Friday 14 September 2012

கூடங்குளமும் தமிழக அரசியல்வாதிகளும் ஒரு மனநோயாளியின்குமுறல் பாகம் 1



கூடங்குளமும் தமிழக அரசியல்வாதிகளும் ஒரு மனநோயாளியின் குமுறல், பாகம் 1

குறிப்பு: இதில் சொல்லப்படும் கருத்திற்கு யாவும் தமிழக அரசியல்வாதி திரு, வை,கோ அவர்களுக்கு பொருந்தாது அவர் இந்த பதிவில் சொல்லப்படும் கருத்திலிருந்து தள்ளிவைக்கப்படுகிறார்

பேச்சில் உருட்டல், ஆதாயத்திற்காக எதிர்கட்சியை மிரட்டல், தமிழர்களுக்கு நல்லது செய்வதுபோல் ஒப்பனையான நடிப்பு, திறமையாக குட்டிக்கர்ணம் போடுவதுபுரட்டு,பொய்மைகலந்தபேச்சு,புறஞ்சொல் பேசுகின்ற நயவஞ்சகம் நிறைந்த நம் தமிழக அரசியல்வாதிகளான கருணாநிதி தெருமாவளவன் ராமதாசு செயலலிதா இன்னும் பலர் கூடங்குளம் விசயத்தில் இரட்டை வேடம் போட்டு நடிக்கின்ற கொடுமைகளை நினைத்து பார்க்கின்றேன் பல மணிநேரம் நான் ஒரு மனநோயாளியைப்போல,,


       உச்சகட்ட வேதனையின் விழிம்பில் இருந்துகொண்டு
உண்மையாகச் சொன்னால் இந்தக் கட்டுரையை எழுதும் தெம்பும் திராணியும்
இல்லாமல் எல்லாத்தையும் வெறுத்து இந்த மக்களின் விடிவுக்காகவும் இந்த மண் வளம்பெற்று தமிழ் மொழியும் தமிழக மக்களும் ஏற்றமடைவார்களா என்ற குருட்டு நம்பிக்கை சிந்தனைகளோடு ஒரு மனநோயளியைப்போல் எழுதுகிறேன் ஒரு கட்டுரையை

       கூடாது கூடங்குளம் என்ற நோக்கத்தில் அமைதியான கடற்கரை கிராமங்கள் அனைத்தும் போர்க் கோலத்தில் உள்ளதை நேரில் பார்த்த நான் கடந்த 15 நாட்களாக நான் உண்மையில் தூக்க மாத்திரை போட்டுக்கொண்டுதான் தூங்குகிறேன் என் மொத்த உறவும் நாளைக்கு சாகப் போகின்றதைபோல் நினைத்தால் எப்பபடித்தான் எனக்கு தூக்கம் வரும்,,,

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்நீச்சல் போடுவதற்கு எதிர்ப்பின்றி
கூடங்குளம் கூடாது என்ற மறுபேச்சுக்கே இடமற்று பேசுகின்ற கேடுகெட்டவர்களாக அனுவிஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் நிறைந்து இருப்பதால் நிச்சயம் என் கேள்விகளுக்கு அவசியம் பதில் சொல்லியே ஆகவேண்டும்,

மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம். என்பார்கள்

      கூடங்குளம் விசயத்தில் நம் அரசியல்வாதிகளின் நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தை காட்டிவிட்டார்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் யாரும் இதுவரை உருப்படியாக கூடங்குளம் விசயத்தில் மக்களிடம் அனுகவில்லை என்பதுதான் யதார்த்தம்


      கற்பனையிலும் நினைக்க முடியாத கொடுமைகள் அரங்கேற்றி எம் பூமியில் மனித இனம் மொத்தமும் அழிவதை ஒரு சராசரி மனிதனாக நாமே காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதனால் இன்று ஆயிரமாயிரம் தமிழர்கள் போராடுகிறார்கள் இனி தூங்கியது போதும்
துடித்தெழுந்து துடிப்பாய் செயல்பட வேண்டும் என முடிவெடுத்து கூடங்குளம் வீதியிலும் கடலிலும்

      சகோதரியின் மானம்காக்க ஆயுதமேந்தி போராடினார்கள் ஈழத்தில் அங்கே என் போராளிகள் சிங்களவனை தட்டிகேட்க தமிழகத்தில் வேட்டி கட்டிய அரசியல்வாதிகள் யாரும் இல்லாததினால் நம் சொந்தங்கள் நம் கண்முன்னே அனாதையானார்கள் கூடவே நம் போராளிகளை உலகம் தீவிரவாதி என்று பச்சை குத்தியது


    இன்று தமிழகத்தில் கூடங்குளத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் தேசத்துரோகியாம் தமிழகத்தில் தமிழனாய் தமிழ் உணர்வோடு, உணர்ச்சியோடு நம்மால் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கதான் முடிகிறது இடிந்தகரையில் கண்ணீரை துடைத்திட எந்த நாயும் இல்லை நமக்கென ஒரு நாதியும் இல்லை என்பதுதான் வேதனை....

          பதற்றம் அடைந்து சினங்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சிந்தித்து செயல்பட்டு பக்குவமாய் பேசிட ஒரே ஒரு அரசியல்வாதிகளாவது நேரில் வந்து எப்போதாவது ஆறுதலே அல்லது கூடங்குளத்தை பற்றி விளக்கமோ சொன்னார்களா?

          கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு. என்ற கதையாய் ஆக்கிவிட்டார்கள் நம் அரசியல்வாதிகளும் அடக்குமுறை ஏவல்துறையினரையும் ஏவவிட்டு

             கடல் அலைபோல் அமைதியற்று மனித மனங்கள் அங்கே விரக்தி அதிகம் அடைந்து எங்கும் விம்மி அழும் சத்தம்.. கேட்கிறது வீதியில் சாரை சாரையாக மரண ஓலம் கேட்கிறது,,

            நடுங்கி, ஒடுங்கி நடுத்தெருவில் உறங்கி, நாதியற்று பயந்து கிடக்கிறது நம் உறவுகள் கூடங்குளத்தில் அதைப்பற்றி அடுத்த மாவட்டத்தில்கூட யாரும் கவலைப்படுவதாக இல்லை பக்கத்து வீடுதானே எரிகிறது எனும் மனப்பான்மையில். நமக்கென என வாழ்ந்து பழக்கப்பட்ட்ட மனிதர்களாய் நாம் இன்று அனைத்தும் இழந்துவிட்டோம்

            உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.
என்ற கதையாய் தேர்தல் காரியம் முடியும் வரை கூடங்குளத்திற்கு எதிர்ப்பு காட்டிவிட்டு இப்போது காவல்துறையை வைத்து வன்முறையில் இறங்குகிறார் முதல்வர் செயலலிதா


            ஏற்கனவே மதுவினால் பல இளைஞர்களை ஊதாரியாகத் போதையில் தமிழக அரசு திரியவைத்தாலும் மனித எண்ணங்கள் பல இருந்தாலும் ஒன்றுகூடி எங்கே நம் வாழ்வு கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்று திண்ணமுடைய ஊக்கத்துடன் கூடங்குளம் வேண்டாம் என்று  பேராடுகின்ற என்னை போன்ற பலருக்கு தமிழக அரசியல்வாதிகள் அவசியம் பொதுமக்கள் சார்பாக நான் கேட்கும் கேள்விக்கு  விளக்கம் தருவார்களா?


       வாழ்வது மனிதனாக ஒரே ஒரு முறை அதை அர்த்தமுள்ளதாக எங்களால் மாற்றிக்கொண்டு வாழமுடியாவிட்டாலும் எம் வருங்கால சந்ததியை நாங்களே தொலைத்த முடவனாய்,,, எங்கள் மரணத்தில் நீங்கள் மகிழ்ந்து மலர்ந்து கொண்டால்தான் உங்கள் சந்தோசம் என முடிவாய் தெரிந்த பின்பும்... இனி எப்படி எதிர்ந்து எங்களால் போராட முடியும்  இருப்பினும் நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன் பதில் அவசியம் சொல்லுங்கள்

          உயிரை தொலைத்து, உறவுகளை தொலைத்து, நிற்பதைபோல் மனதில்
மரண பயத்தை கண்ணில் காட்டி, மனித குலத்தை மிரள செய்துவிட்டார்கள் கூடங்குளத்தில் அனு உலை நிறுவி விட்டார்கள் மண்டியிட்டு, மல்லாட வேண்டுகிறேன் நீதிமான்களையும் நேர்மையுடைய மனித எண்ணங்களிடம் வெளிநாட்டுக் காரனிடம் பணம் வாங்கிவிட்டதாக பொய்மையோடு புரளி பேசுகின்றவர்களும் கூடங்குளத்தை பற்றிய எனது கேள்விக்கு அவசியம் விடைசொல்லுங்கள்

       கூடங்குளம் அச்சத்தை போக்க வேண்டும் என கருணாநிதி தொடங்கி ராமாஸ் தெருமாவளவன் இன்னும் கோவணங்கூட ஒழுங்கா கட்டத்தெரியாத நடிகர் சரத்தகுமார் வரை அச்சத்தை போக்கவேண்டும் என சொல்கிறார்கள்

      இடிந்தகரை போராட்டம், அச்சத்தால் எழுந்த போராட்டம் அல்ல என அச்சம் வேறு அறிவு படைத்த மனிதன் தெளிவடைவது வேறு அச்சம் என்பது, இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொள்வதால் ஏற்படுவது வேறு ; அறியாமையால் ஏற்படுவது வேறு. அதனால்தான அவ்வையார் ‘அச்சம் தவிர்’ என்றார். ‘அச்சமில்லை, அச்சமில்லை’ என பாரதிகூட பாடினான் அச்சம் என்றால் பயத்தினால் வருவது அச்சம் என்ன அதை முதலில் விளக்குவார்களா? மக்களிடம் ஓட்டுக்கேட்க மட்டுமே வரக்கூடிய இந்த தந்திரக்கார அரசியல் நடிகர்கள்.


         இன்று கூடங்குளத்தை எதிர்ப்பவர்கள் தேசதுரோகியாம் ஆம் இந்திய தமிழக ஆட்சிகட்டில் அமர்ந்திருக்கின்ற அரசியல்வாதிகளே எங்களைபோன்றோர்கள் உங்களுக்கு தேசத்துராகியாக தெரிந்தாலும் சரிவர படிக்கத்தெரியாத கூடங்குளத்தை சுற்றியுள்ள எம் பாமர தமிழ்சாதி எழுப்புகின்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அனுவிஞ்ஞானியாக இருந்தாலும் அல்லது அவுங்க ஆயாவிட்டு விஞ்ஞானியாக இருந்தாலும் கட்டாயம் சொல்லுங்கள் அரசியல்வாதிகளே பார்ப்போம்

          எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.இருப்பினும் தமிழர்கள் வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நாம் இப்போது கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே இனிமேலும் வாடகை மூச்சில் வாழாது அதற்குள் ஒரு உறுதியான முடிவு எடுக்க வேண்டும் நம் எதிர்கால சந்ததியினர் நலமாக நிம்மதியாக வாழ,,,

           இருப்பினும் எதிர்காலம் என்றுமே இனி தமிழனுக்கு ஒரு கேள்விக்குறிதான் அதில் இனி மாற்றமில்லை. தமிழகத்திற்கு இனி மிஞ்சி இருக்கும் காலம்தான் எத்தனை, அதில் என்னென்ன நடக்க இருக்கிறது நினைத்தால் பயமாக இருக்கிறது


         அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன கேரளாவில் ஆனால் பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு நம் எதிர்காலத்தையும் இனி அடுத்து வரும் சந்ததியினரையும் அச்சுறுத்தக்கூடிய, ஒட்டுமொத்த தமிழகத்தையே சுடுகாடாக்கக் கூடிய பேரழிவான - கூடங்குளத்தில் 2 அணு உலைகள் விரைவில் இயங்கபோகிறது. அவை போதாதென்று இன்னும் 4 அணு உலைகளையும் அங்கேயே அமைப்பதென்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறது இந்திய அரசும் அதற்கு மறைமுகமாக கூசாதூக்கும் தமிழக அரசும் கூடவே தந்திரக்கார கருணாநதி தமிழின துரோகி தெருமாவளவன் குவாட்டர் பாட்டிலுடன் அலையும் விசயகாந்த் முதல்வர் செயலலிதா போன்றவர்கள்

கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான் 
என்ற பழமொழையை மெய்ப்பிக்கும் வகையில்

இதுநாள்வரை மறதி என்ற நோய்பிடித்த தமிழக மக்களின் நிலைமை நன்கு புரிந்துகொண்டு , தேர்தலின் போது, பல இலவச அறிவிப்புகள் அறிவித்துவிட்டு ஹி ஹி என பல் இளித்து கொண்டு காலில் விழுந்து கெஞ்சி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளே இனி தயவுசெய்து பாராளுமன்ற தேர்தலுக்கு கூடங்குளம் பக்கம்வரவேண்டாம் காரணம் காலில் கிடைப்பதை தலையில் அடிக்கும் அளவிற்கு துணிந்துவிட்டார்கள் கூடங்குளத்தில் பலர்

அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
என்ற கதையாய்

       இதுநாள்வரை காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு இப்படி தமிழனின் வாழ்வாதார பிரச்சனைகளைப்பற்றி கவலைப்பட்டு போராடிக் கொண்டிருக்கிருப்பதாய் வெறும் வெற்று வேசத்தோடு கொடிமட்டும் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டமும் போராட்டமும் உண்ணாவிரதமும் இப்படி பதவியை பகட்டாக பந்தாவாக கழிக்க மட்டுமே முடிகிறது நம் தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும்.

     உறவுகளே நம் தமிழகத்தில் வாழுகின்ற நம் சொந்தகளின் கலங்கத்தை துடைத்தெறிவோம் இனிமேலும் நாம் கண்ணீர்  சிந்தவோ அல்லது கோழைகள் எடுக்கும் அவசர முடிவான தீக்குளிப்போ எடுக்க மாட்டோம் ஒருபோதும் புலிக்கு பிறந்த புலிகள்தான் நாம் என்பதை உணர்த்த எப்போதும் வேண்டுமானாலும் கரும்புலியாக மாறுவோம் என்பதை காலம் ஒருநாள் உணர்த்தும் அப்போது உணர்ந்து கொள்ளுவார்கள் இந்த அரசியல்வாதிகள்,,,

             கூடங்குளம் மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்திய அரசையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் நாம் ஏன் மதிக்க வேண்டும் என்ற கேள்வி வின்னை முட்டி இடி முழக்கமாய் மாற வேண்டும். அந்த இடிமுழக்கம் இதுநாள்வரை தமிழ் தமிழர் என்று சொல்லி காலம் கழிக்கின்ற யாவரும் நமது கோரிக்கையை மதிக்கும் வரை தூங்கிடாமல் செய்யும்படி இருக்க வேண்டும்

    முட்டாள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நம் கையில் கொடுத்துவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் தலைவனை இனி குறைசொல்லி என்ன பிரயோசனம்

    இதற்கு மாறாக இனி ஒருபோதும் பேரணிகளும் , மனிதச் சங்கிலி பேராட்டமும் ஆர்ப்பாட்டமும் நாம் செய்தால் அந்த தகவல் பதவியில் மிதக்கின்ற தமிழகத்தை சேர்ந்த எம்,எல், ஏ, எம்,பி, போன்றவர்களின் குப்பைக் கூடைக்கு நேரடியாகச் செல்லும் அதான் உண்மை

        என்னை போன்றவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சராசரி இந்திய குடிமகன் என கருதி என் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் சொல்லாவிட்டால் அதன்பின் என் பதிவை பாருங்கள் எப்படி இருக்கும் என் கோபமும் வேதனையான வெளிப்பாடும்

         அப்படி என் உணர்வுகளை மதிக்காமல் இருந்தால் நான் ஏன் கருணாநிதி செயலிதா ராமதாசு தெருமாவளவன் போன்ற அரசியலில் அங்கம் வைக்கின்றவர்களை நான் ஏன் மதிக்க வேண்டும் இன்னும் கேவலமாகத்தான் எழுதிட தோன்றும் எனக்கு


         கூடங்குளத்தை பற்றி என்னை போன்ற சராசரி மனிதனாக பல கேள்விகளை கேட்டால் வெளிப்படையாக பதிலளிக்காமல், “இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்கு யார் தயாரித்துக் கொடுத்தார்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியிருகின்ற மானங்கெட்ட கேடுகெட்ட பல சின்ன வீட்டில் குடும்பம் நடத்துகின்ற துரேக அரசியல்வாதிகளே தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற யாராவது விளக்கம் சொல்லுங்கள் பார்ப்போம் கூடங்குளம் தொடர்பான என் கேள்விகளுக்கு,,

      இதற்கிடையில்  உண்மை புரியாமல் கூடங்குளம் செயல்பாடாமல் தடுப்பது வெளிநாட்டு சதி பணத்தை வாங்கிகொண்டு போராடுகிறார்கள் என போராட்டத்தை கொச்சை படுக்கின்றவர்கள் அருகில் இருந்து பேசும்போது பேசுகின்றவனின் குடலை குத்தி கிளிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலாங்கிறது,,

     அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும்

காலம் இந்த அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் பதில் சொல்லும் நிச்சயம்

ஆதால் கூடங்குளம் தொடர்பாக எனக்கு எழுந்துள்ள சந்தேகங்களை ஒரு சராசரி இந்திய குடிமகன் என்ற முறையில் இதை படிப்பவர்களும் மத்திய மாநில ஆட்சி பங்கீட்டில் உள்ளவர்களும் அவசியம் பதில் தாருங்கள்

கேள்விகள் யாவும்
கூடங்குளமும் தமிழக அரசியல்வாதிகளும் ஒரு மனநோயாளியின்  குமுறல், பாகம் 2  பாருங்கள்

நன்றி உங்கள் சிந்தனையைகளையும் 
 பதிவின் குறைகளையும் உரிமையாய் பேசிட

சிகா, 9047357920

7 comments:

  1. வேதனையின் வெளிப்பாடு...inquilab zindabad!!

    ReplyDelete
  2. என்று முடியும் கூடங்குளம் பிரச்சனை.....


    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. வேதனையின் வெளிப்பாடு...... பதிவெங்கும்.. கூடங்குளம் மக்களின் மனவெழுச்சிகளை அப்படியே படம்பிடித்து காட்டுகிறது உங்களின் பதிவு..

    ReplyDelete
  4. இது ஒவ்வொரு தமிழ் நாட்டில் உள்ளவனுக்கும் உரைய்க்கணும் .உணர்வு இல்லாதவன் நம் தமிழ் இனத்திற்கு சாபக்கேடு

    ReplyDelete
  5. neenga indhu munnani pathi onnum sollalaye

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..