Sunday 6 January 2013

தமிழர்கள் புதைத்த தமிழ்மொழி

தமிழர்கள் புதைத்த தமிழ்மொழி  

            உலகில் மனித குலம் பேச ஆரமித்த காலம்தொடங்கி தொன்மைதொட்டு புழக்கத்தில் இருக்கின்ற மொழியான  தமிழ்மொழி இன்று நம்மில் யாருக்கும் அக்கரை இல்லாத  சரியான தலைமை இல்லாத காரணத்தினாலும் நம் தாய்மொழியை நாமே  சுடுகாட்டுக்கு பாடைகட்டி அனுப்புகின்ற வேலைகளை சிறப்பாக செய்துவருகின்றோம்  கட்சி மதம் வேறுபாடு இன்றி ஒற்றுமை தமிழர்களாய் நாம்

           அழிவின் விழிம்பில் இருக்கும் தாய் தமிழ்மொழியை மீட்டெடுக்கவோ அல்லது ஒரு மாற்றத்தை உருவாக்குகின்ற அற்புதங்களை நிகழ்த்தவோ தமிழ்மொழி எதிர்கொண்டுள்ள துயரங்களை நீக்குவதற்கோ எந்த அரசியல்வாதிகளுக்கும் துணிவு இல்லை துப்பும் இல்லை இது தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் பொருந்தும்


             இப்போதெல்லாம் நம் தொன்மையான கலாச்சார தமிழ்மொழியை போதிப்பதற்கோ அல்லது கற்றுக்கொள்ளவோ நெறிப்படுத்தவோ யாரும் தலைமையில் சரியான ஆள் இல்லை அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் நான் கோவில் கட்டி கடவுளாக கும்புடுகிறேன்

            நம் தாய்க்கு இணையான நம் தமிழ்மொழியை மதிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மரியாதையாவது செய்வதற்குகூட யாரும் முன் வருவதில்லை நாம்

           நம்  காலத்தில் தமிழகத்தில் பேசப்பட்ட மொழியாக கருதப்போகின்ற சூழலும் நம் தமிழ்மொழியின் சிறப்பை நம் சந்ததியினர் ஒரு காட்சி பொருளாக கண்காட்சியில் வைக்கப்போகின்றார்கள் எதிர்காலத்தில் அதுதான் உண்மையும்கூட

        நல்ல குடிநீர் சுகாதாரமான வாழ்வு மட்டுமல்ல நல்ல எண்ணங்களோடு சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அனுபவிக்க கொடுக்காத சுயநலவாதிகள் ஆகப்போகின்றோம் நாம் அதுமட்டுமல்ல ஆண்டு கணக்கில் காத்திருக்க அவசியமற்றதாக கருதி எம் தாய்மொழியை இப்போதே குழிதோண்டி புதைக்கும் வேலையில் இறங்கிவிட்டோம் நாம் அனைவரும் சேர்ந்தே

    தமிழ்மொழி வளர்ச்சிக்காக நம் தமிழக அரசியல்வாதிகள் என்ன செய்து கிழித்தார்கள்  என்பதை நான் நினைக்கும்போது  பாலைவனத்தில் இருக்குின்ற சுடுநிலமாக என் மனம் சூடாகி வார்த்தைகளால் குமுறி திட்ட திட்டமிடுகிறது அனைத்து அரசியல்வாதிகளை மிச்சமின்றி என் மனம்


      இலக்கியத்தில் பழமை தொண்மையில் பெருமைசேர்த்து சங்கம் வைத்து வளர்த்த எம் மொழி இன்று தள்ளாடி சாகும் நிலைக்கு போக  காரணம் இன்று தன்மகள் மகன்களை ஆங்கில பள்ளியில் சேர்த்துவிட்டு தான்மட்டும் கூலிக்கு மார் அடிக்கின்ற வேலைகளை சிறப்பாக செய்து வருகின்ற தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரசு ஆசிரியர்களும் அரசு அதிகாரிகளும் இது பொருந்தும்

     இன்று இப்படிபட்டவர்கள்தான் தமிழ்மொழியை  முளையிலே அழித்தொழிக்கின்ற வேலையை சிறப்பாக செய்துவருகின்றார்கள்

       தமிழ்மொழியின் சிறப்பைச்சொல்லி தமிழ் உறவுகளிடம் தமிழை பயிரடச் சொல்லிட வேண்டிய பொறுப்பு எந்த அரசியல்வாதிகளிடம் இருக்கு சொல்லுங்கள் பார்ப்போம் நாவில் தவழாத தமிழ்மொழி நாட்டில் எப்படி எத்தனை நாள் உயிர் வாழும்

    குறைந்ததபட்ச மொழி வாழுகின்ற நாட்களை நாம்தான் உறுதி செய்யபோகிறோம்

      இந்த தலைமுறை வாழுகின்ற நாளில் உடலும் உள்ளமும் தளர்ச்சி அடைவதற்கு முன்பாக எம் மொழி இறந்துவிட போகிறது
இன்று கண்களுக்கும் எட்டி கைக்கும் எட்டிய பல அரிய பொக்கிசங்கள் கருவாடாய் மழையில் கிழிந்தும் பழைய புத்தக கடையில்  காப்பியங்கள் பல சிந்தனையை தூண்டும் அறிய பொக்கிசங்கள் கேட்பாரட்டு நாதியற்று கிடைக்கிறது

        இன்று தமிழ்நாட்டில் வெறும் மதிப்பெண் எடுக்கிற இயந்திரமாக மட்டுமே பல மாணவர்களை உருவாக்குகின்றனர் பல தாய் தந்தையர்கள் தமிழ் பேசினால்  தண்டனைகள் மட்டுமல்ல கூடவே ஏளனத்தையும் வெகுமதியாய் தருகின்ற சூழலை கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன இன்றை இளம் சமுதாயத்தினர்களுக்கு

    தன் படங்களை மிடுக்கான தோற்றதுதுடன் வீதியெங்கும் தொங்குகின்ற விளம்பர பதாகையுடன் ஊரை அலங்கரிக்க செய்து கம்பன் விழா பாரதி விழா தமிழாய்வு மைய விழா என பல விழா நிகழ்வுகளை கொண்டாடுகின்றனர் பல அரசியல்வாதிகளும் அறிஞர் பெருமக்களும் ஆனால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஒரு மயிரையும் புடுங்கின மாதிரி எனக்குத் தெரியவில்லை

     எங்கோ உள்வாங்கி பொய்மை நிறைந்து மறைந்துபோன எம் தாய்மொழியை இனிமேல் அடைகாத்து வரஇருக்கின்ற எம் சொந்தங்களுக்கு பெருமை மிகுந்த தமிழமுது விருந்து யார் படைக்கப்போகிறாகளோ தெரியவில்லை,

    நம் தமிழ்பெண்களை மானாட மயிலாட என்று அரைநிர்வாணத்தில் தனது தொலைக்காட்சியில் கலாச்சாரத்தை காவுகொடுக்கும் வேலைகளை செய்கின்ற கருணாநிதி குடும்பதில் கனிமொழி ஸ்டாலின் பேரனுக்கு தமிழ் என்றால் என்னவென்று தெரியாத ஆங்கி கிந்தி பள்ளியில் படிக்கின்றனர் இந்த மொழிகாத்த வீரரின் வாரிசுகள் இதை யாரும் மறுக்க முடியுமா

     இன்றுவரை ராமதாசு மகனுக்கு தமிழல் எழுத தெரியாது என்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்

    பார்க்கும் இடமெல்லாம் தமிழில் பேசினால் கேவலம் என சித்தரிக்கின்ற கொடுரமான நிகழ்வு நடைபெறுவது நம் தமிழகத்தில்தான் நடக்கிறது

       தொடுவானம் உள்ளவரை விரிந்து பறந்துள்ள நம் தமிழ் சொந்தங்கள் பேசுகின்ற மொழி இன்னும் கொஞ்க காலத்தில் மரணிக்கப்போகிறது ஆம் கொஞ்சும்தமிழ் இறக்க நேரிடப்போகிறது

       அதற்குமுன்பாக தமிழில் என்ன நூல்கள் இருக்கின்றன தமிழ்மொழியின் சிறப்பு என்ன தமிழ் வளர்த்த நம் முன்னோர்களின் வாழ்வு எப்படி இருந்தது கூடவே இன்றயை அரசியல்வாதிகள் நம் மொழியை எந்த அளவிற்கு பின்னடைய வைத்துள்ளார்கள் என்பன பல தகவல்களை அடுத்த பதிவில் எழுதவுள்ளேன்

வாருங்கள் இணைந்தே பயணிப்போம்
நன்றி சிகா