Monday 12 March 2012

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!
                      
          நான் வைத்திருக்கும் தென்றல் கணினி கலைக்கூடம் எதிரில் டாஸ்மாக் அரசு சாராயக்கடை இருப்பதால்
                             
           அதிகாலையிலிருந்தே டாஸ்மாக் கடைவாசலில் காத்துக்  கிடந்து காப்பி குடிப்பது போல விஸ்கி, பிராந்தி குடிக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு வானலாவிய  கோட்டை கட்டி கொடிகட்டி  நாகரிக உலகிற்கு முன்னோடியாக வாழ்ந்த எம் தமிழினத்தை  இன்று போதை எனும் மயக்கத்தினால், மதியை இழக்க வைத்த அரசியல்வாதிகளால் தன் இனம், மொழி, கலாச்சாரம் இவையனைத்தையும் குற்றுயிரும் குலையுயிருமாய் குழிதோண்டி புதைகுழியில் புதைத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்

              இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுத்து வாழவைப்பது தமிழனின் குணம் என்பதாலும், நல்ல சிந்தனைகளோடு, வாழ்வில் தமிழர்கள் முன்னேற வேண்டும் எனவும், அறிவை வளமாக்கும்  பலவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொண்டு, தமிழர்கள் வளமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் அறிவை பிறரிடமிருந்து கற்று மகிழ்வது எல்லாவற்றையும் விட மேன்மையானது என்ற குறிக்கோளுடன் எனக்கு எட்டிய அறிவோடு சில  பதிவு எழுதி வருகிறேன்   இணையத்தில்.

                தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளின் குறைகளையும் சுட்டிகாட்டி தவறுகளை திருத்திக்கொண்டு தமிழர்கள் வளர்ச்சிக்காக இனிமேலாவது உருப்படியாய் எதாவது செய்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையுடன்

        இன்றுவரை  நெஞ்சினிக்க வாய் திறந்து தன் வசீகர பேச்சால் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இலங்கை கொலைகாரனுக்கு உதவிய குறளுக்கு  குறளோவியம் தீட்டிய  வாழுகின்ற வள்ளுவர் கருணாநிதி, தான் எழுதிய ''கள்ளுண்ணாமை''   எத்தனை தமிழ்சாதிக்கு பின்றபற்ற வழிவகை செய்திருப்பார் என்பது அவரின் மனசாட்சிக்குமட்டுமே வெளிச்சம்

      தரகர் கலாம், சுப.வீ, வீரமணி, சீமான் ,ஜெயலலிதா, போலி கம்யூனிஸ் கையேந்திகள் இப்படி பல அயோக்கியர்கள் அங்கம் வைக்கும் கூடாரமாகிப்போன அரசியல்வாதிகளைப்பற்றி குறைகளை விமர்சித்து பதிவு எழுதி வருகிறேன்

தோட்டக்காரன் சும்மா இருந்தாலும்
தொன்னை நக்குரவன் சும்மாஇருக்கமாட்டானாம்
                                                           என்ற கதையாய் 

           கலாமின் சில கைத்தடிகளும், வாழும் வள்ளுவர் என சில புள்ளுருவிகளால் இன்றும் புகழப்படுகின்ற கலைஞரின்  கழக உடன்பிறப்புகளும், என்னுடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு இரவு பகல் பாராமல் பல தடித்தனமான வார்த்தைகளால் திட்டுவதை தவிர்த்துவிட்டு பல ஆதரத்துடன் நேரில் விவாதிக்கலாமே அல்லது  என்னுடைய பதிவுக்கு பல ஆக்கபூர்வமான மறுப்பு பதில் எழுதுங்கள் அதையும் மீறி எனது பதிவு உங்கள் மனதுக்கு மனம் வருந்தும்படியாக இருந்தால்

காவல்நிலையத்தில் புகார் செய்யலாமே

      காரணம்  சிறை என்பது  வரண்டுபோன என் இதயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இதமாய் பழுதுநீக்குவதற்கு பயிற்சி பட்டரையாகவும், வெறும் இருளை மட்டுமே துணையாய் வைத்துக்கொண்டு என் தமிழ்சாதியை வளர்த்தெடுக்கும் ஓர் சிற்ப கூடமாய் சிறை என்பது நிறைவான  இடமாக  கருதுபவன்  நான்

       புளியம் பூவாய் என் மனது உதிர்ந்துபோகாமல் மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்த இடர்களையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் கலையை கற்றுக்கொடுத்துவிட்டது எனக்குள் ஈழத்தின் நிகழ்வு. எனது முயற்சி தொடங்கியாயிற்று தாமதமாகவே என்றாலும்

இன்றைய பத்திரிக்கைகள்
      
      காமம் தலைக்கு ஏறும்படி பல சமுதாயத்தால் எடுத்துக் கொள்ளாத மயக்க வழி காட்டி பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் கொஞ்ச நாட்களாகவே  ஐஸ்வர்யாவுக்கு பிறப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என பரிசுபோட்டிகள் நடத்துகின்றன   பத்திரிக்கை சுதந்திரம்தான் இப்படி கேவலம் என்றால்

திரைப்படம் ஊடகம்

அறிவுக்குப் பொருந்தாத, பல ஆபாசக் கதைகளைச் சொல்லி திரைமறைவில் நடக்க வேண்டியதை திரையில் போட்டுகாண்பித்து   ஆண்டுக் கணக்கில் மனித மூளையை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றது

               கல்லூரி முடிக்குமுன்னே கண்டதையும் பார்த்து  எதிர்கால கனவுகளை மறந்து ........ எல்லாமே முடித்துவிடுகிறார் தனது இளம் வாலிப வயதில் அனைத்தையும் கற்றுக்கொள்ளக்கூடிய  ஒரு காம பள்ளியறையாக மாறிவிட்டது இன்றைய திரைப்படம்.

                  குஞ்சு மிதித்து கோழி முடமானதாய் முதியோர் இல்லங்களை துவக்கின்ற வாழ்க்கை  மாறிவிட்ட நிலையில்

     பத்து பைசா வட்டிக்கு கடன் வாங்கி உச்சி வெயிலில் கூலி வேலை பார்த்து கல்லூரிக்கு அனுப்பி வைத்த அம்மா தன் மகனைப்பற்றிய எதிர்கால ஆசை கனவெல்லாம் தூள் தூளாகி போய்விட்டது. ஆம் சமீபத்தில் பலர் 10வருடங்களுக்கு முன்பு M.Sc. M.Phil. M.PEd  படித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருக்கின்ற நிலையில் போன வருடம் B.Sc., படித்துவிட்ட தொடர்ந்து இந்த வருடம் M.Sc., படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்கள் பல லட்சம் பணத்தை கொடுத்து அரசு வேலை வாங்கிவிட்ட கொடுமை தமிழகத்தில்தான் நடந்துள்ளது.
                   
      இன்னும் 25 வருடத்துக்குள் தமிழ்மொழி முற்றிலுமாக அழிந்துவிடும் சூழலில்  அரசு வேலை பார்க்கின்ற அனைத்து அரசு பணியாளர்களும் தன் பிள்ளைகளையெல்லாம் தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு ஒரு வருடத்தில் சாப்பிட்டதை 3 மணிநேரத்தில் வாந்தி எடுக்க சொல்வதாய் சமுதாய வளரச்சிக்கும் தமிழ் இன வளர்ச்சிக்கும் ஒவ்வாத முறையில் கல்வி முறைகளை மாற்றினால் மட்டுமே சொற்ப தமிழினம் தழைக்கும்என்பதை  நாம் அனைவரும் அறிந்தாக வேண்டும்.

   தமிழ் மக்களை வழிநடத்துகின்ற அரசியல்வாதிகள்

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை!  என்ற கதையாய்
                        என் தமிழ்சாதிக்கு   

     ஆடு, மாடு, கோழி, டீவி, கிரைண்டர், மிக்சி  போன்ற இலவசங்களை கொடுத்துவிட்டு  அறிவித்த இலவசங்கள் தருவதற்கு இப்போது கிராமம்தோறும், வீதிதோறும்  டாஸ்மாக் கடைகள் திறப்பதில் அரசு மும்முரமாக இருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆடு, மாடு, கோழி, மிக்ஸி, கிரைண்டர்  நிச்சயம் உத்தரவாதமாக உண்டு என்பது போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரனை உருவாகியே தீருவோம் என்ற அம்மாவின் பொற்கால ஆட்சியை என்னால் புகழாமல் இருக்க முடியவில்லை.

                        பெற்ற அப்பனை முழு குடிகாரனாக்கிவிட்டு பிள்ளைக்கு சத்துணவில் வாரத்திற்கு 4 முட்டைகள் வழங்கிவிட்டு கனவனை முழு குடிகாரனாக்கி கொஞ்ச கொஞ்சமாக சாகடித்துவிட்டு மனைவிக்கு  மாதந்தோறும் விவதைகள் உதவித்தொகை மற்றும் இலவச சேலை வழங்குவது  யாருக்குத்தான் பெருமை தாயுள்ளம் கொண்ட  முதல்வரிடம் யாராவது எடுத்து சொன்னால் மிக்க நன்றி

                  மாநிலம் முழுவதும் 7,696 மதுபானக் கடைகளை திறந்து, அனைத்து 'குடி'மகன்களுக்கும் 'தண்ணீர்' தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தேவையான அனைத்து முனைப்புடன் செயல்படும் அம்மாவின் பொற்கால ஆட்சியில் நாமும் வாழ்வதை எண்ணி பெருமை கொள்வோம்.

   டாஸ்மாக் வருமானம் எந்த வகையிலும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அதிகாரிகளின் முக்கிய பணி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7 நாட்கள், பீர்வகைகள் 3 நாட்களுக்கு மேல் கடைகளில் இருப்பு வைக்காத அளவிற்கு மட்டுமே சரக்குகளை அனுப்ப வேண்டும் என சிறப்பாக சுறுசுறுப்புடன் செயல்படும் அரசு கேந்திரத்தை என்னவென்று சொல்வது

       75 லட்சம் பேர் தினமும் மது குடிப்பவர்களாக  தங்களது தினசரி வருமானத்தின் 90 சதவிகிதத்தை குடிப்பதற்கு செலவு செய்து,  தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு விற்பனையாகும் மதுபானங்களின் மதிப்பு  60 கோடி ரூபாய் விற்பனையாகி. தமிழ் மக்களை பலரையும் இன்றைக்கு குடிமகன்களாக ஆட்சியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் மாறி மாறி  அரசே ஊழியர்களை நியமித்து  கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் பெருமை  தமிழக  முன்னால் இன்னால் முதல்வர் அவர்களைசேரும்.

     தாங்கி நிற்க முடியாத அம்மாவின் வருமையால் இன்றும் தமிழகத்தில் பல வீடுகளில்  பல அக்கா, தங்கச்சி தன் வயிற்றில் பிஞ்சு குழந்தை சுமக்க வேண்டிய வயதில்  குடிகார அண்ணன் அப்பாவினால் பல வருடமாக ஜன்னல் ஒரத்தில் தனக்கென ஒரு நல்ல மாப்பிளை வர மாட்டாரா என  ஏக்க பார்வையுடன்  பல முதிர் கண்ணிகள்  வயிற்று பசிபோக்க வயிற்றில் தென்ன பஞ்சு சுமந்து, கயறு தொழில் சாலையில் வேலை பார்ப்பது தாயுள்ளம் கொண்ட இந்த அம்மாவுக்கு  எப்படியாவது தெரியபடுத்துங்கள் எம் தமிழ் உறவுகளே!

        என்னை பெற்றெடுத்த அம்மா நான் வாழும் வாழ்கையை பார்ப்பதற்கு இன்று உயிருடன் இல்லாவிட்டாலும்

            உலகில் எங்கும் நடக்காத அதிசயமாய்  அறிவை வளர்க்கும் கல்வியையும், உயிரை காக்கின்ற மருத்துவத்தையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு சாராயம் காய்ச்சி கொடுக்கின்ற  தமிழக முதல்வர்  அம்மா  இன்னும் என்ன என்ன செய்ய போகிறார்களோ  என நினைத்து அவல தமிழகத்தில் நானும் இருப்பதை என்னி மிகவும் வருத்தப்படுகிறேன்.

      நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும்  புகையை மதுவையும் தாராளமாக்கிவிட்டுமது அருந்தி வண்டி ஓட்டாதீர் என சொல்லும் காவல்துறையின் கையாலாகத தனத்தை தினசரி பாருங்கள் சாலையின் விளம்பரத்தில்

       இன்று தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு எவ்வித முயற்சியும் செய்யாத முதல்வர் செயலலிதாவிற்கு தனது 64வது பிறந்த நாளில் பாரதி கண்ட புதுமை பெண், தாயுள்ளம் கொண்ட அம்மா, மாசியில் பிறந்த மகராசி, தமிழினத்தின் நடமாடும் கடவுள்,  தமிழகத்தின் அதிசயமே வள்ளுவன் நெறிதவறா கலங்கரை விளக்கமே என பல ஆதாயம் பெறும் அரசியல்தடிகளுக்கு நான் எனது கையினால் டிசிட்டல் பேனர் வடிவமைத்து கொடுத்தது கொடுமையுலும் கொடுமை

       இன்று அரசு  பள்ளிகள் பல ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு, மதுக்கடைகள் பல ஆயிரக்கணக்கில் திறக்கப்பட்டுவிட்டன இதன் மூலம் இளைய சமுதாயத்தை குற்றச் சமூகமாக ஆண்ட, அளுகின்ற இன்றைய அரசுகள் முற்றிலுமாக  மாற்றிவிட்டன

 ஏழை மக்களும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள்தோறும்  கல்விக் கூடங்களை திறந்து வைத்த, படிக்காத மேதை காமராஜர் தமிழ்நாட்டில்தான் பிறந்தார் என்பதை மறந்து இன்று பார் ஏலம் எடுத்து நடத்திக்கொண்டிருக்கின்ற பல  கைகூலி காங்கிரஸ்காரர்கள்  நினைவுவைத்துக்கொள்ளுங்கள்.

       ஒரு தனிமனிதனுடைய வளர்ச்சியில் அக்கரை செலுத்தி வாழ்வில் சாதனைகள் புரிய வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத் தலைவரையும் குடிக்கு அடிமையாக்கி, எதிர்கால இளைஞர்களை குடியில் சாலையில் தள்ளாடவிட்ட அவலம் தமிழகத்தில் நிகழ்கின்றது,

நீயும் நானும் சொந்தமாக தயாரித்தால் அது  கள்ளச்சாராயம்
 அதை அரசே தந்தால் நல்லச்சாராயம்

   ஆறு, குளம், குட்டை இவை அனைத்தையும் பராமரிக்காமல் வரப்போகும் கோடைகால தண்ணீர் பற்றாக்குறைகளை பற்றி கொஞ்சங்கூட கவலைகொள்ளாமல் மதுபானங்களிடமிருந்து மக்களை காப்பதைவிட, அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம்  என்ற முனைப்புடன் மாநிலம் முழுவதும் 7,696 மதுபானக் கடைகளை திறந்து, அனைத்து 'குடி'மகன்களுக்கும் 'தண்ணீர்' தட்டுப்பாடு இல்லாமல் இருக்க முனைப்புடன் செயல்பட்ட கலைஞர்  செயல்படுகின்ற தமிழக முதல்வர் செயலலிதா நம் தமிழ்சாதிகள் என்றென்றும் மறக்க கூடாது.

          பல குடும்ப பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை  கொடுத்துவிட்டு எவன் தாலி அறுந்தால் எனக்கென்ன   என்று இரவு 11 மணிவரை மது விற்பனையை நீடித்து பல குடும்ப பெண்களின் தாலியை அறுத்து விதவைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்கின்ற டாஸ்மாக் சாராயக்கடை யை சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருக்கின்ற  இன்னால் முன்னால் முதல்வர்கள் என்றும் தமிழின சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறுவார்கள்.
      
                 இன்று பள்ளிகள் பல ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு, மதுக் கடைகள் பல ஆயிரக்கணக்கில் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் இளைய சமுதாயத்தை குற்றச் சமூகமாக இன்றைய அரசுகள் மாற்றிக் கொண்டிருக்கிறது என்னதான் திறைமையாக படித்த ஏழைகள் பாஸ் மார்க் வாங்கினாலும்  கிளாஸ் பாட்டில் கழுவிடும் வேலைக்குகூட பல  லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் தமிழகத்தில்

 மாண்டுபோன எம்,ஆர்  மீண்டு வந்து இந்த அம்மாவுக்கு சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டடார் . ஆதால் நாம் தான் ஏதாவது செய்தாக வேண்டும்
 
செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுகின்ற  
வேலைய இந்த அரசு செய்தாலும்

   ஏதாவது செய்து இந்த தமிழினம் தழைக்க எதாவது செய்யுங்கள் எம் தமிழ் உறவுகளே.


     இதை படிக்கும் தமிழ்உள்ளங்கள் எதாவது மாற்றுவழி சொல்வீர்கள் என்ற அதித நம்பிக்கையில்

சிகா, லெனின்
கீரமங்கலம்
9047357920

8 comments:

  1. சிகா, லெனின் அவர்களே
    நீங்கள் சொல்லியது எல்லாம் சரிதான்.எத்தனையோ குடும்பம் குடும்பம் kudiyinaal alinthu kondirukkirathu.அரசாங்கத்திற்கு பனிரெண்டாயிரம் கோடி ருபாய் வருமானம் வருகிறது என்று சொல்கிறார்கள்.அந்த வருமானம் நின்று போனால் மாற்று வருமானதிற்கு வழி என்ன ?.மதுவை பூரணமாக ஒழிக்க ஆட்சியாளர்களிடம் உறுதி வேண்டும்.அது இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லை.ஏனென்றால் அவர்களும் மது உற்பத்தி செய்வதில் ஒரு அங்கம் தானே.குஜராத் ல் மது அறவே கிடையாது.அந்த மாநிலம் முன்னேறவில்லை.மதுவினால் கிடைக்கும் வருமானம் இல்லாமலேய அது முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மாற்ற்றம் வரும் என்று நம்புவோம்.

    காசி ராஜன்
    பாண்டிசெர்ரி
    9894363664

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களைப்போல் ஒரு மாற்றம் நிச்சயம் வரும் என எதிர்பார்க்கின்றேன் மேலும் எனக்கு எட்டிய கருத்துக்களோடு இன்னும் பல பதிவுகள் எழுதஉள்ளேன் உங்கள் ஆதரவும் நட்பும் எனக்கிருந்தால் எனது முயற்சிக்கு வலுசேர்க்கும் நன்றி
      சிகா, லெினின்
      கீரமங்கலம்
      9047357920

      Delete
  2. பள்ளிகளில் மின்சார தடையை நீக்க அம்மையாரின் திட்டம்... ஒரு நாளைக்கு ஜெநேரடோர் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.. ஒரு நாள் வாடகைக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வழங்கப் படும்... டீஸல் செலவு தனி... முப்பது நாட்களுக்கு கணக்கு போட்டால் புது ஜெநேரடோர் வாங்கி விடலாமே என்று ஒரு தலைமை ஆசிரியர் யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்... வாழ்க தமிழகமும் வாழ்க இந்த அம்மையாருக்கு ஓட்டு போட்ட கூட்டமும்

    ReplyDelete
  3. தமிழர்களை தொடர்ந்து அரசியல்வாதிகள் தங்கள் சுயநலனுக்காக மழுங்கடிக்கும் வேலைகளை செய்கிறார்கள்.

    இன்றைய சூழலில் தமிழக அரசியல் கட்சிகளில் தொண்டர்கள் அடிமைகளாக வாழத்தான் ஆசைப்படுகிறார்கள்..

    ReplyDelete
  4. தமிழர்கள், தமிழ் இது எல்லாம் நாம்தான் பேசிக்கொள்ள வேண்டும். பணம் கொடுத்தால் எதையும் தின்பார்கள் இந்த அரசியல் பொறுக்கிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துதான் யாதார்த்தமான உண்மை
      கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் நம்ம அரசியல்வாதிகளை இன்னும்
      நிறைய வெளுத்து வாங்கிட காலம் எனக்கு தந்த பரிசாக நினைக்கின்றேன்

      Delete
  5. ஆதங்கமாக தான் இருக்கு...நம்மால் என்ன செய்து விட முடியும்...இதெல்லாம் அரசியல்..அப்புறம் இந்த word verification நீக்குங்கள்...அப்புறம் கமெண்ட் பண்ண யாரும் வர மாட்டார்கள்

    ReplyDelete
  6. nalla muyarchi thozhar.... santhippom..,.....

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..