Friday 6 January 2012

இன்னைக்கு நம்ம சீமான் நாளைக்கு நம்ம வை,கோவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

         3 வருடத்தில் நான்காவது முறையாக சிறை செல்லுவதற்கு முன்பு கேரளா முத்தூட் பைனான்ஸ் கம்பெனியை உடைத்த வழக்கில் முன்ஜாமின் பெற முடியாமல் என்னை வரவேற்க சிறை காத்திருக்கின்ற இந்த வேளையில் தலைமறைவு வாழ்க்கையோடு என்மேல் தவறு இருக்குமானால் உங்களின் விவாதத்தின் வழியாக என்னை திருத்திக்கொள்ளவும், சம்பந்தபட்ட திரு, வை,கோ திரு, சீமான் போன்றவர்கள் தவறை புரிந்துகொண்டு எதிர்காலத்தில் ஒரு வளமான அரசியல் செய்வார்கள் என்ற புதிய நம்பிக்கையோடு இணையத்தில் இந்த பதிவு

தலைநகரம் சினிமா பட காமெடியில்

வடிவேலிடம் அவர் அப்பா சொல்லுவார் டேய்.. நீ.... எங்கே போனாலும் சிக்கி, சீரழிஞ்சு, சின்னா பின்னாமாகித்தான்டா வீட்டுக்கு வருவே,,, நிச்சயம் நீ வந்துதான்டா ஆவே,,, அப்படி வெளியூர் போய் சிக்கி, சின்னா பின்னமாகி, உயிருக்கு பயப்படும்போது இது உனக்கு உதவுமுடானு ஒரு பெட்டியை கொடுப்பார்

அதுபோல் என்னையும் என் அப்பா பொழைக்கிறதுக்காக ஒரு கம்ப்யூட்டர் பெட்டி வாங்கி கொடுத்துவிட்டு நீ....நாம் தமிழர்ன்னு, வை,கோ ன்னு, தமிழ், தமிழர்ன்னு போரே ஆனா.... நான் சொல்லுரேன்டா நீ..... சிக்கி சின்னபின்னமாகி கையில் சல்லி காசு இல்லாம நடுத்தெருவில் நாய்போல் நக்கிகிட்டுத்தான்டா இருப்பே, இருக்கனும் இதுதான் உன் தலையெழுத்து அப்ப தெரியுமுடா உன்னை காப்பாற்ற எந்த சீமான் வருவானு இந்த தென்டச்சோறு போடுற அப்பனோட அருமை அப்ப தெரியுமுனு பிரபல ஜோதிராக இருப்பதாலே என்னவோ சரியாக சொல்லிச் சொல்லி அளுத்துப்போய்,,,கடைசியில்


மாடு கெட்டால் தேடலாம்
மனிதர் கெட்டா தேடலாமானு அப்படியே விட்டுட்டாரு


தமிழகத்தின் அரசியல் என்பது பொதுவாக அ,இ,அ,தி,மு,க,     தி,மு,க, இரண்டுமே 5 வருடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி தன் குடும்பமும், தன்னை சுற்றியுள்ள உறவுகளும் ஊழல் மற்றும் அபகரித்தோ அல்லது அராஜகத்தின் மூலமாகவோ பணம் அறுவடை செய்வதற்கும் கட்சியை ஒரு மிசினாகவும், தன்னை முன்னிலைப்படுத்த பயன்படும் ஓர் தொழில்கலைதான் அரசியல், மற்றபடி எவ்வித மண்ணாங்கட்டி சேவையும் கிடையாது,

வடக்கு பார்த்த மச்சு வீட்டைவிட
தெற்கு பார்த்த குச்சு வீடே மேல்
என்பதைப்போல்

நானும் பல கட்சியில் இருந்து பார்த்துவிட்டேன் ஒன்னும் சரிப்படல எங்க அப்பா திட்டுற மாதிரி நானும் இன்னும் உருப்படல
தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் எனும் ஊரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை பலமுறை சொல்லியும் மூடாமல் இருந்தபோது தமிழ் உணர்வாளர்கள், நாம் தமிழர் பேரியக்கத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி 2/12/2011 அன்று பொதுக்கூட்டம் நடத்தினர் அதில் பேசிய மாநில பேச்சாளர்கள் மற்றும் பல பேச்சாளர்கள் பேசிய போது நீ அனையில் கை வைத்துப்பார் நாங்கள் உன் குரல்வளையில் கை வைப்போம் என பேசியும் நீ காலையில் முத்தூட் பைனான் -ஸை திறந்துபார்  சுக்கு நூறாக உடைத்தெரிவோம் என வீர வசனம் பேசினர் மறுநாள் வழக்கம்போல் முத்தூட் பைனான்ஸ் திறந்திருக்கும்போது முதல்நாள் மேடையில் வீரவசனம் பேசியவர்கள் யாரையுமே காணவில்லை,

ஒருவேளை குறைக்கிற நா.... கடிக்காதோ என்னவோ  எனக்குத்தெரியவில்லை.

முயலை கிளப்பிவிட்டுட்டு
 நாய் ஒன்னுக்கு போன கதையாய்

ஏனோ நான் மட்டுமே மூடச்சொல்லப்போய் அவரும் திமிராய் பேச நானும் கண்ணாடியை உடைத்திட.  நான் மட்டும் பிரச்னையில் சிக்கியபோது உணர்ந்துகொண்டேன் அங்கே கேரளாவில் எதிர்கட்சி ,ஆளும் கட்சி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரும் ஒன்றாக கைகோர்த்து அனையை உடைக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பும் வேலையில் நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன் ஆளுக்கொரு பாதையில் போகின்ற நம் தமிழக அரசியல்வாதிகளை நம்பி போவது மிகப்பெரிய குற்றமென......

செந்தமிழன் சீமானிடம் எனது கேள்வி

தமிழகத்தில் இருக்கின்ற எல்லா கட்சியைப்போல் நீங்கள் தலைமையேற்றுள்ள நாம் தமிழர் கட்சியில் சீமான், பிரபாகரன் என்ற மாஸ் -யை பயன்படுத்திக்கொண்டு, சுய விளம்பரத்திற்காக ஊருக்கு ஊர் மிகப்பெரிய கோஸ்டி பூசலோடு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
நான் பெரியார் பேரன் என மூச்சுக்கு 300 முறை சொல்லும் நீங்கள் பசும்பொன் நினைவிடத்தில் முத்துராமலி்ங்கம் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றது ஏன்?


    நாம் தமிழர் பேரியக்கத்தில் ஊருக்கு ஊர் பல கோஸ்டிகளை அமைத்துக்கொண்டு இருக்கும்போது என்னைப்போன்றோர்களை ஜாமீன் எடுப்பதற்கு கூட வக்கற்ற நாம் தமிழர் பேரியக்கம் இனி ஈழத்தைப்பற்றி பேசி என்ன செய்ய உத்தேசம்

    மாவட்டத்தில் கலந்தாய்வு அல்லது ஒரு பொதுக்கூட்டம் என்றால் நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பின்பு மறுநாள் செய்தித்தாளை பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் நான் நாம் தமிழர் பேரியக்கத்திற்கு உண்மையாய் உணர்வாய் பணியாற்றும் என்னைப்போன்ற கேனக்கிருக்கனை வைத்துக்கொண்டு எப்படி கடல் கடந்த தமிழ் தேசத்தை உருவாக்க முடியும்

     தற்போது நீங்கள் வழி நடத்துகின்ற நாம் தமிழர் பேரியக்கத்தில் சரியான அனுகுமுறை இல்லாததினால் நீங்கள் முதன்முதலில் இயக்கம் தொடங்கியபோது  இருந்த பல பேர் இப்ப இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

உயிரோடு வாழுகின்ற எந்த ஒரு அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக கூசா தூக்கிகிட்டு ஜால்ரா அடித்தால் மிகவும் கேவலமாக போய்விடுவோம் என்ற உண்மை தத்துவத்தை அவ்வப்போது நடைமுறையில் உணர்த்திய வை,கோ,  ராமதாஸ் போன்றவர்களிடம் அரசியல் அல்பாமெத்தேடு பாடம் படிக்கவில்லையா திரு, சீமான் அவர்களே


க(கொலைஞர் ஆட்சியில் போஸ்டர் அடித்து ஒட்டினேன்

விழிகள் இரண்டும் இழந்தபின்பு புருவத்தில் பூசிக்கொள்ள மை எதற்கு
தமிழினம் செத்து மடிந்த பின் செம்மொழி மாநாடு யாருக்கு



     என போஸ்டர் அடித்து ஒட்டிய வழக்கில் 25 நாள் சிறையில் இருந்தபோது இப்போது இருக்கின்ற மாவட்ட, மாநில வழக்கறிஞர்கள் பலரும் எனக்கு தெரிந்திருந்த போதும் யாரும் உதவிக்கு வராதபோது என் அப்பாவின் முயற்சியின் ஜாமினில் வெளியே வந்தேன் ஒரு வழக்கறி்ஞர்கூட முன் வராத ஓர் கட்சியை வழிநடத்துகின்ற லட்சனமா?

     நான் உங்களை வேலுர் சிறையில் சந்தித்து எனது கேள்விகளை உங்களோடு பகிர்ந்தபோது யார் எப்படி இருந்தாலும் நீ இந்த சமூகத்திற்கு  என்ன பங்களிப்போ அதை செய்துகொண்டே இரு அதன் அர்த்தங்களை இப்போது புரிந்துகொண்டேன்,


     பட்டுக்கோட்டைக்குவழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலைசொல்லும் வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு கடைசிவரை எப்படி இயக்கத்தை வளர்த்தெடுக்கப்பேகிரீர்கள்


        கடந்த 5 வடருடங்களாக அ.இ.அ.தி.மு.காவின் கொள்கைபரப்புச் செயலாளர் போல் செயல்பட்ட வை,கோ-வை தூக்கி வீசிய மனிதாபிமானமற்ற ஜெயலலிதாவை புகழ்ந்து பாராட்டுவிழா நடத்தினீர்கள் நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் நானும் என் இணையத்தளத்திற்கு கேனக்கிருக்கன் என பேர் வைத்ததன் ஒற்றுமையை

     பல முஸ்லிம்களை கொடுமைப்படுத்தி வாழ்வை நாசப்படுத்தியதால் எந்த வெளிநாட்டிற்கும் போக முடியாத குஜராத்தில் ஆட்சி செய்கின்ற இந்தியாவின் ராஜபக்சே நரேந்திர மோடியை புகழந்து பேசியது சரியா?


     வளமான தமிழகத்திற்கு சிறப்பாக குஜராத்  மாநிலத்தைப்போல் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என ஜெயலலிதாவிற்கு புகழ்மாலை சூட்டிய  சீமான் அவர்களே!

      நான் தற்போது சிக்கியுள்ள இந்த வழக்கிற்காக இயக்கத்திலிருந்து யாரும் வராமல் இருந்தபோது

            வீட்டு ரசீது வாங்கப்போய் 5 வருடம் தண்ணிவரியையும்
         சேர்த்துகட்டி கிளார்க்கு லஞ்சம் உட்பட 735 ரூபாய் செலவு

       இரண்டு நபருக்கு வீ,ஏ,ஓ, கையெழுத்து வாங்கப் போய் 
      கையெழுத்து போடுவதற்கு லஞ்சம் கொடுத்தது 300 ரூபாய் செலவு

      இயக்க தோழர்கள் ஜாமின்தாரராக வராதபோது 
      வெளியில் இருந்து ஆள்பிடித்து ஜாமின்தாரர் செலவு 1750

    அவர்களுக்கு சாப்பாடு இதர போக்குவரத்து செலவு உட்பட 625 ரூபாய் செலவு
     வழக்கறிஞர் மற்றும் தஞ்சை கோர்ட்டுக்கு அலைந்த செலவு 1450 ரூபாய்

    வழக்கை முடித்திட காவல்துறைக்கு லஞ்சமாக 8 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர்.


     திரு, சீமான் அவர்களே! தெரிந்துகொள்ளுங்கள் நீங்கள் தினசரி புகழ்மாலை சூடிடும் அம்மாவின் பொற்கால ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் எதுவும் இல்லையென.

முகட்டேரி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானத்தை கிழித்து வைகுண்டம் காட்டுறேனு சொன்னானாம்

உள்ளூரில் ஓணான் பிடிக்கத்தெரியாதவன்
அடுத்த ஊரில் போய் ஆட்டையா பிடிக்கப்போறான்


இவர்களை நம்பி இயக்கத்தில் இணைந்த எனக்கு எந்த பழமொழி பொருந்தும் என நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்,

தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி
நெடுநாள் நீடிக்காது
என்பதை

     நீங்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை திரு, சீமான் அவர்களே!
மன முறிவுக்கு மருந்தில்லை என்பதை உணர்ந்துகொண்டு இனிமேலாவது இயக்கத்தில் இருக்கின்ற உண்மை தொண்டனை உணர்ந்து வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தால் மட்டுமே அரசியல் செய்யமுடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் திரு சீமான் அவர்களே! 

    இல்லையெனில் ஆளே இல்லாத ஊரில் யாருக்கு டீ ஆத்துர என வடிவேல் கதைக்கு நீங்கள் பொருத்தமாகிவிடுவீர்கள்

 நன்றி! உங்களின் மேலான கருத்துக்களும், வசையை எதிர்பார்ப்புடன் 
சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920

24 comments:

  1. அடி பலமாக விழுந்திருசோ?
    நாளைக்கு நம்ம வை, கோவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் இன்னும் வரலியே வந்தபிறகு முழுசா சொல்றேன் அதுவரை பொறுக்கவும்

    ReplyDelete
    Replies
    1. அம்மாவிடம் கூட்டணி இருந்தபோது கலைஞரை படுகேவலமான திட்டியும் கலைஞர் கூட்டணியில் இருந்தபோது அம்மாவை வறுத்தெடுத்த வை,கோ வை பற்றி நிறைய எழுத வேண்டியுள்ளது அதற்கு முன்பாக

      நம் தமிழை இனத்தை காக்க வந்த காத்தவராயன் கரிகாலச்சோழன் வாழும் வள்ளுவர் வாழ்ந்த அண்ணாவின் வாரிசு எனவும் உலகமாகாகவி என உயர்த்தி உள்ளத்தில் குடியமர்த்தி அழழு பார்த்த எம் தமிழன் மிகவும் கேவலமான தலைவன் கலைஞர் காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து மை தீரும் வரை கடிதமட்டுமே எழுத முடிந்த நம்ம (கொ)லைஞர் அவர்களை ஒரு விலாசு விலாசுவிட்டு அப்பறம் சொல்லுகிறேன் நம்ம வை,கோ,வைப்பற்றி,,,அதுவரைக்கும் காத்திருங்கள் நன்றி உங்கள் கருத்திற்கு சிகா,லெனின்

      Delete
  2. K.பாலசுப்ரமணியன்-பணங்குளம்.
    திரு. லெனின் அவர்களே ....................................
    இதுதான் உலகம் இனிமேலாவது உருப்படிய யோசித்து முன்னேற, பக்கத்திலை உள்ளவர்களையும், உண்மையான நண்பர்களையும் கண்டுகொண்டு வாழ்கியல் முன்னேற முயற்சிக்கவும். ரொம்ப லேட யோசித்து இருக்கியா! இருந்தாலும் பரவ இல்லை இன்னு காலன் இருக்கு.

    ReplyDelete
  3. அரசியல்வாதிகள் பிழைக்கத் தெரிந்தவர்கள். உங்களைப் போன்றவர்கள் உழைக்க மட்டுமே தகுந்தவர்கள். உங்களைப் போன்றவர்கள் வெளியே ஆயிரம் ஆயிரம். நீங்கள் எழுதி விட்டீர்கள். மற்றவர்களால் சொல்லக்கூட முடியவில்லை. இதுதான் உலகம்.

    ReplyDelete
  4. அனல் கக்கி உசுப்பேற்றும் வார்த்தை ஜாலத்தை நம்பி இவர்கள் பின்னால் சென்றால் இந்த கதி தான் ஏற்ப்படும் .இனிமேலாவது தங்களின் தந்தையின் வார்த்தையை மதித்து தங்களை மாற்றி கொள்ளுங்கள் .

    ReplyDelete
  5. இதையெல்லாம் உணர்ந்து பாக்காம போயிட்டு, இப்ப செருப்படி விழுந்துச்சுன்னு வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்.. சீமானாவது...சீமெண்ணையாவது....நீங்க உழைச்சாத்தான் உங்களுக்கு வருமானம், இனியாச்சும் பொழப்பைப் பாருங்க... சீமான்...அவன் சீமானா இருக்குறதுக்குத் தான் எல்லாம் செய்யுறான்....

    ReplyDelete
  6. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ---->
    புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.

    ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

    இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
    <----

    ReplyDelete
    Replies
    1. இனிய நண்பரே

      எனக்கு கோபம் சீமான் மீதும் வை,கோ மீதும் உள்ள கோபத்தில் எனது கருத்தை வெளியிட்டேன், மற்றபடி ஈழத்தைப்பற்றியோ அல்லது என் தலைவர் மேதகு, பிரபாகரன் அவர்களைப்பற்றியோ குறை சொல்லவில்லை குறை சொல்ல இப்பூவுலகில் யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது
      எந்த நூற்றாண்டும் காணமுடியாத ஒப்பற்ற தலைவன் பிரபாகரன் என்பதை மறந்துவிடவேண்டாம்
      உங்கள் கூற்றப்படி புலிகள் கொடுரமானவர்கள் என்றால் இங்கே இருக்கிற ப, சிதம்பரம் மற்றும் இன்ன பிற அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது சொல்லுங்கள் பார்ப்போம்,

      எம் தொப்புல் கொடி உறவு வலி வேதனையை உங்களுக்குத் தெரியுமா?
      புலிகள் கொடுரமானவர்கள் என்ற தடித்த வார்த்தைகளை குறைத்து நமது நட்பு தொடர்ந்திட நல் வழிவகை செய்வோம் நன்றி சிகா,லெனின்

      Delete
  7. நாயிக்கு கல்லடி பட்டா - அவ்வ்வ்வ்வ் அவ்வ்வ்வ் ன்னு கத்தற மாதிரி இருக்கு. ஆனா ஒன்னு - இதைப் படிச்சா சபலம் உள்ள யாரும் கொஞ்சம் யோசிப்பான். பட்டால்தான் தெரியும் பாப்பானுக்கு ங்கிற மாதிரி லொள்ளு பட்டு ரச்ச தாங்காமத்தான் எளுதறீங்கன்னு தெரியுது. இனிமேலேயாவ்து சூதனமா அப்பா கொடுத்த பொட்டியை யூஸ் பண்ணி பொள்ச்சுக்குங்க

    ReplyDelete
    Replies
    1. என்னை நாயாய் புகழந்து அப்படியே நா கத்துரமாதிரி அவ்வ்வ்வ்வ அவ்வ்வ்வ் னு அப்படியே கத்தி காம்ச்சிட்டிங்க நீங்க ரொம் நல்லவருனு நினைக்கின்றேன்
      நன்றி

      Delete
  8. வைகோ எப்போதும் எங்கேயும் வன்முறையை நோக்கி செல்லக்கூடாது என்றுதான் இளைஞர்களிடம் அறிவுறுத்துகிறார். இவரின் கருத்தை சீமானிடம் மட்டும் சொல்லட்டும்.

    ReplyDelete
    Replies
    1. என் இனிய நண்பரே

      தமிழினத்தின் போர்வாள் வை,கோ அவர்களை குறை கூற வில்லை
      இப்போது ஒவ்வொரு நாளும் அரசு அலுவலகத்தில் தினசரி லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது இது நான் தினசரி சந்திக்கும் பிரச்சனை திரு, வை,கோ நிச்சயம் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் ஆனால் அன்று ஓட்டுப்போட ஆள் இருக்காது ஏன் எனில் இப்போது டாஸ்மாக்கில் வாழ்க்கையை தொலைத்து ஆண்மை இழந்தவனாய் தெருவெங்கும் திருயப்போகும் பல குடிகார இளைஞராக அதையெல்லாம் இப்போதே களையவேண்டும் என்பதற்காகவே என் பதிவு விரைவில் வை,கோ வைப்பற்றி
      சுருக்கமாக தமிழகத்தில் இருக்கின்ற மதிமு,க மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய இளம் இரத்தங்களை பதவில் அமர்த்தி பேச்சாற்றல் மிக்க பல இளைஞர்களை இயக்கத்தில் இணைத்து கட்சியை வழிநடத்த நீங்களும் ஒர வழி வகை செய்யவும், நன்றி சிகா,லெனின்

      Delete
    2. தம்பி லெனின்... தங்கள் வரிகளின் தாக்கம்... அக் கட்சியில் பயகிக்கும் பலர் இதயங்களின் குமுரல்கள்தான்.
      கட்சியை வளர்க்கும் வரை நம்மை தேடுவார்கள்... போராட்ட களத்தில் உண்மையாக.. போராடும் ஒவ்வொருவருக்கும் இதே நிலமைதான். இவனுங்க நடத்துற மானங்கெட்ட அரசியல் விளையாட்டுக்கு எம் இளைஞர்களை பலிக்காடா ஆக்குவானுக.விடுங்க சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வோம் அரசியல் சாயல் இல்லாமல். மக்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்று தர வேண்டும் நாம் மக்கள் சேவகனாய் அரசையும் அரசியல்வாதிகளையும் வேலை வாங்குவோம். பொருத்திருந்து பாருங்கள் ... விடியலுக்கான விடியல் நாம் தான்.

      உயிருள்ளவரை மக்கள் போராளியாய்..
      உங்கள் "சிங்க தமிழச்சி"

      Delete
    3. தம்பி லெனின்... தங்கள் வரிகளின் தாக்கம்... அக் கட்சியில் பயகிக்கும் பலர் இதயங்களின் குமுரல்கள்தான்.
      கட்சியை வளர்க்கும் வரை நம்மை தேடுவார்கள்... போராட்ட களத்தில் உண்மையாக.. போராடும் ஒவ்வொருவருக்கும் இதே நிலமைதான். இவனுங்க நடத்துற மானங்கெட்ட அரசியல் விளையாட்டுக்கு எம் இளைஞர்களை பலிக்காடா ஆக்குவானுக.விடுங்க சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வோம் அரசியல் சாயல் இல்லாமல். மக்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்று தர வேண்டும் நாம் மக்கள் சேவகனாய் அரசையும் அரசியல்வாதிகளையும் வேலை வாங்குவோம். பொருத்திருந்து பாருங்கள் ... விடியலுக்கான விடியல் நாம் தான்.

      உயிருள்ளவரை மக்கள் போராளியாய்..
      உங்கள் "சிங்க தமிழச்சி"

      Delete
    4. தம்பி லெனின்... தங்கள் வரிகளின் தாக்கம்... அக் கட்சியில் பயகிக்கும் பலர் இதயங்களின் குமுரல்கள்தான்.
      கட்சியை வளர்க்கும் வரை நம்மை தேடுவார்கள்... போராட்ட களத்தில் உண்மையாக.. போராடும் ஒவ்வொருவருக்கும் இதே நிலமைதான். இவனுங்க நடத்துற மானங்கெட்ட அரசியல் விளையாட்டுக்கு எம் இளைஞர்களை பலிக்காடா ஆக்குவானுக.விடுங்க சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வோம் அரசியல் சாயல் இல்லாமல். மக்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்று தர வேண்டும் நாம் மக்கள் சேவகனாய் அரசையும் அரசியல்வாதிகளையும் வேலை வாங்குவோம். பொருத்திருந்து பாருங்கள் ... விடியலுக்கான விடியல் நாம் தான்.

      உயிருள்ளவரை மக்கள் போராளியாய்..
      உங்கள் "சிங்க தமிழச்சி"

      Delete
    5. லெனின்... தங்கள் வரிகளின் தாக்கம்... அக் கட்சியில் பயணிக்கும் பலர் இதயங்களின் குமுரல்கள்தான்.
      கட்சியை வளர்க்கும் வரை நம்மை தேடுவார்கள்... போராட்ட களத்தில் உண்மையாக.. போராடும் ஒவ்வொருவருக்கும் இதே நிலமைதான். இவனுங்க நடத்துற மானங்கெட்ட அரசியல் விளையாட்டுக்கு எம் இளைஞர்களை பலிக்காடா ஆக்குவானுக.விடுங்க சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வோம் அரசியல் சாயல் இல்லாமல். மக்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்று தர வேண்டும் நாம் மக்கள் சேவகனாய் அரசையும் அரசியல்வாதிகளையும் வேலை வாங்குவோம். பொருத்திருந்து பாருங்கள் ... விடியலுக்கான விடியல் நாம் தான்.

      உயிருள்ளவரை மக்கள் போராளியாய்..
      உங்கள் "சிங்க தமிழச்சி"

      Delete
    6. லெனின்... தங்கள் வரிகளின் தாக்கம்... அக் கட்சியில் பயணிக்கும் பலர் இதயங்களின் குமுரல்கள்தான்.
      கட்சியை வளர்க்கும் வரை நம்மை தேடுவார்கள்... போராட்ட களத்தில் உண்மையாக.. போராடும் ஒவ்வொருவருக்கும் இதே நிலமைதான். இவனுங்க நடத்துற மானங்கெட்ட அரசியல் விளையாட்டுக்கு எம் இளைஞர்களை பலிக்காடா ஆக்குவானுக.விடுங்க சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வோம் அரசியல் சாயல் இல்லாமல். மக்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்று தர வேண்டும் நாம் மக்கள் சேவகனாய் அரசையும் அரசியல்வாதிகளையும் வேலை வாங்குவோம். பொருத்திருந்து பாருங்கள் ... விடியலுக்கான விடியல் நாம் தான்.

      உயிருள்ளவரை மக்கள் போராளியாய்..
      உங்கள் "சிங்க தமிழச்சி"

      Delete
    7. தம்பி லெனின்... தங்கள் வரிகளின் தாக்கம்... அக் கட்சியில் பயகிக்கும் பலர் இதயங்களின் குமுரல்கள்தான்.
      கட்சியை வளர்க்கும் வரை நம்மை தேடுவார்கள்... போராட்ட களத்தில் உண்மையாக.. போராடும் ஒவ்வொருவருக்கும் இதே நிலமைதான். இவனுங்க நடத்துற மானங்கெட்ட அரசியல் விளையாட்டுக்கு எம் இளைஞர்களை பலிக்காடா ஆக்குவானுக.விடுங்க சமூகத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்வோம் அரசியல் சாயல் இல்லாமல். மக்களுக்கான உரிமைகளை போராடித்தான் பெற்று தர வேண்டும் நாம் மக்கள் சேவகனாய் அரசையும் அரசியல்வாதிகளையும் வேலை வாங்குவோம். பொருத்திருந்து பாருங்கள் ... விடியலுக்கான விடியல் நாம் தான்.

      உயிருள்ளவரை மக்கள் போராளியாய்..
      உங்கள் "சிங்க தமிழச்சி"

      Delete
  9. நீங்கள் எழுதி விட்டீர்கள். என்னால் சொல்லக்கூட முடியவில்லை. இதுதான் அரசியலோ?.

    ReplyDelete
    Replies
    1. என் இனிய நண்பரே
      படுகேவலமாக புகழ்ந்து நம்ம கொலைஞரைபற்றி புதிய பதிவு எழுத உள்ளேன் படித்துவிட்டு கருத்துச்சொல்லவும் நன்றி சிகா,லெனின்

      Delete
  10. தங்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. !! எழுத்தின் நோக்கம் புரிகிறது..!!!

    ReplyDelete
  11. கேனகிருக்கா!....நீ என்ன கடவுளா..எல்லாரையும் எடை போடுவதற்கு...."வைகோ" என்கிற சொல்லை உச்சரிக்க உணக்கு என்ன தகுதி இருக்கு?...உன்ணைபோல் நாசமாய் போன தெருநா..களால்தான் "வைகோ"&"தமிழ்"என்கிற விருடசங்கள் வீழ்த்தபட்டுகொண்டிருக்கிறது. எதை எதிர்பார்த்து "வைகோ",சீமான் என தாவி தாவி போனாய்?...போராட்டம் என்றால் எல்லாம் இருக்கத்தான் செய்யும்?...முத்தூட் பைனான்ஸ் போராட்டத்தில,வெளிய வர ஆன செலவை கணக்கு சொல்லி இருக்க!வெக்கமா இல்லை உணக்கு?.....நான் விடுதலைபுலிகளுக்கு ஆதரவா பேசியது சரியே,செய்யாத தவறுக்கு ஜாமீன் கோரமாட்டேன் என ஒருவருடம் சிறையிருந்த வைகோ எங்கே?...நீ எங்கே?...அவரைகாட்டிலும் உனக்கு வெளியில வேளை ஜாஸ்தியோ?...

    "வைகோ"-வின் போராட்டம்,வலி,வேதனை,அத்தனையும் "தமிழினம்" என்கிற ஒற்றை வார்த்தையை ஒட்டியே வேரோடி கிடக்கிறது.அவருடைய தொண்டர்களும் அப்படித்தான்.பதவி,பணம்,எதையும் எதிர்பார்க்காத,சொந்த கை காசை செலவழிச்சும் 17 வருஷமா கட்சி நடத்துற தொன்டர் கூட்டத்தை எங்காவது பார்த்திருக்கிறாயா?.... உன்னைபோல் இல்ல வைகோ-வின் தொன்டர்களும்,ஆதரவாளர்களும். அவரை விமர்சித்து எழுதுவதற்குமுன் உனக்கு என்ன தகுதி இருக்கிறது என யோசி! இல்லை கம்ப்யூட்டரும்,நெட்டும் இருக்குங்கறதுக்காக எழுதுவேன் என நீ புறபட்டால்,"வைகோ" வை கொச்சை படுத்துவதும் தமிழினத்தை புறம் பேசுவதும் ஒன்றுதான்!பதிலடிகொடுக்க இனி நாங்க தயங்கபோவது இல்லை....."தலைவர் பிரபாகரன்" என நீ உச்சரித்த வார்த்தைகளால் இத்தோடு நிறுத்திகொள்கிறோம்....! திருந்துங்கடா!

    ReplyDelete
  12. என் இனி நண்பரே இந்த கேனக்கிருக்கனை இவ்வளவு புகழந்து மிகவும் கேவலமாக திட்டியமைக்கு மிகுந்த பாராட்டுதலோடு மனமகிழ்ந்து உங்கள் திட்டும் பணி தொடர வாழ்த்திகின்றேன்,, ஸ்டெர்லைட் ஆலை மூன்று பேர் தூக்கு இவைகளுக்காக பம்பரமாய் சுற்றும் வை,கோ உங்களைவிட எனக்கு பிடிக்கும் இருப்பினும் அவர் மாறி மாறி கூட்டணியில் இருந்தபோது அவர் உதித்த பீரங்கி முத்துப்பேச்சுக்களை ஒப்பிட்டு கேட்டால் நானே மருந்தை குடித்துவிட்டு சாகலாம் போல் இருக்கும் நடந்துமுடிந்த உள்ளாட்சிதேர்தலில் கொள்கை கொள்கை என்று பேசிட்டு இருந்த வைகோ மாவட்ட ஒன்றிய கழக தொண்டர்கள் பலர் வீதியில் இறங்கி காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட ஒன்றிய கவுன்சிலருக்கு வாக்கு கேட்ட கொடுமையை என்னவென்று சொல்வது (அதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது), திமுக வில் இருந்து பிரிந்தபோது தமிழகமே திரும்பி பார்த்தது அடுத்த முதல்வர் வைகோ என்று ஆனால் இப்போது ஒரு நடிகர் கட்சிக்கு இருக்கின்ற கூட்டங்கள் இப்போது இல்லை, ஏன் என்பது தெரியுமா? ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது மறைமுகமாக குருதி இவையனைத்தும் ஈழத்திற்கு கொடுத்தனுப்ப இங்கிருந்தவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் தமிழ்நாட்டில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் ,,,,,,வேண்டாம் நண்பரே விளக்கமாக விபரமாக வை,கோ இதுவரை செய்த பிழை இனி என்ன செய்யதால் மதிமுக, வளரும் என்ற கருத்தை ஒரு தனி பதிவாக கொடுத்துவிடுகிறேன் படித்துவிட்டு என்னை மிகவும் கேவலமாக திட்டவும்,,
    குறிப்பு இன்னமும் உலகில் நான் அதிகம் நேசிக்கும் ஒப்பற்ற இரண்டாவது தலைவன் திரு, வை,கோ, இருப்பினும் இன்னும் சில ஆதங்கத்தோடு விரைவில் சந்திப்போம் புதிய பதிவில்,,

    ReplyDelete
  13. சீமான் செய்த துரோகத்துக்கு ஏன் வைகோவைக் குறை சொல்லவேண்டும் என்பதுதான் புரியவில்லை.
    நாயைக் கல்லால் அடித்தால், அடித்தவனை மட்டுமே கடிக்கவரும்; ஆனல், வெறிநாயை யாராவது அடித்தால், ஊரிலுள்ள அத்தனை பேரையுமே துரத்தும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..