Monday 18 June 2012


இதுதான் எங்கள் கேடுகெட்ட தமிழகம்

               ஈழத்தில் எம் உறவுகளின் வேதனையான ஒப்பாரி ஓலங்கள் ஓய்ந்து ஒலித்து  விடுப்பு எடுத்து  கிட்டத்தட்ட ஒரு லட்சம் மரணங்களை பிரசவித்து  மண்ணோடு மண்ணாக நிறம்மாறிய  அந்த சோக நினைவுகளை மறக்க நினைத்தும்  தோல்வியின் சோகத்திலிருந்து  எவ்வளவோ விடுபட முயற்சித்து என்னையும் நானே  ஏமாற்றி பொய்யாக வாழ்வை நடத்திவருகின்ற இச்சூழலில்


எனது எண்ணங்கள்...  ஆள்கின்றவர்களுக்கும்  அரசியலுக்கு...

அப்பாற்பட்டு என்னால் வாழ முடியவில்லையே என்ற கோபம் கலந்த வெறித்தனமான ஆதங்கத்தோடு

               இப்பவே தமிழக இளைஞர் சமுதாயத்தினரிடம் மதுவின் பிடியை கரம்பற்றி தான் சம்பாதிக்கின்ற  பணத்தையெல்லாம் மதுக்கடையில் கொட்டி... வெகு சீக்கிரமே தான் மட்டுமல்ல தன் குடும்பமும் சேர்ந்தே நாசமாய் போய் சீக்கிரத்தில் சுடுகாடு செல்வதற்கு  பாஸ்போர்ட் எடுத்து தந்துகொண்டிருக்ககூடிய தமிழகத்தை பின்னேற்ற பாதைக்கு வழிநடத்தி செல்கின்ற செயலலிதாவை மனப்பூர்வமாக பாராட்டி முதலமைச்சர் செயலலிதா  இருக்கும் திசையை நோக்கி வணங்கிவிட்டு வேதனையோடு எனது  பதிவை தொடர்கின்றேன்


              மண்ணையும், மனிதனையும் வாழவைத்த நீர் இன்று
மாசடைந்து இன்று கானல் நீராகி  இயற்கையின் நியதியை செயற்கையாக  மாற்றிவிட்ட சூழ்நிலையில்

இனிமேலும் குறை சொல்லிச் சொல்லி,
உள்ளுக்குள்ளே குமுறிகொண்டு இருப்தைவிட 

குற்றம் செய்யும்  கள்வர்களை, தேர்ந்தெடுத்த 

குற்றவாளி ஆகிப்போன குற்றதிற்காக 
 

           முடியாதது ஒன்றும் இல்லை , முடிவெடுத்து முயற்சியில் இறங்கிவிட்டேன் இப்படி எதாவது  வாரத்தில் இரண்டுநாள் பதிவு எழுதி கிருக்கிபார்ப்போம் என்று.

          அறிவிக்கப்படாத ஜனநாயக நாட்டில் அடைக்கப்படாத அடிமைகளாக நம் ஒவ்வொருவரையும் இந்த அரசியல்வாதிகள் வைத்துள்ளனர் என்பதுதான் யதார்தமான உண்மை,

வீடு முகட்டில் ஏரி கோழி பிடிக்கத்தெரியாதவன்
வானத்தை கிழித்து வைகுண்டம் காட்டுகிறேன்

  என்று சொன்னானாம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில்

          நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாரும் பெருகி ஓடி பஞ்சங்கள் மறையும் என்று கெஞ்சி காலில் விழுந்து ஓட்டு கேட்டனர், அ,தி,மு,க, ஆட்சிக்கு வந்ததும் திருடர்கள் பயந்து வெளிமாநிலத்திற்கு ஓடிவிட்டனர் சொன்னார்களே தவிர தமிழ்நாட்டில் தினசரி நடக்கும் திருட்டுகளும், கொலைகளின் எண்ணிக்கை மட்டும் குறைவே இல்லை தினசரி தமிழ்நாட்டில் திருட்டுதான் ஒழிந்ததா? அல்லது அராஜகம்தான் நின்றுவிட்டதா

         தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமாம் யார் அந்த நல்லவர்கள் என்று எனக்கு தெரிந்திருந்தால் இந்த பதிவு எழுத வேண்டிய அவசியம் இருக்காது எனக்கு


          தமிழகத்தில் நடக்கின்ற ஒவ்வொரு ஊராட்சி மன்ற தேர்தலில் வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட செயலாளர் வரை தமிழகத்தில் நான் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என தேர்தலில் போட்டியிட்ட யாரேனும் ஒருவர் தன் மனசாட்சியைத் தொட்டு சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம்

        இதுவரை உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டுள்ள உங்கள் இந்தியாவில் அதிலும் எங்கள் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம், ஆடு, மாடு, கோழி, டீவி, மிக்சி, கிரைண்டர்,  புடவை, ஜட்டி, ஜாக்கெட், இது எல்லாத்தையும் கொடுப்பதற்கு காலில் விழுந்து கெஞ்சிடும் பழக்கத்தை உருவாக்கிய பெருமைகள் எங்கள்  தமிழக அரசியல்வாதிகளை மட்டுமே சேரும் இதில் உலகில் மற்ற நாட்டவர் யாரும் பங்குகொள்ள முடியாது,

தற்போது கும்பிடும் கோவில்முதல் இறந்து சுடுகாடு சென்றபிறகு இறப்புச்சான்றிதல் வாங்கும்வரை நாம் யாரேனும் லஞ்சம் கொடுக்காமல் இருக்க முடியுமா? லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்குமா? கொஞ்சம் யோசித்துபாருங்கள் அல்லது தமிழ்நாட்டில் லஞ்சம் இல்லவே இல்லை என ஆண்ட, ஆளுகின்ற எந்த முதல்வரானாலும் சொல்லிடத்தான் முடியுமா?

யாரேனும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் புகார் கொடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உண்மையில் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது எடுத்தார்களா? இதுநாள்வரை தேர்தல் புகார் அடிப்படையில் எத்தனை பேர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை எந்த அரசுதான் தெரிவிக்கும்,


     இதற்கு முன் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தொகுதியான சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட இந்தியாவின் மிக உயர் பதவியில் அமைச்சராக இருக்ககூடிய தற்போது தேர்தலில் டுபாக்கூர் செய்து பதவியில் இருக்கக்கூடிய  எங்கள் ஊர் மட்டுமல்ல  எங்கள் வீட்டில் உள்ளவர்கள் முதற்கொண்டு எனக்குதெரிந்த அத்தனை ஊர்களிலும் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 500 கொடுக்கவில்லையென ப, சிதம்பரமோ அல்லது அவரின் துதிபாடிடும் காங்கிரஸ்காரர்கள் யாராவது ஒரே ஒருவர்  ஒரு வாக்கிற்கு 500 ரூபாய் கொடுக்கவில்லையென நிரூப்பிக்க சொல்லுங்கள் பார்ப்போம்  நிரூபிக்கதான் முடியுமா தற்போது  தேர்தலில்  டூபாக்கூர் செய்து ஜெயித்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது அனைத்து பதவி சுகம் பெற்ற பின் தீர்ப்பு வெளியிடப்படும் நீதிக்கு "தலை " வணங்குவோம் நாம்

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் 49(o)க்கு  (எந்த அரசியல்வாதிகளையும் பிடிக்கவில்லையென)  49 (o)க்கு   ஆதரவாக 45 ஆயிரம் பேர் தமிழகத்தில் வாக்களித்துள்ளனர் தேர்தல் வந்துவிட்டால் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்று வேதம் ஓதுபவர்களே? தற்போது மத்தியில் அமைச்சராக இருக்கும் பிராடு சிதம்பரம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை வாக்களிக்க ஊருக்கு வரவில்லை என நம் எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்கள் பார்ப்போம் இதுநாள்வரை எந்த அரசியல்வாதிகளாவது ஏன் தமிழ்நாட்டில் 45 ஆயிரம் பேர் 49(oவுக்கு வாக்களித்தீர்கள் ஏன் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லையென இதுவரை கேட்டதுண்டா ஜனநாயகத்தில் தீர்ப்பை வழங்கிடும் உண்மையான நீதிபதி நாம் தான் என்றால் எங்களுக்கு எந்த அரசியல்வாதிகளையும் பிடிக்கவில்லையென 49(o க்கு வாக்களிப்பவர்களை என்னவென்று சொல்வீர்கள்?

வாக்களிப்பீர்! உயர்வடைவீர்! வளமையடைவீர் பெருமைகொள்வீர் என போஸ்டர் அடித்து ஒட்டுகின்ற தேர்தல் அதிகாரிகளே ,,,இந்திய நாட்டில்

தமிழ்நாட்டில் நடபெறுகின்ற தேர்தலில் வாக்களித்தால் யார் உயர்வடைவார்கள் யார் வளமையடைவார்கள் என்று நீங்களே உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்

5 வருடம் மக்கள் பணியாற்றபவரை தேர்ந்தெடுக்கும் முன் 5 நிமிடம் சிந்தித்து வாக்களித்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்று சொல்லும் தேர்தல் ஆணையமே

எதை சிந்திக்க சொல்கின்றீர்கள் ஊழல்செய்வதில் உல அரங்கில் தமிழன் சிறந்தவர் என   பறைசாற்றும் விதத்தில் தற்போது கழுத்தில் மாலையுடன், தாரை தப்பட்டை முழங்க கூடவே ஆயிரம் கார்களுடன் எதோ வின்வெளியில் சாதனை செய்ததுபோல் தீகார் சிறையிலிருந்து வெளியே வந்த நம்ம கனிமொழி அக்கா....... கூட சிறையில்  ஒன்னாவே இருந்த  ஸ்பெக்ரம் ஊழலில் தமிழனை உலகறியச்செய்த ராசாவையா? இன்றுவரை ஊழல் வழக்கில் கர்நாடகா கோர்டில் கையெழுத்து போடுகின்ற இன்னாள் முதல்வர் செயலலிதாவையா? அல்லது திருவாரூரில் இருந்து திருட்டு இரயில் ஏறி வந்து அரசியல் செய்து இன்று உலகில் 3 வது பணக்காரராக திகள்வது  மட்டுமல்ல சிறைக்குள்ளேயே பொதுக்குழு கூட்டும் அளவிற்கு ஊழல் பல செய்து சாதனையாக திகழ்கின்ற  தி,முக, கருணாநீதி  அவர்களையா  சொல்லுங்கள் பார்ப்போம்

சாகும்வரைக்கும் வைத்தியக்காரன் விடமாட்டான்
செத்தாலும் விடமாட்டான் பஞ்சாங்க காரன் என்பதுபோல்

திருடர்கள் பல கன்னிப்பெண்களை கடத்தி பணம் பறிப்பது அந்த காலம், இப்போது தனக்கு ஆதரவாக வாக்களிக்க கவுன்சிலர்களை கடத்தி குற்றாலத்தில் அறையில் அடைத்து பணமழையில் குளிக்க வைக்கின்ற புதிய கண்டுபிடித்த பெருமை உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லிக்கொண்டுள்ள உங்கள் இந்தியாவில் நான் வாழுகின்ற தமிழ்நாட்டைச்சேரும்

     நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடு, மாடு, கோழி, மிக்சி, கிரைண்டர் ,கம்ப்யூட்டர், டீவி, கொடுப்போம் என உறுதியளிக்கும் அரசியல்வாதிகளே? நீங்கள் ஒரே ஒருமுறை சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகாலை 4மணிமுதல் 6 மணிக்குள் சாலைகளின் இருபுறமும் கண்திறந்த பார்த்துக்கொண்டே வாருங்கள் தமிழ்நாட்டில் அத்தனை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பு செய்ததினால் சாலை ஓரத்தில் இயற்கை உபாதைகள் கழித்திட நம் வீட்டு பெண்கள் கஸ்டப்படுவதை பாருங்கள் கண்திறந்து வெக்கம் கெட்ட அரசியல்வாதிகளே?

விலை மதிப்பற்ற உங்கள் வாக்குரிமையை விலைக்கு விற்காதீர்கள் என்றால் ஒரு வாக்கிற்கு விலை நிர்ணயம் செய்து ஆட்டுக்கறியில் தொடங்கி அரிசி பருப்பு பட்டுப்புடவை தங்க மூக்குத்தி கொடுத்துவிட்டு தமிழகத்தில் இடைத்தேர்தலில் முன்பே விலைபேசி தன்னை வாங்கிவிட்டார்கள் ஒருகாலத்தில் கோவணம் கட்ட வசதியற்ற இந்த அரசியல்வாதிகள்


வாக்களிப்பது நம் உரிமையென சொல்லுகின்ற தேர்தல் ஆணையமே? சென்ற முறை சட்டமன்ற தேர்தல் நேரத்தில் திருச்சியில் ஆம்னி பஸ்ஸின் மேற்கூரையில் 5 கோடி ரூபாய் மூட்டை கட்டி போடப்பட்டிருப்பதை கண்டுபிடித்த தேர்தல் ஆணையமே இதுநாள்வரை அது யாருடைய பணம் என யாருக்காவது சொல்லியது உண்டா?

எது எப்படியோ தமிழனை ஊழலோடு வாழ பழகிக்கொண்டு பழக்கப்படுத்தப்படுத்தி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்

 தமிழகத்தில் பல நகரங்களில் உணவகத்தின் பின்புறத்தில் நான்கு கால் ஜீவன் நாய்களை விரட்டிவிட்டு இரண்கால் மனிதன் எச்சி இலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிச்சமீதி  சோற்றை உண்டு வாழ்கின்ற இந்த வேளையில் செயலலிதா அரசின்  ஓர் ஆண்டு நிறைவு சாதனை விழா என 25 கோடி விளம்பரத்திற்கு செலவு செய்துள்ளார். நாம் அவரின் சாதனைகளை என்றும் மறக்ககூடாது


நன்றி: உங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் சிகா,லெனின் கீரமங்கலம் 9047357920

Thursday 14 June 2012

உண்மையில் வெக்கி தலைகுனிந்தேன் தமிழராக பிறந்தமைக்கு

   பர்மா தொடங்கி ஈழத்தில் மட்டுமல்ல தற்போது  கேரளா மட்டுமல்ல தமிழன் வாழுகின்ற, செல்லுகின்ற இடமெல்லாம் செருப்படி வாங்கி சிவப்பாய் குருதி வழியும் முகத்தோடு தமிழர்களை வழிநடத்திட வக்கற்ற தமிழ், தமிழர் என்று சொல்லி வயிறு வளர்க்கின்ற தலைவர்கள் நிறைந்து வாழுகின்ற பெருமை மிக்க தமிழகத்தில்.

     ஏழைத்தாயின் வற்றிய மார்பில் பால் வராமல் குழந்தை கதற... கதற அழுகின்றபோது உண்மையான அன்பு செலுத்து கின்றவர்களும்  பிறருக்கு உதவுகின்ற பண்பு நிறைந்த மனிதர்கள் மட்டுமே  கடவுள் என்பதை மறந்துவிட்டு குடம் குடமாய் பால் அபிசேகம் செய்கின்ற பெருமை மிக்க இந்திய திருநாட்டில்

    இன்றுவரை அவமானம் குறித்தோ அல்லது அடிமைத்தனம் குறித்தோ கவலைகள் ஏதுமற்றவர்களாக மதிமயக்கி வைத்துள்ளனர் வாழ்ந்தாருக்கு ஜால்ரா அடிக்கமட்டுமே தெரிந்த இந்த அரசியல்வாதிகள்



       பல்லி சொல்லும் பலனை அறிய  பஞ்சாங்கத்தை பார்க்க தெரிந்த நம் வீட்டு அறிவிஜீவிகளுக்கு தன் மகன் மகள் பள்ளி சென்றால் அறிவுமட்டுமல்ல அகிலத்தையும் வென்றெடுக்கலாம் என்பதை மறந்துவிட்டு தற்போது புதுக்கோட்டை இடைத்தேர்தலில்  வீதியில் கொடிபிடிக்க மட்டுமே எம் உறவுகளை பயன்படுத்திக்கொண்டிருப்பதை நேரில் பார்த்தபோது உண்மையில் வெக்கி தலைகுனிந்தேன் தமிழராக பிறந்தமைக்கு

    கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம் 

இன்று கால் வயிறு கஞ்சிக்கு வழியின்றி முள்வேளி முகாமில் கையேந்தி நிற்கிறது  ஒருவேளை உணவிற்காக... இதுதான் கொடுமையிலும் கொடுமை

      யார் ஆட்சிக்கு வந்து எத்தனை இலவசங்கள் கொடுத்தால் என்ன என்னதான் அய்.டி. இன்டெர்நெட், செல்போன் சாட்டிலைட்
ஆயிரம் வந்தாலென்ன

      பசிமேயும் வயிறுகள், வியர்வை சுரப்பிகள் பொங்கி வற்றாத வடிகால்களோடு குருதி வழிகின்ற கைகளோடும் தொண்டைக்குழி சேர்ந்து வறுமையும்  வறண்டு இயற்கை வெயிலில் மூச்சுக்குழல் அடைத்து துர்நாற்றமும் வாழ்கையின் உயிரோடு கலந்த  நிழலென இன்றுவரை தொடரத்தான் செய்கிறது நம் தமிழகத்தில் பாதி இடங்களில் இதுதான் இவர்கள் அரசியலில் செய்ய இன்றைய சாதனை

       பல இளைஞர்களுக்கு, தேவை திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் என்பதை உணர்ந்து  நாம்இனி இலவசங்கள் தேவையில்லையென நீங்களும் நானும் வெறுத்தால் மட்டுமே இனி தமிழினம் தலைத்தோங்கும்

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவேண்டும் என்பதற்காக, நம் அரசியல்வாதிகள் தமிழகத்தை உலக நாடுகளிடம் கடன் வாங்கி தன்னை மட்டும் வளமாக்கிக் கொண்டு தமிழனை மட்டும் அப்படியே  ஏழையாக இருக்க செய்துள்ளனர் இவர்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இன்னும் எத்தனை ஆண்டுகாலம்தான் நம்மை
ஏழையாகவே வைத்திக்க போகின்றனரோ தெரியவில்லை

   வேதமும், வீரமும் ,கல்வியும், கலையும்,  காவிரி தென்பெண்ணை பாலாறும், செந்தமிழோடு, முத்தமிழும் நிறைந்து வான்புகழ் கொண்ட வள்ளுவனும்,   கவிபாடிய கம்பனும் அறிவு செறிந்து புகழ் சேர்ப்பதற்கு பெருமைகளோடு வளமையும் மண்டிக் கிடக்குந்த தமிழ்நாடு இன்று டாஸ்மாக் கடையில் தன்சுயசரித்திரத்தை அடகு வைத்துள்ளனர் தமிழகத்தில் பாதிபேர் ஐயோ பாவம்


     நாம் எல்லாம் இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு ஒன்றுமே நம்மிடம்  ஏதுமில்லை...

    வரலாற்றில் தமிழக்ததில் வாழுகின்ற துரோகிகளை என்றைக்குமே  மன்னிக்கப் போவதில்லை


    இனிமேல்   இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளிடம் நம்மை  அடகு வைத்துவிடக்கூடாது. காரணம்  இவர்கள் நமது கோவணத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மையும்கூட

   எங்கோ தேசம் கடந்து தலைவர் வாழுகிறார் என்ற மகிழ்ச்சியோடு தெளிவான சிந்தனைகளோடு

  நன்றி உங்கள் திட்டுதலையும் குறைகளையும் எப்போதும் எற்றுக்கொள்  மிகவும் ஆசையாக காத்திருக்கும்

சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920

உண்மையில் வெக்கி தலைகுனிந்தேன் தமிழராக பிறந்தமைக்கு

        பர்மா தொடங்கி ஈழத்தில் மட்டுமல்ல தற்போது கேரளா மட்டுமல்ல தமிழன் வாழுகின்ற செல்லுகின்ற இடமெல்லாம் செருப்படி வாங்கி சிவப்பாய் குருதி வழியும் முகத்தோடு தமிழர்களை வழிநடத்திட வக்கற்ற தமிழ் தமிழர் என்று சொல்லி வயிறு வளர்க்கின்ற தலைவர்கள் நிறைந்து வாழுகின்ற பெருமை மிக்க தமிழகத்தில்


            ஏழைத்தாயின் வற்றிய மார்பில் பால் வராமல் குழந்தை கதற... கதற அழுகின்றபோது உண்மையான அன்பு செலுத்து கின்றவர்களும்  பிறருக்கு உதவுகின்ற பண்பு நிறைந்த மனிதர்கள் மட்டுமே  கடவுள் என்பதை மறந்துவிட்டு குடம் குடமாய் பால் அபிசேகம் செய்கின்ற பெருமை மிக்க இந்திய திருநாட்டில்

         இன்றுவரை அவமானம் குறித்தோ அல்லது அடிமைத்தனம் குறித்தோ கவலைகள் ஏதுமற்றவர்களாக மதிமயக்கி வைத்துள்ளனர் வாழ்ந்தாருக்கு ஜால்ரா அடிக்கமட்டுமே தெரிந்த இந்த அரசியல்வாதிகள்



          பல்லி சொல்லும் பலனை அறிய  பஞ்சாங்கத்தை பார்க்க தெரிந்த நம் வீட்டு அறிவிஜீவிகளுக்கு தன் மகன், மகள் பள்ளி சென்றால் அறிவுமட்டுமல்ல அகிலத்தையும் வென்றெடுக்கலாம் என்பதை மறந்துவிட்டு தற்போது புதுக்கோட்டை இடைத்தேர்தலில்  வீதியில் கொடிபிடிக்க மட்டுமே எம் உறவுகளை பயன்படுத்திக் கொண்டிருப்பதை நேரில் பார்த்தபோது உண்மையில் வெக்கி தலைகுனிந்தேன் தமிழராக பிறந்தமைக்கு

கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்
இன்று 

      கால் வயிறு கஞ்சிக்கு வழியின்றி முள்வேளி முகாமில் கையேந்தி நிற்கிறது  ஒருவேளை உணவிற்காக... இதுதான் கொடுமையிலும் கொடுமை

       யார் ஆட்சிக்கு வந்து எத்தனை இலவசங்கள் கொடுத்தால் என்ன
என்னதான் அய்.டி. இன்டெர்நெட், செல்போன் சாட்டிலைட்
ஆயிரம் வந்தாலென்ன

பசிமேயும் வயிறுகள் வியர்வை சுரப்பிகள் பொங்கி
வற்றாத வடிகால்களோடு குருதி வழிகின்ற கைகளோடும்
தொண்டைக்குழி சேர்ந்து வறுமையும்  வறண்டு
இயற்கை வெயிலில் மூச்சுக்குழல் அடைத்து
துர்நாற்றமும் வாழ்கையின் உயிரோடு கலந்த  நிழலென இன்றுவரை தொடரத்தான் செய்கிறது நம் தமிழகத்தில் பாதி இடங்களில் இதுதான் இவர்கள் அரசியலில் செய்ய இன்றைய சாதனை

கணவனை இழந்த கண்ணகி சீற்றம் கோபம்  நியாயம்  என்று இன்றுவரை வீரப்பு பேசுகின்றவர்களும் 

துரோபதி சபதம் தூமையான வாக்கு சரிதான்  என்பவர்களும்


தருமனின் யுத்தம் காலத்தின் கட்டாயம் என்று போர்பரணி கொட்டுகின்றவர்களும்


      எம் சொந்த மண்ணில் ஆயிரமாயிரம் இரத்த உறவுகள் கொத்துக்குண்டுகளால் கொன்றொழிக்கும்போதும் விரட்டி அடிக்கும்போது எம் உறவுகளின் ஆவேசமும் நியாயம்தான் என  நீதி பேசிட உலகில் எந்த ஒரு நாயும் வரவில்லை. கடைசிவரை தீவிரவாதம் என வாதம் செய்தார்களே தவிற வேறு என்ன செய்தார்கள் இங்குள்ளவர்கள்


  பல இளைஞர்களுக்கு, தேவை திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் என்பதை உணர்ந்து  நாம்இனி இலவசங்கள் தேவையில்லையென நீங்களும் நானும் வெறுத்தால் மட்டுமே இனி தமிழினம் தலைத்தோங்கும்

         ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவேண்டும் என்பதற்காக , நம் அரசியல்வாதிகள் தமிழகத்தை உலக நாடுகளிடம் கடன்வாங்கி தன்னை மட்டும் வளமாக்கிக்கொண்டு தமிழனை மட்டும் அப்படியே  ஏழையாக இருக்க செய்துள்ளனர் இவர்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இன்னும் எத்தனை ஆண்டுகாலம்தான் நம்மை
ஏழையாகவே வைத்திக்க போகின்றனரோ தெரியவில்லை

வேதமும், வீரமும், கல்வியும், கலையும்,  காவிரி தென்பெண்ணை பாலாறும், செந்தமிழோடு முத்தமிழும் நிறைந்து வான்புகழ் கொண்ட வள்ளுவனும்,   கவிபாடிய கம்பனும் அறிவு செறிந்து புகழ் சேர்ப்பதற்கு பெருமைகளோடு வளமையும் மண்டிக் கிடக்குந்த தமிழ்நாடு அன்று  

    இன்று டாஸ்மாக் கடையில் தன்சுயசரித்திரத்தை அடகு வைத்துள்ளனர் தமிழகத்தில் பாதி தமிழர்கள்  ஐயோ பாவம்

       நாம் எல்லாம் இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு ஒன்றுமே நம்மிடம்  ஏதுமில்லை...

கணவனை இழந்த கண்ணகி சீற்றம் கோபம்  நியாயம்  என்று இன்றுவரை வீரப்பு பேசுகின்றவர்களும்
 

துரோபதி சபதம் தூமையான வாக்கு சரிதான்  என்பவர்களும்
 

தருமனின் யுத்தம் காலத்தின் கட்டாயம் என்று போர்பரணி கொட்டுகின்றவர்களும்
 

எம் சொந்த மண்ணில் ஆயிரமாயிரம் இரத்த உறவுகள் கொத்துக்குண்டுகளால் கொன்றொழிக்கும்போதும் விரட்டி அடிக்கும்போது எம் உறவுகளின் ஆவேசமும் நியாயமும்! நீதி பேசிட உலகில் எந்த ஒரு நாயும் வரவில்லை கடைசிவரை தீவிரவாதம் என வாதம் செய்தார்களே தவிற வேறு என்ன செய்தார்கள் இங்குள்ளவர்கள்

வரலாற்றில் தமிழக்ததில் வாழுகின்ற துரோகிகளை என்றைக்குமே  மன்னிக்கப் போவதில்லை

இனிமேலும்  இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளிடம் நம்மை  அடகு வைத்துவிடக்கூடாது. காரணம்  இவர்கள் நமது கோவணத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மையும்கூட

 எங்கோ தேசம் கடந்து தலைவர் வாழுகிறார் என்ற மகிழ்ச்சியோடு தெளிவான சிந்தனைகளோடு உங்கள் திட்டுதலையும், குறைகளையும் எப்போதும்  மிகவும் ஆசையாக காத்திருக்கும்  


சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920