Friday 16 November 2012

வைகோவிற்கும்,  நாஞ்சில் சம்பத்திற்கும் போகாத கடுதாசி     - பாகம் 1


           நான் நேற்று தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழனுடைய கலை நுட்ப திறமையையும், உலகிற்கு பெருமை சேர்த்த அறிவுமிக்க தமிழனின் சிற்ப கலையை மிகவும் வியந்து ரசித்துவிட்டு  சற்றே வெளியே வரும்பொழுது கைகளிலோ பிச்சை தட்டுமாய் தெருவில் கைகள் ஏந்தி நிற்கின்ற  இன்றை தமிழர்களின் நிலைமயை நினைத்து வேதனை ஏற்பட்டதனின் வெளிப்பாடுதான் இந்த பதிவு எழுத எனக்கு தோன்றியது,,,

   நம் இனத்தின் அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்து நாம் வாழ்ந்ததற்கான சாட்சியங்களை அழிக்கும் வேளைகளில் சிங்களவன் இருக்கின்றான்

     தன்னலங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றாக சேர்ந்து நம் லட்சியங்களை மீட்டெடுப்பதற்கு பதிலாக எங்களவன் ஒரே கொள்கையில் இருதுருவமென அடித்துக்கொள்கிறான் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று  ஐயகோ? இது என்ன கொடுமை

       அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக எனக்கு தெரிந்து பல அரசியல் கட்சியும் இன்னும் பலர் அரசியல் இயக்கத்தில்  தமிழகத்தில் இருக்கின்றார்கள் ஆனால் மதிமுக, அதற்காக துவங்கப்பட்டதில்லை என்று பெருமை கொண்டிருந்த எனக்கு மிக அதிர்ச்சி செய்தி நீங்கள் இருவரும் சண்டையிடுவது

         தமிழ்நாட்டில் இன்று அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என துவங்கிய மதிமுக கட்சி இன்று இளம் சமுதாயத்தையும்,  எம் தாய் தமிழீழ தாய்நாட்டிற்க்காகவும், நமது உரிமைக்காகவும்  நாம் உலக அரங்கில் நமக்கான பாதையை நாம் கடந்து முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இன்று உள்ளோம். இத்தருணத்தில் இப்படி இவர்கள் நடந்துகொள்வது மனதிற்கு வேதனை அளிக்கிறது

           மேலும் தமிழக அரசியலில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சி பாதைக்கு  உங்களை போன்ற  தலைசிறந்த  தலைவர்களும் தேவை என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை ஒருபோதும் நாம் மறுக்க  முடியாத உண்மைம்கூட,,,

            நாகரிக உலகில் மனிதன் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து தமிழனுக்கு தமிழன் எதிரியாகவும் நம்பிக்கை துரோகியாகவும் இருப்பதினால்தான் இவ்வளவு பின்னடைவு என்பதனை ஈழ விடிவின் அச்சாணிகளான உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை


             செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை என்பார்கள். ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அப்படிபட்ட  பக்குவபட்ட மரமாக திகழும் உங்கள் கட்சி  உலகில் எந்த மூலையில்   எந்த மனிதனுக்கும் எந்த இன்னல்கள் வந்தாலும் அதற்காக சுயநலமற்று போராடுகின்ற கட்சி மதிமுக, ஆனால் அப்படிபட்ட மதிமுக எனும் விருச்ச மரம்  இன்று ஆனிவேர் நீயா?  நானா?  என்ற நோயால் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்றால் அது மிகையல்ல ,

             தமது சுயநலத்திற்காக மனித நேயத்தை மண்ணிற்குள் புதைக்கும் விந்தையான மனிதர்கள் நிறைந்த இப்பூவுலகில் நீங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் எதையும் நாகரிகத்தோடு எதிர்கொள்ளும் வலுவிழந்தோர்  என்ற பாராட்டினை பெற தகுதியை பெற்றுவிட்டீர்கள் என்பது வேதனைதான் எனக்கு

          நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதாலும் அதனால் ஏற்படும்  காயங்களை தனக்கு ஆதாயமாக்கி  சீழ்பிடிக்க வைத்தும் சுகம் காண துடிக்கிறது ஒரு கூட்டம் கொள்கை முழக்க வீரர்களே? இது உங்களுக்கு தெரியாதா முக்கிய செய்தி  என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் இத்தருணத்தில்,

வரப்புயர நீர்  உயருமாம்
நீர் உயர நெல் உயருமாம்
நெல் உயர குடி உயருமாம்
எல்லாம் உயர்ந்து  செழித்த மதிமுக வயலில் பிரிவு எனும் பூகம்பம் ஏற்பட்டது தமிழனின் சாபக்கேடுவோ என்னவோ

           ஒரே கூரையின் கீழ்  இரு வாழ்வா?  அப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை இப்படியான வாழ்வின் போது  உங்களுக்குள் நீங்களே தரம் தாழ்த்தி பேசிக்கொள்வதில்  எவ்விதத்தில் ஞாயம் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் எங்களுக்கு

           நீங்கள் இப்போது எடுத்திருக்கின்ற இந்த தவறான  முடிவு எனக்கு மட்டும் என்பதல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் தயவுசெய்து இது மறுக்க முடியாத உண்மையும்கூட,,,

         உண்மையில் வாய்வீச்சு போராட்டம் தான் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது .அவனவனுக்கு தூக்கம் வர்ற வரைக்கும் தான் வீரம்.அடுத்தநாள் வேலை,பிள்ளை குட்டி அவனவன் பொழைப்பு... என்று மாறிப்போன யுகத்தில் நீங்கள் இருவரும் இருக்கின்றவர்களை இணைந்து செயல்பட்டு துடிப்பான இளைஞர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக அரசியல்செய்வதற்கு வக்கற்றவர்களாக இருப்பதை எண்ணி வருத்தம் அடைகிறார்கள் தமிழக மக்கள்


தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டாலும்
சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்குமாம்
பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்க
அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய வைத்த வீரம் இன்று கூனு குறுகிவிட்டது உலக அரங்கில் நீங்கள் சண்டையிடும் காட்சி

குறிப்பு பாகம் 2ல் சற்றே சூடாக இருக்கும்

நன்றி உங்கள் கருத்தும்,
என்னோடு  கோபமும் பகிர்ந்து கொள்ள
சிகா
9047357920

Saturday 3 November 2012

நீங்க யார் பக்கம் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

கரையான்களாய் அரிக்கிறது என் மனசு .....

 குறிப்பு° இதில் சொல்லப்படும் கருத்துக்களில் இருந்து திரு, வை,கோ அவர்களுக்கு பொருந்தாது அவர் இதிலிருந்து தள்ளிவைக்கப்படுகிறார்


கையின்றி காலின்றி
ஈழத்தில் எம் உறவுகள்
யாருமே உயிரின்றி! சிதறிக் கிடந்தபோது
எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்து கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தபோதும்
எம் இன விடுதலைக்காக எதிரிகளின் ஒரு மயிரைக்கூட புடுங்க கூட தகுதியற்ற சூடு சொரணை வெக்கம் மானம் இல்லா கேடுகெட்ட தமிழக அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில் இன்னும்
புற்று வைக்கவில்லையே என்ற ஏக்கம் கலந்த ஆதங்கத்துடனும்


தமிழகத்தில் கட்டவிழ்க்கப்பட்ட கடத்தல்களுடனும
திட்டமிடப்பட்ட சித்ரவதைகளுடன் கூடிய கூலிப்படை கொலைகளும்
கணக்கில்லாமல் நடந்துகொண்டிருக்கின்ற இத்தருணத்தில் 100 ஆண்டு சாதனைகளை 1 வருடத்தில் செய்ததாக பீத்திக்கொண்டு வெட்கம் கெட்ட நாய்கள் மேடையில் பேசுவதை கேட்டபின்பே இந்த ஆதங்க கிருக்கல் எழுத தோன்றியது என் மனதில்,,


பணத்திற்கு ஆசைகொண்டு பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவா என்று  பண்பாட்டை மறந்து கொஞ்சம்கூட கவலை இல்லாமல் கல்வி எனும் காசுபார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்


கல்தோன்றா காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று சுடுகாட்டிற்கு எம் தமிழ்மொழியை பாடை கட்டி தூக்கிச்செல்லும் வேலைகளை சிறப்பாய் செய்யுதும் தன் பிள்ளைகளை தனியர் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசு சம்பளம் வாங்கும் பெருமைமிக்க ஆசிரியர்கள் மறுபக்கம்


நமக்கென்று ஒரு நாடு தமிழனுக்கென்று ஒரு தேசம் என வீர களமாடிய எம்
இனம் இன்று பேசமுடியா முண்டங்களாக முள்கம்பிக்குள் முடங்கி
யாரும் கேட்பாரற்று முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட தகுதியற்ற முடவனாய் மறு பக்கம்



டெங்கு எனும் காய்ச்சலில் தமிழகத்தில் பல பஞ்சிளம் பிள்ளைகள்
இதோ பாருங்கள் என பாடையில் ஒரு பக்கம்
கட்டிளம் காளைகள் அரசு மதுக்கடையில், கஞ்சாவின் பிடியில் அடுத்த பக்கம்

வேலி என்று வேஷம் போட்டு
பயிர்களையே நாசம் செய்யும்
வெள்ளாடை போட்டுக்கொண்டு
வெட்கமின்றி மக்கள் சொத்தை
வெறியோடு ஆட்டைய போடும் அறிவற்ற மண்முட்டி ஓநாயி
குற்றவாளியாய் தேர்ந்தெடுத்த குற்றத்தை செய்துவிட்டோம் என தன் மனசாட்சியை வருந்தும் கூட்டம் மற்றொரு பக்கம்


மறதி எனும் வழிமுறைகளை வழக்கமாய்
புதைக்க தெரிந்த நமக்கு
இலகுவாய் கிடைக்கிறது இலவசம் என்று பேன் மிக்ஸி கிரைண்டர் என ஏங்கிடும் பாமர மக்கள் மறுபக்கம்

         தமிழகத்தில் நான் என்று அகந்தையில் பலரும் பொய்கள் பல பேசி மற்றவர்களை எமாற்றி அன்பு கருணை பாசம் ஈகை தொண்டு இல்லாதவர்களாகவும் நம்பிக்கைத் துரோகிகளாகவும் மனிதநேயத்தை அழிந்துகொண்டு பாச உணர்வுகளும் இயல்பான நல்ல நெறிமுறைகளை மதிக்காமல் இவைகளை புதைத்துவிடும் கூட்டம் மறு பக்கம்

பணமே கதி பணமே குறி பணமே வாழ்க்கை என்று
சமுதாயத்தை சீரழிக்கும் கனவுகள் வளர்த்துவிட்டு அளவோடு ஆசைப்படு என்பது மாறி அத்தனைக்கும் ஆசைப்படு என்ற பாதைக்கு வழிகாட்டும் பெற்றோர்கள் மறுபக்கம்


அது மட்டுமல்ல தமிழகத்தில் யாருக்கு என்ன நடந்தாலும்
நமக்கென்ன இருக்கின்ற மக்கள் மறுபக்கம்

இப்படிபட்டவர்கள் நிறைந்து வாழுகின்ற இப் பூமி பந்தில்
நீர்ச்சுழலில் சிக்கிய சருகாய்
வாழ்வின் முகவரியை தொலைத்து
வேறு வழி தெரியாத முடிவுகளுடன் நான் ஒரு பக்கம் இருந்தாலும்

காயப்பட்ட உள்ளமாய் இந்த சமூகத்தை நினைத்து
கண்களில் காணல் நீராய் தினம் தினம் வருகின்ற
கண்ணீர்த் துளிகளை துடைத்துவிட்டு


அநீதிகளை அம்பலபடுத்தும் ஆயுதமாய் எனது கேனக்கிருக்கன் வலைப்பூ இனி இருக்கும்  அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை உள்ளுக்குள் புதைத்துவிட்டு வாருங்கள்,,,


               எம் போராளிகளின் உயிர் தியாக வேட்கை உறங்கி போய்விடக்கூடாது
உணர்வுகளும் உரிமைகளுக்காக இனி கதறி அழுதது போதும்
கேடு கெட்ட தமிழக அரசியல்வாதிகளை நம்பி கலங்கி நின்றது போதும் இனியாவது நாம் இணைந்து ஒரு மாற்ற வழி காண ஏதேனும் வழி கிடைக்காத என ஏங்கிடும் உணர்வுமிக்க தமிழனாய் கேட்கிறேன் ,,வாருங்கள் இணைவோம் தமிழர்களாய்

        ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் மொழி மட்டும் இளமையாகவே இருக்கும்.. அந்த அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை..

          தமிழ் மொழியின் இணையான கூறுகளாக முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

**அப்படிப்பட்ட தமிழனின்,
கலாச்சாரம்
வாழ்க்கை முறை
கல்வி
கணிணித்திறமை
தனித்திறமை
விளையாட்டு
காதல்
வீரம்
கவித் திறன்
அனைத்தையும்
விவாதிக்கலாம்..
நல்ல சிந்தனைகள், வாழ்வில் முன்னேற உதவும் படைப்புகள், இன்னும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே..வாங்க

நன்றி
சிகா,
9047357920