்,சென்னை

27. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை

28. சீனு(திடம் கொண்டு போராடு)சென்னை

29. இக்பால் செல்வன்,சென்னை

30. ஆரூர் முனா செந்தில் சென்னை31. சிராஜுதீன்(டீக்கடை) சென்னை

32. செல்வின் (அஞ்சா சிங்கம்) சென்னை

33. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை

34. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை

35. பால கணேஷ்(மின்னல் வரிகள்)சென்னை

36. சசிகலா(தென்றல்)சென்னை

37. மதுமதி(தூரிகையின் தூறல்)சென்னை

38. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

39. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை40. அகரன்(பெரியார் தளம்) சென்னை

41. கணக்காயர்,சென்னை

42. ஜெயக்குமார்(பட்டிக்காட்டான் பட்டினத்தில்)சென்னை

43. போளூர் தயாநிதி(சித்த மருத்துவம்) சென்னை

44. ராசின்(நதிகள்) சென்னை

45. புரட்சிமணி(கேள்வியும் நானே பதிலும் நானே)சென்னை

46. அனந்து (வாங்க ப்ளாகலாம்) சென்னை

47. லதானந்த்(லதானந்த் பக்கம் ) சென்னை

48. தமிழ் அமுதன் (கண்ணாடி) சென்னை

49. ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை

50. காவேரி கணேஷின் பக்கங்கள் சென்னை51. மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்)

52. குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை

53. கார்க்கி(சாளரம்) சென்னை

கேணக்கிருக்கன் லெனின்( கீரமங்கலம்)

54. விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை

55. மென்பொருள்பிரபு,சென்னை

56. அமைதி அப்பா,சென்னை

57. ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை

58. சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை

59. கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை

60. பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை

61. ராமு,சென்னை

62. ஷீ-நிசி கவிதைகள் சென்னை

63. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

64. மாடசாமி(வானவில்)சென்னை

65. இர.அருள்(பசுமைப்பக்கங்கள்) சென்னை

66. அண்ணல் (அண்ணல் பக்கங்கள்)சென்னை

67. சௌந்திரராஜன்(சென்னை வானொலியில்)கல்பாக்கம்

68. நிலவு நண்பன்,திருநெல்வேலி

69. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்

70. ராஜா(என் ராஜபாட்டை) பூம்புகார்

71. நாய் நக்ஸ் நக்கீரன் ,சிதம்பரம்

72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி

73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி

74. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை

75. கௌதமன்(கரிசல்குளத்தானின் வயக்காடு) வத்திராயிருப்பு

76. அருணன் கோபால்(கவிவனம்)

77. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை

78. திண்டுக்கல் தனபாலன்,திண்டுக்கல்

79. சரவணன் ஆர்.வி.(குடந்தையூர்)

80. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்

81. மணவை தேவாதிராஜன்,மணப்பாறை

82. சித்தூர் முருகேஷன்(அனுபவ ஜோதிடம்) சித்தூர்

83. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்

84. பலே பிரபு(கற்போம்)பெங்களூரு85. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு

86. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்

87. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை

88. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

89. சைத அஜீஸ்,துபாய்

90. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்

91. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

92. மாலதி

93. பிரேம லதா

94. கௌதம்

95. சத்தியன்

96. ரமேஷ் (சிரிப்பு போலீஸ்) சென்னை.

97. அகிலா (கோயம்புத்தூர்)

98. இரா.தெ.முத்து(திசைச்சொல்)

99. வடிவேலன். ஆர்

100. ஃபாருக் முகம்மது (எண்ணங்களுக்குள் நான் )

101. ஞ்சை குமணன் (புன்னகை மன்னன்) - தஞ்சாவூர்102. மயில்வாகனா (முல்லைவனம்) - செங்கல்பட்டு

103. சினேகன்அசோக்(அசோக்கின் கிறுக்கல்கள்) - ஸ்ரீபெரும்புதூர்

105. "AKKAPORU" Raja

106. Puratchi Mani

107. பாண்டியன்ஜி(வேர்கள்)



மூத்த பதிவர்கள்


1. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை

2. ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்

3. ரேகாராகவன்,சென்னை

4. வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை

5. வே.நடன சபாபதி(நினைத்துப் பார்க்கிறேன்)சென்னை

6. சீனா ஐயா(வலைச்சரம்)மதுரை

7. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை

8. சென்னைப்பித்தன்(நான் பேச நினைப்பதெல்லாம்)சென்னை

9. புலவர் சா.இராமாநுசம்(புலவர் கவிதைகள்)சென்னை

10. கணக்காயர்,சென்னை

11. சுப்புரத்தினம்

12. பாண்டியன்ஜி(வேர்கள்)


கவியரங்கில் பங்குபெறுவோர்

1. சசிகலா(தென்றல்)சென்னை

2. மாலதி(மாலதியின் சிந்தனைகள்)வேலூர்3. கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்

4. ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

5. சௌந்தர்(கவிதை வீதி)திருவள்ளூர்

6. அரசன்(கரைசேரா அலை)அரியலூர்

7. மயிலன்(மயிலிறகு)மயிலாடுதுறை

8. ரிஷ்வன்,சென்னை9. ராஜபாண்டி(தமிழன் வலை)அருப்புக் கோட்டை10. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்

11. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்

12. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்

13. ரமணி(தீதும் நன்றும் பிறர்தர வாரா)மதுரை

14. ஷீ-நிசி கவிதைகள் சென்னை

15. கணக்காயர்,சென்னை

16. மணவை தேவாதிராஜன்

Saturday 18 August 2012


நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே

   நினைக்கவே கொடுமையான நிகழ்வாக நெஞ்சில் மறக்கமுடியாத கொடுமைகள் ஈழத்தில் கொலைகாரன் அரங்கேற்றியபோது தன் இனம் தன்மானம் காக்க ஆண்,பெண் சிறியவர்கள், பெறியவர்கள் முதல்  ஆயுதமேந்தி போராடினார்கள்  ஈழத்தில் அங்கே 

சாக்கடை மீனுக்குச் சமுத்திரம் தெரியாது அதை உண்மையென நிரூபிக்கும் வகையில்

சேற்றில் புரள்கிற பன்றிக்கு நந்தவனக் குயில்களின் பாசை புரியாது என்பார்கள்

      அதுபோல என்  தமிழ் தாய் ஆடை அவிழ்க்கப்பட்டு அம்மணமாக நின்ற போதெல்லாமல் எம் இனத்தின்மீது அக்கறையே  இல்லாமல் மருத்துவமனையில் மல்லாக்க படுத்துறங்கிவிட்டு  இப்போது  டெ(ல்லி) சோ(னியா) போலி  மாநாடு நடத்துகின்ற  கருணாநியை வாழ்த்துவதற்கு காலமும் நேரமும் நிறையவே இருப்பதால் அதற்கு முன்பாக,

எங்கள் இந்தியாவில் "பிரமோஸ்" இருக்கிறது!
எங்கள் இந்தியாவில் "பிரித்வி ஏவுகனை" இருக்கிறது!
எங்கள் இந்தியாவில் "அக்னி" இருக்கிறது!

    ஆனால் தமிழகத்தில் இருக்கின்றவர்களுக்கு யாருக்குமே சுடு சொரணை  இல்லை என்பதை  உலக அரங்கில் எடுத்துசெல்லும் வேலையாக

    தமிழகத்தில் நூறு ஆண்டு சாதனைகளை வெறும் நூறு நாட்களில் செய்துவிட்டதாக பீத்திக்கொள்ளும் தமிழக முதல்வர் செயலலிதா போன்ற தலைவர்களும் படித்தவர் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றுகின்ற வேலைகளை சிறப்பாக செய்துகொண்டுள்ளனர், கூடவே அரசு அதிகாரிகளும் சேர்ந்து பிராடு செய்வதுதான் கொடுமையிலும்  வேதனை,,

   தன் கண் எதிரே தேர்வு எழுதிய 11 லட்சம்பேர்களின் குரல்வளை நெரிக்கப்பட்டபோது அதை இன்னும் வேடிக்கை மட்டுமே பார்த்திட்ட கையாலாகாதவனாகிப்போன நான் சில துக்க வேதனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்கின்றேன்.

    சின்னவீடு வைத்துள்ள சில ஆசிரியர்கள் செய்த மோசடியால்  அரசு வேலை கிடைக்குமென  பல இரவுகளை தொலைத்துவிட்டு இப்போது பல  பல ஆயிரம் பணமட்டுமல்ல பலபேர் வாழ்வை இன்று கேள்விக்குறியாக மாற்றிவிட்டார்கள் இந்த கேடுகெட்ட, துப்புகெட்ட, மானங்கெட்ட, அறிவுகெட்ட, காசுக்கா கட்டிய மனைவியின் தாலியைகூட திருடும் வேலையைகூட செய்ய துணிந்த  சில அரசியல்வாதிகளும்  அதிகாரிகளும்,  ஆசிரியர்களும்

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைகிராம எழுத்தறிவில்லா 5 இளம்பெண்களை அதுவும் கர்பிணி என்றுகூட பார்க்காமல் காவல்நிலையத்திற்கு கூட்டிவந்து கொடூர மிருக எண்ணத்தோடு கற்பழித்தனர் காவல்துறையில் இருக்கும்  சில காம கருப்பாடுகள்


    அதற்கு நிவாரணமாக  பாதிக்கபட்ட அந்த 5 மலைகிராம பெண்களுக்கு அரசு 5 லட்சம் பணம் கொடுத்துள்ளது. என் கேள்வியெல்லாம் டில்லியில் மீண்டும் சிறைக்கு போகப்போகிற கனிமொழியை இதற்கு முன்பு சிறையில் இருந்தபோதும், ஒருவேளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் இனிமேல்  ராஜாகூட ஜோடியா தில்லி தீகார் சிறைக்கு போவதாக வைத்துக்கொள்வோம்  கனிமொழியை தில்லி சிறையில் இருக்கும் காவல்துறையில் இருப்பவர் ஒருவர் கற்பழித்துவிட்டால் 5 லட்சம் பணம் கொடுத்தால் சட்டத்திலிருந்து விட்டுபட்டுவிடலாமா இதை  இந்த நீதித்துறையும்,

   அடுத்த வீட்டு ஆயா அதிகமாக ஒன்னுக்கு போனாகூட அதற்கொரு கண்டனம் தெரிவிக்கும் கருணாநிதியும் ஏற்றக்கொள்வாரா?
என்னால் நிம்மதியாக நித்திரைகொள்ள முடியவில்லை........... 

என் வீடு அருகே இரவினிலே இதமான தென்றல் காற்று வீசினாலும் ஏனோ உறக்கத்திற்குகூட இறக்கம் இல்லாமல் போய்விட்டது எத்தனை கனவுகளுடன், எவ்வளவு முயற்சியுடன் அரசு வேலைக்காக படித்தோம் அவ்வளவும் வீன் போய்விட்டதே என

    கேள்வித்தாள் வெளியான விசயத்தில்  அலசி ஆராயும்போது படித்த சின்ன வீடு வைத்துள்ள கல்லூரி ஆசிரியர் முதல்கொண்டு காவல்துறையில் இருக்கும் கருப்பாடு வரை இதில் தில்லுமுள்ளு செய்து பலகோடி ஆதாயம் பெற்றதை  பார்க்கும்போது இனி உயிரை விட மானமே பெரியது என இப்படி பலர் வாழ்வை கேள்விக்குறியாக்கிய ஆசியர்களின் குறள்வலையை கடித்து மென்று துப்பிவிட்டு வருடம் முழுவதும் சிறையில் காலம் கழித்துவிட தோன்றுகிறது ஏனோ என் மனம்

   என் வாழ்வைகூட கசப்பும் ஓர் சுவையாக மாற்றி எதிர்காலத்தைபற்றி நெஞ்சு நிறைய பல கனவுகள் வைத்திருந்தபோது  அத்தனையும் வீன் போய்விட்டது அதுதான் என் வேதனை


    என் வாழ்க்கை பயணம்  மரணம் வாழ்வில் சற்று தூரமாக இருந்தாலும் ... ஏனோ விரும்பா பயணமாய் இப்போது உயிர் பிரிவை கேட்டு நச்சரிக்கிறது இந்த கொடுமையான தேர்வு தில்லுமுள்ளு வேலையை நினைத்தும் கடன் வாங்கி தேர்வுக்கு செலவு செய்ததையும், அதை மீண்டும் செலுத்தமுடியாத சூழ்நிலையில் இருப்பதை  நினைத்தும்,


இந்த தேர்வுக்காக இரவுக்கும் பகலுக்கும் இடையே ... 

எனக்குள்  படித்து தொலைந்த நாட்களை எண்ணி இப்போதும் தொலைத்துக்கொண்டிருக்கின்றேன் நான் பல நாட்களை  வேதனையோடு அதான் உண்மை,,,

    காலத்திடம் சண்டையிடும் திறமையில்லாமல் கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் இழுத்து பிடித்து இரவு, பகல் பாராமல் படித்தது அனைத்தும் வீன் போய்விட்டது பல ஆயிரம் பேர்களின் நேரமும், பணமும் இதற்கு யார் பதில் தருவார்கள்? யார்தான் பொறுப்பு? 

மூங்கிலை துளைத்தால்  அது  புல்லாங்குழல் ஆகுமாம்
தேக்கு இழைத்தால் அது வீணையாகுமாம்

உளியில் சிதைபட்டால் அது சிற்பம் ஆகுமாம்

   ஆனால் தமிழ்நாட்டில் வாழ்க்கை கல்வி போதித்து நல்ல அறிவு, நெறி தவறா வழி முறைகள், நல்லொழுக்கம் சொல்லிக்கொடுத்து பல அறிவி ஜீவிகளை மனித பூமியில் உருவாக்கித்தருகின்ற    ஆசிரியர்கள்  தேர்வு நெருங்கும் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு
4 லட்சம் வரை விடைத்தாள் தொடர்பாக பேரம் பேசியபோது 
என் உடலோ பூகம்பமாய் குலுங்குகியது
என் மனக்குமுரளோ எரிமலையாய்  வெடித்தது

       இது என்ன அரசு,  என்ன நிர்வாகம், இதில் எத்தனை ஓட்டை, இப்படி கேடுகெட்ட சில அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகள் ஆசிரியர்களும் எச்சில்தனமாக காசுக்காக கழிவரையில் இருந்து..........கூட தின்ன துணிந்தவர்கள் வாழுகின்ற கேடுகெட்ட தமிழகத்தில் ஏன் தமிழனாக பிறந்தோம் என வேதனைப்படுகிறேன் வெக்கப்படுகிறேன் நான்........

      மன்னிக்கும் குணம் உடைவர்களுக்கு கண்டிப்பாக இதய நோய் வராதென தற்போது அமெரிக்க மருத்தவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் அரசு வேலைக்காக தற்போது தேர்வு எழுதிய லட்சோப லட்சம் பேர்களுக்கு மன்னிக்கும் குணம் இல்லாமல் இதய நோய்மட்டுமல்ல கோபத்தோடு பிராடு செய்தவர்களை கொலைகூட செய்யும் எண்ணங்கள்  இனிமேலும் ஒருபோதும் உருவாக்க வேண்டாம் தயவு செய்து ஆட்சியாளர்களும்,  அதிகாரிகளும் 

நன்றி: சிகா, உங்களின் கருத்தும் எண்ணங்களையும் சொல்லுங்க 9047357920