Monday 12 March 2012

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!
                      
          நான் வைத்திருக்கும் தென்றல் கணினி கலைக்கூடம் எதிரில் டாஸ்மாக் அரசு சாராயக்கடை இருப்பதால்
                             
           அதிகாலையிலிருந்தே டாஸ்மாக் கடைவாசலில் காத்துக்  கிடந்து காப்பி குடிப்பது போல விஸ்கி, பிராந்தி குடிக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு வானலாவிய  கோட்டை கட்டி கொடிகட்டி  நாகரிக உலகிற்கு முன்னோடியாக வாழ்ந்த எம் தமிழினத்தை  இன்று போதை எனும் மயக்கத்தினால், மதியை இழக்க வைத்த அரசியல்வாதிகளால் தன் இனம், மொழி, கலாச்சாரம் இவையனைத்தையும் குற்றுயிரும் குலையுயிருமாய் குழிதோண்டி புதைகுழியில் புதைத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்

              இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுத்து வாழவைப்பது தமிழனின் குணம் என்பதாலும், நல்ல சிந்தனைகளோடு, வாழ்வில் தமிழர்கள் முன்னேற வேண்டும் எனவும், அறிவை வளமாக்கும்  பலவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொண்டு, தமிழர்கள் வளமாக வாழ வேண்டும் என்பதற்காகவும் அறிவை பிறரிடமிருந்து கற்று மகிழ்வது எல்லாவற்றையும் விட மேன்மையானது என்ற குறிக்கோளுடன் எனக்கு எட்டிய அறிவோடு சில  பதிவு எழுதி வருகிறேன்   இணையத்தில்.

                தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல்வாதிகளின் குறைகளையும் சுட்டிகாட்டி தவறுகளை திருத்திக்கொண்டு தமிழர்கள் வளர்ச்சிக்காக இனிமேலாவது உருப்படியாய் எதாவது செய்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையுடன்

        இன்றுவரை  நெஞ்சினிக்க வாய் திறந்து தன் வசீகர பேச்சால் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இலங்கை கொலைகாரனுக்கு உதவிய குறளுக்கு  குறளோவியம் தீட்டிய  வாழுகின்ற வள்ளுவர் கருணாநிதி, தான் எழுதிய ''கள்ளுண்ணாமை''   எத்தனை தமிழ்சாதிக்கு பின்றபற்ற வழிவகை செய்திருப்பார் என்பது அவரின் மனசாட்சிக்குமட்டுமே வெளிச்சம்

      தரகர் கலாம், சுப.வீ, வீரமணி, சீமான் ,ஜெயலலிதா, போலி கம்யூனிஸ் கையேந்திகள் இப்படி பல அயோக்கியர்கள் அங்கம் வைக்கும் கூடாரமாகிப்போன அரசியல்வாதிகளைப்பற்றி குறைகளை விமர்சித்து பதிவு எழுதி வருகிறேன்

தோட்டக்காரன் சும்மா இருந்தாலும்
தொன்னை நக்குரவன் சும்மாஇருக்கமாட்டானாம்
                                                           என்ற கதையாய் 

           கலாமின் சில கைத்தடிகளும், வாழும் வள்ளுவர் என சில புள்ளுருவிகளால் இன்றும் புகழப்படுகின்ற கலைஞரின்  கழக உடன்பிறப்புகளும், என்னுடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு இரவு பகல் பாராமல் பல தடித்தனமான வார்த்தைகளால் திட்டுவதை தவிர்த்துவிட்டு பல ஆதரத்துடன் நேரில் விவாதிக்கலாமே அல்லது  என்னுடைய பதிவுக்கு பல ஆக்கபூர்வமான மறுப்பு பதில் எழுதுங்கள் அதையும் மீறி எனது பதிவு உங்கள் மனதுக்கு மனம் வருந்தும்படியாக இருந்தால்

காவல்நிலையத்தில் புகார் செய்யலாமே

      காரணம்  சிறை என்பது  வரண்டுபோன என் இதயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இதமாய் பழுதுநீக்குவதற்கு பயிற்சி பட்டரையாகவும், வெறும் இருளை மட்டுமே துணையாய் வைத்துக்கொண்டு என் தமிழ்சாதியை வளர்த்தெடுக்கும் ஓர் சிற்ப கூடமாய் சிறை என்பது நிறைவான  இடமாக  கருதுபவன்  நான்

       புளியம் பூவாய் என் மனது உதிர்ந்துபோகாமல் மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்த இடர்களையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கும் கலையை கற்றுக்கொடுத்துவிட்டது எனக்குள் ஈழத்தின் நிகழ்வு. எனது முயற்சி தொடங்கியாயிற்று தாமதமாகவே என்றாலும்

இன்றைய பத்திரிக்கைகள்
      
      காமம் தலைக்கு ஏறும்படி பல சமுதாயத்தால் எடுத்துக் கொள்ளாத மயக்க வழி காட்டி பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லாமல் கொஞ்ச நாட்களாகவே  ஐஸ்வர்யாவுக்கு பிறப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என பரிசுபோட்டிகள் நடத்துகின்றன   பத்திரிக்கை சுதந்திரம்தான் இப்படி கேவலம் என்றால்

திரைப்படம் ஊடகம்

அறிவுக்குப் பொருந்தாத, பல ஆபாசக் கதைகளைச் சொல்லி திரைமறைவில் நடக்க வேண்டியதை திரையில் போட்டுகாண்பித்து   ஆண்டுக் கணக்கில் மனித மூளையை மழுங்கடித்துக்கொண்டிருக்கின்றது

               கல்லூரி முடிக்குமுன்னே கண்டதையும் பார்த்து  எதிர்கால கனவுகளை மறந்து ........ எல்லாமே முடித்துவிடுகிறார் தனது இளம் வாலிப வயதில் அனைத்தையும் கற்றுக்கொள்ளக்கூடிய  ஒரு காம பள்ளியறையாக மாறிவிட்டது இன்றைய திரைப்படம்.

                  குஞ்சு மிதித்து கோழி முடமானதாய் முதியோர் இல்லங்களை துவக்கின்ற வாழ்க்கை  மாறிவிட்ட நிலையில்

     பத்து பைசா வட்டிக்கு கடன் வாங்கி உச்சி வெயிலில் கூலி வேலை பார்த்து கல்லூரிக்கு அனுப்பி வைத்த அம்மா தன் மகனைப்பற்றிய எதிர்கால ஆசை கனவெல்லாம் தூள் தூளாகி போய்விட்டது. ஆம் சமீபத்தில் பலர் 10வருடங்களுக்கு முன்பு M.Sc. M.Phil. M.PEd  படித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து இருக்கின்ற நிலையில் போன வருடம் B.Sc., படித்துவிட்ட தொடர்ந்து இந்த வருடம் M.Sc., படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்கள் பல லட்சம் பணத்தை கொடுத்து அரசு வேலை வாங்கிவிட்ட கொடுமை தமிழகத்தில்தான் நடந்துள்ளது.
                   
      இன்னும் 25 வருடத்துக்குள் தமிழ்மொழி முற்றிலுமாக அழிந்துவிடும் சூழலில்  அரசு வேலை பார்க்கின்ற அனைத்து அரசு பணியாளர்களும் தன் பிள்ளைகளையெல்லாம் தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு ஒரு வருடத்தில் சாப்பிட்டதை 3 மணிநேரத்தில் வாந்தி எடுக்க சொல்வதாய் சமுதாய வளரச்சிக்கும் தமிழ் இன வளர்ச்சிக்கும் ஒவ்வாத முறையில் கல்வி முறைகளை மாற்றினால் மட்டுமே சொற்ப தமிழினம் தழைக்கும்என்பதை  நாம் அனைவரும் அறிந்தாக வேண்டும்.

   தமிழ் மக்களை வழிநடத்துகின்ற அரசியல்வாதிகள்

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே
தோரணம் ஆனது வாழை!  என்ற கதையாய்
                        என் தமிழ்சாதிக்கு   

     ஆடு, மாடு, கோழி, டீவி, கிரைண்டர், மிக்சி  போன்ற இலவசங்களை கொடுத்துவிட்டு  அறிவித்த இலவசங்கள் தருவதற்கு இப்போது கிராமம்தோறும், வீதிதோறும்  டாஸ்மாக் கடைகள் திறப்பதில் அரசு மும்முரமாக இருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆடு, மாடு, கோழி, மிக்ஸி, கிரைண்டர்  நிச்சயம் உத்தரவாதமாக உண்டு என்பது போல ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரனை உருவாகியே தீருவோம் என்ற அம்மாவின் பொற்கால ஆட்சியை என்னால் புகழாமல் இருக்க முடியவில்லை.

                        பெற்ற அப்பனை முழு குடிகாரனாக்கிவிட்டு பிள்ளைக்கு சத்துணவில் வாரத்திற்கு 4 முட்டைகள் வழங்கிவிட்டு கனவனை முழு குடிகாரனாக்கி கொஞ்ச கொஞ்சமாக சாகடித்துவிட்டு மனைவிக்கு  மாதந்தோறும் விவதைகள் உதவித்தொகை மற்றும் இலவச சேலை வழங்குவது  யாருக்குத்தான் பெருமை தாயுள்ளம் கொண்ட  முதல்வரிடம் யாராவது எடுத்து சொன்னால் மிக்க நன்றி

                  மாநிலம் முழுவதும் 7,696 மதுபானக் கடைகளை திறந்து, அனைத்து 'குடி'மகன்களுக்கும் 'தண்ணீர்' தட்டுப்பாடு இல்லாமல் இருக்க தேவையான அனைத்து முனைப்புடன் செயல்படும் அம்மாவின் பொற்கால ஆட்சியில் நாமும் வாழ்வதை எண்ணி பெருமை கொள்வோம்.

   டாஸ்மாக் வருமானம் எந்த வகையிலும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அதிகாரிகளின் முக்கிய பணி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 7 நாட்கள், பீர்வகைகள் 3 நாட்களுக்கு மேல் கடைகளில் இருப்பு வைக்காத அளவிற்கு மட்டுமே சரக்குகளை அனுப்ப வேண்டும் என சிறப்பாக சுறுசுறுப்புடன் செயல்படும் அரசு கேந்திரத்தை என்னவென்று சொல்வது

       75 லட்சம் பேர் தினமும் மது குடிப்பவர்களாக  தங்களது தினசரி வருமானத்தின் 90 சதவிகிதத்தை குடிப்பதற்கு செலவு செய்து,  தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு விற்பனையாகும் மதுபானங்களின் மதிப்பு  60 கோடி ரூபாய் விற்பனையாகி. தமிழ் மக்களை பலரையும் இன்றைக்கு குடிமகன்களாக ஆட்சியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் மாறி மாறி  அரசே ஊழியர்களை நியமித்து  கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் பெருமை  தமிழக  முன்னால் இன்னால் முதல்வர் அவர்களைசேரும்.

     தாங்கி நிற்க முடியாத அம்மாவின் வருமையால் இன்றும் தமிழகத்தில் பல வீடுகளில்  பல அக்கா, தங்கச்சி தன் வயிற்றில் பிஞ்சு குழந்தை சுமக்க வேண்டிய வயதில்  குடிகார அண்ணன் அப்பாவினால் பல வருடமாக ஜன்னல் ஒரத்தில் தனக்கென ஒரு நல்ல மாப்பிளை வர மாட்டாரா என  ஏக்க பார்வையுடன்  பல முதிர் கண்ணிகள்  வயிற்று பசிபோக்க வயிற்றில் தென்ன பஞ்சு சுமந்து, கயறு தொழில் சாலையில் வேலை பார்ப்பது தாயுள்ளம் கொண்ட இந்த அம்மாவுக்கு  எப்படியாவது தெரியபடுத்துங்கள் எம் தமிழ் உறவுகளே!

        என்னை பெற்றெடுத்த அம்மா நான் வாழும் வாழ்கையை பார்ப்பதற்கு இன்று உயிருடன் இல்லாவிட்டாலும்

            உலகில் எங்கும் நடக்காத அதிசயமாய்  அறிவை வளர்க்கும் கல்வியையும், உயிரை காக்கின்ற மருத்துவத்தையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு சாராயம் காய்ச்சி கொடுக்கின்ற  தமிழக முதல்வர்  அம்மா  இன்னும் என்ன என்ன செய்ய போகிறார்களோ  என நினைத்து அவல தமிழகத்தில் நானும் இருப்பதை என்னி மிகவும் வருத்தப்படுகிறேன்.

      நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும்  புகையை மதுவையும் தாராளமாக்கிவிட்டுமது அருந்தி வண்டி ஓட்டாதீர் என சொல்லும் காவல்துறையின் கையாலாகத தனத்தை தினசரி பாருங்கள் சாலையின் விளம்பரத்தில்

       இன்று தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு எவ்வித முயற்சியும் செய்யாத முதல்வர் செயலலிதாவிற்கு தனது 64வது பிறந்த நாளில் பாரதி கண்ட புதுமை பெண், தாயுள்ளம் கொண்ட அம்மா, மாசியில் பிறந்த மகராசி, தமிழினத்தின் நடமாடும் கடவுள்,  தமிழகத்தின் அதிசயமே வள்ளுவன் நெறிதவறா கலங்கரை விளக்கமே என பல ஆதாயம் பெறும் அரசியல்தடிகளுக்கு நான் எனது கையினால் டிசிட்டல் பேனர் வடிவமைத்து கொடுத்தது கொடுமையுலும் கொடுமை

       இன்று அரசு  பள்ளிகள் பல ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு, மதுக்கடைகள் பல ஆயிரக்கணக்கில் திறக்கப்பட்டுவிட்டன இதன் மூலம் இளைய சமுதாயத்தை குற்றச் சமூகமாக ஆண்ட, அளுகின்ற இன்றைய அரசுகள் முற்றிலுமாக  மாற்றிவிட்டன

 ஏழை மக்களும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள்தோறும்  கல்விக் கூடங்களை திறந்து வைத்த, படிக்காத மேதை காமராஜர் தமிழ்நாட்டில்தான் பிறந்தார் என்பதை மறந்து இன்று பார் ஏலம் எடுத்து நடத்திக்கொண்டிருக்கின்ற பல  கைகூலி காங்கிரஸ்காரர்கள்  நினைவுவைத்துக்கொள்ளுங்கள்.

       ஒரு தனிமனிதனுடைய வளர்ச்சியில் அக்கரை செலுத்தி வாழ்வில் சாதனைகள் புரிய வைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், குடும்பத் தலைவரையும் குடிக்கு அடிமையாக்கி, எதிர்கால இளைஞர்களை குடியில் சாலையில் தள்ளாடவிட்ட அவலம் தமிழகத்தில் நிகழ்கின்றது,

நீயும் நானும் சொந்தமாக தயாரித்தால் அது  கள்ளச்சாராயம்
 அதை அரசே தந்தால் நல்லச்சாராயம்

   ஆறு, குளம், குட்டை இவை அனைத்தையும் பராமரிக்காமல் வரப்போகும் கோடைகால தண்ணீர் பற்றாக்குறைகளை பற்றி கொஞ்சங்கூட கவலைகொள்ளாமல் மதுபானங்களிடமிருந்து மக்களை காப்பதைவிட, அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம்  என்ற முனைப்புடன் மாநிலம் முழுவதும் 7,696 மதுபானக் கடைகளை திறந்து, அனைத்து 'குடி'மகன்களுக்கும் 'தண்ணீர்' தட்டுப்பாடு இல்லாமல் இருக்க முனைப்புடன் செயல்பட்ட கலைஞர்  செயல்படுகின்ற தமிழக முதல்வர் செயலலிதா நம் தமிழ்சாதிகள் என்றென்றும் மறக்க கூடாது.

          பல குடும்ப பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை  கொடுத்துவிட்டு எவன் தாலி அறுந்தால் எனக்கென்ன   என்று இரவு 11 மணிவரை மது விற்பனையை நீடித்து பல குடும்ப பெண்களின் தாலியை அறுத்து விதவைகளின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்கின்ற டாஸ்மாக் சாராயக்கடை யை சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருக்கின்ற  இன்னால் முன்னால் முதல்வர்கள் என்றும் தமிழின சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறுவார்கள்.
      
                 இன்று பள்ளிகள் பல ஆயிரக்கணக்கில் மூடப்பட்டு, மதுக் கடைகள் பல ஆயிரக்கணக்கில் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் இளைய சமுதாயத்தை குற்றச் சமூகமாக இன்றைய அரசுகள் மாற்றிக் கொண்டிருக்கிறது என்னதான் திறைமையாக படித்த ஏழைகள் பாஸ் மார்க் வாங்கினாலும்  கிளாஸ் பாட்டில் கழுவிடும் வேலைக்குகூட பல  லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் தமிழகத்தில்

 மாண்டுபோன எம்,ஆர்  மீண்டு வந்து இந்த அம்மாவுக்கு சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டடார் . ஆதால் நாம் தான் ஏதாவது செய்தாக வேண்டும்
 
செருப்புக்கு ஏற்ப காலை வெட்டுகின்ற  
வேலைய இந்த அரசு செய்தாலும்

   ஏதாவது செய்து இந்த தமிழினம் தழைக்க எதாவது செய்யுங்கள் எம் தமிழ் உறவுகளே.

     இதை படிக்கும் தமிழ்உள்ளங்கள் எதாவது மாற்றுவழி சொல்வீர்கள் என்ற அதித நம்பிக்கையில்

சிகா, லெனின்
கீரமங்கலம்
9047357920

Friday 2 March 2012

மாணவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் கல்வி நிறுவனங்களும் வங்கி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்

             தானும் தன் குடும்ப வளர்ச்சிக்காக தன் இனத்தின் மீதும், தமிழ்மொழியின் மீதும் எவ்வித அக்கரையும் இல்லாத நிலைக்கு நம்மை தள்ளிவிட்ட பல அயோக்கிய அரசியல்வாதிகளினால்  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என  பல்லாயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் இன்று முற்றிலுமாக துரோகிகளால் அழிக்கப்பட் நிலையில்

          தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தனக்கு மட்டுமே உரியது என கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக மங்காத புகழோடு  பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக இன்றும் கொண்டு சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை மட்டும் இன்றும்கூட கொஞ்ச கொஞ்சமாக இறந்தகாலத்திற்கு முடிசூடிட காத்திருக்கின்ற இத்தருனத்தில்.

                       அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது நம் தமிழர்களின் அனைவரின் கடமை..  என்ற உணர்வோடு எனக்கு சரிவர எழுத படிக்க தெரியாததினால் பல எழுத்துபிழைகளுடன்  எனது இந்த  பதிவு...

           தினசரி ஊழலால் பெருமை தேடிக்கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தில், வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் பல மாணவர்களும் ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவந்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கையில்

              மாண்ட பின்பும் மனிதன்  பிரயோஜனமற்றுப் போவார்கள் என்பதை மறந்து இன்றுவரை சுய சிந்தனை அற்ற முட்டாள்களாய்  மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த ஏமாளியாய் பல மாணவர்களை ஆக்கிய பெருமை யாரைசேரும் என என்னிடம் கேட்டால் நான் சொல்லுவேன் பல ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் சேருமென ஒற்றைவரியில்,, ஆம்
                 
           நேற்றைய செய்தித்தாளில் 9வது படிக்கும் 15 வயது  மாணவன் தனது சட்டை முன்பகுதியில் பீர் பாட்டிலை மறைத்து சைக்கிளில் சென்றபோது அது குழுங்கி வெடித்ததினால் உயிர் பறிபோகும் சோகம் நேர்ந்தது. அதற்கு காரணம் ஆசிரியர்களா? அல்லது உயிர்காக்கும் மருத்துகளையெல்லாம் தனியார் வசம் கொடுத்துவிட்டு உயிரை எடுக்கின்ற மதுவை தரமான முறையில் தயாரித்து தங்குதடையின்றி இரவு 11 மணிவரை  கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளா?  என குழம்பியபோது எனக்கும் ஒரு குவாட்டர் அடிக்க ஆசை வந்துவிட்டது.

          பள்ளி மாணவன் கத்தியால் குத்தி ஆசிரியர் படுகொலை நிகழ்த்தியபோது ஆசிரியர் இனமே பொங்கி எழுந்தது, கண்டன பேரணியோடு கண்ணீர் தழுவியது.
    
    இடமாறுதலில் முறைகேடு நடக்கிறதை கண்டித்தும் 5வது 6வது 7வது என சம்பள கமிசனை நடைமுறை படுத்து எனவும் மத்திய அரசு ஊழியருக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும் என பல போராட்டம் நடத்துகின்ற ஆசிரியர்கள்
   
     தமிழகத்தை தலைநிமிரச்செய்யப்போகும் இந்தம்மா ஜெ அடித்துவைத்த 100 கோடி புத்தகங்கள் மூளையில் முடக்கி போட்டுவைத்திருப்பதை பற்றியே, சமச்சீர்கல்விக்காக 150 நாட்களுக்குமேல் பள்ளியில் பாடம் நடத்தாமல் இருந்தபோதும் எத்தனை ஆசிரியர்கள்  வீதியில் இறங்கி போராடினார்கள், அல்லது கவலைபட்டார்களா?
     
     காரணம் அரசு வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களின் மகன், மகளை நம்பியே காசுபார்க்கும் பல தனியார் பள்ளிகள்  இயங்குவதால்  அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.

        தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என சட்டத்தில் உள்ளது அதை யாரும் இதுநாள்வரை எந்த பள்ளிகளிலும்  பின்பற்றுவதில்லை
 
        பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் 25 சதவீதம் அளிக்க வேண்டும் அதற்கு ஆதரவாகவோ அல்லது அதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வையோ எந்த ஆசிரியராவது பாமர தமிழ்சாதியிடம் கொண்டு சேர்க்கவில்லை ஆனால் விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த வேண்டும் என தெருவில் இறங்கி போராட்டம் மட்டும் செய்கின்றனர் ஒற்றுமையுடன் ஆசிரியர் கூட்டணி

    முளைக்காத தானியங்களைப்போல் சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகன் அருகே அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி  இளஞ்சிறார்களுக்கு பகலில் மட்டுமே கனவுகானச்சொன்ன நம்ம கலாம் அவர்களோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதிகளோ இதைப்பற்றி கவலைப்பட்டுள்ளனரா?

      குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோருக்கோ அல்லது மாணவருக்கோ தேர்வு நடத்தக்கூடாது. இண்டர்வியூ நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் முதல் முறையாக தலைமை ஆசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் மீண்டும் அந்த தவறை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இதைமட்டும் நடைமுறைபடுத்தினால் விதிக்கின்ற அபதாரத்தின்மூலம் வருடத்திற்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துவிடும் தமிழக அரசுக்கு

      இப்போதெல்லாம் பழைய காலத்தைபோல் யாராவது ஒரு ஆசிரியராவது எதாவது பொதுத்தொண்டுக்கு செய்து வந்துள்ளார்களா?  என்பது காலத்தின்  உண்மைக்கு மட்டுமே வெளிச்சம்

             மாணவர்கள் வாழ்வில் தானும், தன் குடும்பமும் குறையேதும் இல்லாத நிறைவான வாழ்க்கை  தரக்கூடிய கல்வி  கற்றுக்கொடுக்ககூடிய ஆசிரியர்கள்  பலர் டாஸ் மாக் பார் ஏலம் எடுத்து நடத்திவருகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது இதுதான் கொடுமையிலும் கொடுமை
             
      இப்போதெல்லாம் மனிதனாக பிறந்து வாழ்க்கையை நன்றாய் ருசித்து வாலிபப் பருவத்தை ஓட்டி முடிப்பதற்கு  தடையாய் இப்போதெல்லாம் வசதிபடைத்த எந்த தாய், தந்தையும் நாமக்கல், திருச்சங்கோடு போன்ற பள்ளியெனும் சிறையில் குறைந்தது 10 வருடம் அடைத்து படி, படி என கொடுமை படுத்துகின்ற அவலத்தை  என்னவென்று சொல்லுவது.

        கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திக்கொள்ளக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான்  கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை அப்படி கிடைக்கவேண்டும் என்றால் நம் தழிழினத்தை கொன்றொழித்த காங்கிரஸ்காரன் உதவி , வேண்டும் அல்லது அரசியல்வாதிகளின் அனுசரனை வேண்டும்

      தான் ஒருவன் கல்வி கற்பதால் ஒரு சிறைசாலை மூடப்படுகிறது என்ற பழைய கதையை புறந்தள்ளும் விதமாக எதிர்காலத்தில் மாணவர்கள் பலர் கொலைசெய்டும்  எண்ணத்தை  உருவாக்கி சிறைச்சாலையை நிறைய திறந்திட வழிவகை செய்ய வேண்டாம் அரசியல்வாதிகளே ஆசிரியர்களே

        பல முறை கல்விக்கடனு்ககாக அலைந்தபோது இப்போது கல்விக்கடன் கிடையாது என திரும்ப திரும்ப முடிவை சொல்லுகிறார்கள் பேங்க் அதிகாரிகள்
முற்றும் முடிந்துபோன கதையாய் திமிராய் சொல்வதால்

     கோபம் முற்றிபோவதால்  கொலைகூட செய்யும் அளவிற்கு  தவறான பாதைக்கு பல மாணவர்களை எண்ணங்கள் மாறிவிடுகின்றன என்பதுதான் கொடுமை
    கல்விக்கடன் கிடைக்காததினால்
கைக்குட்டைதான் எனக்கு உதவியது என பல மாணவிகள் கண்ணீர்  துடைத்துக்கொண்டு போகும் பரிதாப நிலையை என்னவென்று சொல்லுவது இது யார் குற்றம்

    படித்துவிட்டு எதையோ தேடி எதையோ பெறுவதற்காக கவுரவத்திற்காக பல பெற்றோர்கள் பால்மாட்டை நம்பி விற்று பணம் கட்டி தன் பிள்ளைகளை பஸ்சுக்கு கூட கொடுத்துவிட காசில்லாம் அல்லல்பட்டு படிக்க வைக்கின்ற கொடுமை தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது

பல மாணவர்கள் தோல்வியின் சோகத்திலிருந்து விடுபட முயற்சி செய்து   தன்னோடு தன் எதிர்கால வாழ்வை  ஏமாற்றிய அரசியல் வாதிகள் நிறைந்து வாழுகின்ற போது தான் வாழும் வாழ்க்கை தேவையா என தன்னையே சாம்பலாக்கிகொண்டது எத்தனை ஆசிரியர்கள் மற்றும் கல்விக்கடன் கொடுக்க மறுக்கும் பேங்க் அதிகாரிகளுக்கு தெரியும்

    நம் பாமர தமிழ்சாதி பாதியில் சிந்திக்க மறந்துவிடும் காரணத்தால், அவ்வப்போது ப, சிதம்பரம் அள்ளிவிட்ட வார்த்தைகளில் சில

    2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார் அதை எத்தனை பேங்க் அதிகாரிகளாவது பின்பற்றினார்களா?
(அல்லது)
    2009-10-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இதை யார் இப்போது பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

            எந்த வங்கியேனும் 2009-10-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பார்கள் என சொன்னார்கள் யாரும் இதைப்பற்றி இன்றும் கருத்து கூறுவதில்லை

      அதே சமயத்தில் 2008-09-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்றவர்கள் அனைவரும் வட்டி செலுத்த வேண்டும். இதில் எவ்விதத்தில் ஞாயம் சொல்லுங்கள்

              கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்பெக்ரம் வழக்கில் கரைபடிந்த சிதம்பரரம் கையினால் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மாவட்டத்தில் மட்டும் 4369 பேருக்கு ரூ.37.79 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது  வாங்கிய கல்விக்கடனக்கு அனைவரும் வட்டி கட்டிகொண்டுதான் வருகிறார்கள்

ஏதோ நம்மாள்  முடிந்ததொன்றை அழகாய் கல்வி அறிவின்மூலம் இந்த பூமி பந்தில்  மாற்றுவதற்காக
படிக்கின்ற பலமாணவர்கள்
நொந்து நூலாகி மனம் வெந்து
கந்தலாகி தன் எதிர்கால கடமை மறந்து,
துயரத்தில் மூழ்கிய தனக்காக கடன்வாங்கிய அம்மா அப்பாவை நினைத்து
எண்ணித் துணிக கருமம்... என்ற வள்ளுவன் சொல்லை மாற்றி கொலையும் செய்வார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள் அரசியல்வாதிகளே,  ஆசிரியர்களே

மாணவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் கல்வி நிறுவனங்களும் வங்கி அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்

      தானும் தன் குடும்ப வளர்ச்சிக்காக தன் இனத்தின் மீதும், தமிழ்மொழியின் மீதும் எவ்வித அக்கரையும் இல்லாத நிலைக்கு நம்மை தள்ளிவிட்ட பல அயோக்கிய அரசியல்வாதிகளினால்  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என  பல்லாயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் இன்று முற்றிலுமாக துரோகிகளால் அழிக்கப்பட் நிலையில்
    தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தனக்கு மட்டுமே உரியது என கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக மங்காத புகழோடு  பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக இன்றும் கொண்டு சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை மட்டும் இன்றும்கூட கொஞ்ச கொஞ்சமாக இறந்தகாலத்திற்கு முடிசூடிட காத்திருக்கின்ற இத்தருனத்தில்.

               அழகான கொஞ்சும் தமிழை அரவணைத்து வளர்ப்பது நம் தமிழர்களின் அனைவரின் கடமை..  என்ற உணர்வோடு எனக்கு சரிவர எழுத படிக்க தெரியாததினால் பல எழுத்துபிழைகளுடன்  எனது இந்த  பதிவு...

           தினசரி ஊழலால் பெருமை தேடிக்கொண்டிருக்கும் நம் பாரத தேசத்தில்,
                        வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் பல மாணவர்களும்  ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவந்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கையில்

              மாண்ட பின்பும் மனிதன்  பிரயோஜனமற்றுப் போவார்கள் என்பதை மறந்து இன்றுவரை சுய சிந்தனை அற்ற முட்டாள்களாய்  மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த   ஏமாளியாய்  பல மாணவர்களை ஆக்கிய பெருமை யாரைசேரும் என என்னிடம் கேட்டால் நான் சொல்லுவேன் பல ஆசிரியர்களையும் அரசியல்வாதிகளையும் சேருமென ஒற்றைவரியில்,, ஆம்
                   நேற்றைய செய்தித்தாளில் 9வது படிக்கும் 15 வயது  மாணவன் தனது சட்டை முன்பகுதியில் பீர் பாட்டிலை மறைத்து சைக்கிளில் சென்றபோது அது குழுங்கி வெடித்ததினால் உயிர் பறிபோகும் சோகம் நேர்ந்தது. அதற்கு காரணம் ஆசிரியர்களா? அல்லது உயிர்காக்கும் மருத்துகளையெல்லாம் தனியார் வசம் கொடுத்துவிட்டு உயிரை எடுக்கின்ற மதுவை தரமான முறையில் தயாரித்து தங்குதடையின்றி இரவு 11 மணிவரை  கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளா? என குழம்பியபோது எனக்கும் ஒரு குவாட்டர் அடிக்க ஆசை வந்துவிட்டது.

          பள்ளி மாணவன் கத்தியால் குத்தி ஆசிரியர் படுகொலை நிகழ்த்தியபோது ஆசிரியர் இனமே பொங்கி எழுந்தது, கண்டன பேரணியோடு கண்ணீர் தழுவியது.
    இடமாறுதலில் முறைகேடு நடக்கிறதை கண்டித்தும் 5வது 6வது 7வது என சம்பள கமிசனை நடைமுறை படுத்து எனவும் மத்திய அரசு ஊழியருக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும் என பல போராட்டம் நடத்துகின்ற ஆசிரியர்கள்
   தமிழகத்தை தலைநிமிரச்செய்யப்போகும் இந்தம்மா ஜெ அடித்துவைத்த 100 கோடி புத்தகங்கள் மூளையில் முடக்கி போட்டுவைத்திருப்பதை பற்றியே, சமச்சீர்கல்விக்காக 150 நாட்களுக்குமேல் பள்ளியில் பாடம் நடத்தாமல் இருந்தபோதும் எத்தனை ஆசிரியர்கள்  வீதியில் இறங்கி போராடினார்கள், அல்லது கவலைபட்டார்களா? 
     காரணம் அரசு வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களின் மகன், மகளை நம்பியே காசுபார்க்கும் பல தனியார் பள்ளிகள்  இயங்குவதால்  அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.

தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும் என சட்டத்தில் உள்ளது
 அதை யாரும் இதுநாள்வரை எந்த பள்ளிகளிலும்  பின்பற்றுவதில்லை
பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் 25 சதவீதம் அளிக்க வேண்டும் அதற்கு ஆதரவாகவோ அல்லது அதைப்பற்றிய ஒரு விழிப்புணர்வையோ எந்த ஆசிரியராவது பாமர தமிழ்சாதியிடம் கொண்டு சேர்க்கவில்லை ஆனால் விடைத்தாள் மதிப்பீடு ஊதியத்தை 3 மடங்காக உயர்த்த வேண்டும் என தெருவில் இறங்கி போராட்டம் மட்டும் செய்கின்றனர் ஒற்றுமையுடன் ஆசிரியர் கூட்டணி

முளைக்காத தானியங்களைப்போல்
சாக்கடை நாற்றத்தோடு கழிவுநீர் ஊற்றுகன் அருகே
அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி  இளஞ்சிறார்களுக்கு பகலில் மட்டுமே கனவுகானச்சொன்ன நம்ம கலாம் அவர்களோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதிகளோ இதைப்பற்றி கவலைப்பட்டுள்ளனரா?

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோருக்கோ அல்லது மாணவருக்கோ தேர்வு நடத்தக்கூடாது. இண்டர்வியூ நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தினால் முதல் முறையாக தலைமை ஆசிரியருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் மீண்டும் அந்த தவறை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இதைமட்டும் நடைமுறைபடுத்தினால் விதிக்கின்ற அபதாரத்தின்மூலம் வருடத்திற்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துவிடும் தமிழக அரசுக்கு

      இப்போதெல்லாம் பழைய காலத்தைபோல் யாராவது ஒரு ஆசிரியராவது எதாவது பொதுத்தொண்டுக்கு செய்து வந்துள்ளார்களா?  என்பது காலத்தின்  உண்மைக்கு மட்டுமே வெளிச்சம்

             மாணவர்கள் வாழ்வில் தானும், தன் குடும்பமும் குறையேதும் இல்லாத நிறைவான வாழ்க்கை  தரக்கூடிய கல்வி  கற்றுக்கொடுக்ககூடிய ஆசிரியர்கள்  பலர் டாஸ் மாக் பார் ஏலம் எடுத்து நடத்திவருகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது இதுதான் கொடுமையிலும் கொடுமை
             இப்போதெல்லாம் மனிதனாக பிறந்து வாழ்க்கையை நன்றாய் ருசித்து வாலிபப் பருவத்தை ஓட்டி முடிப்பதற்கு  தடையாய் இப்போதெல்லாம் வசதிபடைத்த எந்த தாய், தந்தையும் நாமக்கல், திருச்சங்கோடு போன்ற பள்ளியெனும் சிறையில் குறைந்தது 10 வருடம் அடைத்து படி, படி என கொடுமை படுத்துகின்ற அவலத்தை  என்னவென்று சொல்லுவது.

        கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திக்கொள்ளக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான்  கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை அப்படி கிடைக்கவேண்டும் என்றால் நம் தழிழினத்தை கொன்றொழித்த காங்கிரஸ்காரன் உதவி , வேண்டும் அல்லது அரசியல்வாதிகளின் அனுசரனை வேண்டும்

தான் ஒருவன் கல்வி கற்பதால் ஒரு சிறைசாலை மூடப்படுகிறது என்ற பழைய கதையை புறந்தள்ளும் விதமாக எதிர்காலத்தில் மாணவர்கள் பலர் கொலைசெய்டும்  எண்ணத்தை  உருவாக்கி சிறைச்சாலையை நிறைய திறந்திட வழிவகை செய்ய வேண்டாம் அரசியல்வாதிகளே ஆசிரியர்களே

பல முறை கல்விக்கடனு்ககாக அலைந்தபோது இப்போது கல்விக்கடன் கிடையாது என திரும்ப திரும்ப முடிவை சொல்லுகிறார்கள் பேங்க் அதிகாரிகள்
முற்றும் முடிந்துபோன கதையாய் திமிராய் சொல்வதால்
 கோபம் முற்றிபோவதால்  கொலைகூட செய்யும் அளவிற்கு  தவறான பாதைக்கு பல மாணவர்களை எண்ணங்கள் மாறிவிடுகின்றன என்பதுதான் கொடுமை 
கல்விக்கடன் கிடைக்காததினால்
கைக்குட்டைதான் எனக்கு உதவியது என பல மாணவிகள் கண்ணீர்  துடைத்துக்கொண்டு போகும் பரிதாப நிலையை என்னவென்று சொல்லுவது இது யார் குற்றம்

படித்துவிட்டு எதையோ தேடி எதையோ பெறுவதற்காக
 கவுரவத்திற்காக பல பெற்றோர்கள் பால்மாட்டை நம்பி விற்று பணம் கட்டி தன் பிள்ளைகளை பஸ்சுக்கு கூட கொடுத்துவிட காசில்லாம் அல்லல்பட்டு படிக்க வைக்கின்ற கொடுமை தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது

பல மாணவர்கள் தோல்வியின் சோகத்திலிருந்து
விடுபட முயற்சி செய்து
தன்னோடு தன் எதிர்கால வாழ்வை  ஏமாற்றிய
அரசியல் வாதிகள் நிறைந்து வாழுகின்ற போது 
தான் வாழும் வாழ்க்கை தேவையா என தன்னையே சாம்பலாக்கிகொண்டது  எத்தனை ஆசிரியர்கள் மற்றும் கல்விக்கடன் கொடுக்க மறுக்கும் பேங்க் அதிகாரிகளுக்கு தெரியும்

நம் பாமர தமிழ்சாதி பாதியில் சிந்திக்க மறந்துவிடும் காரணத்தால், அவ்வப்போது ப, சிதம்பரம் அள்ளிவிட்ட வார்த்தைகளில் சில

2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
                அதை எத்தனை பேங்க் அதிகாரிகளாவது பின்பற்றினார்களா?
அல்லது
               2009-10-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. இதை யார் இப்போது பின்பற்றுகிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்

                 எந்த வங்கியேனும் 2009-10-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பர்

                   அதே சமயத்தில் 2008-09-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்றவர்கள் அனைவரும் வட்டி செலுத்த வேண்டும். இதில் எவ்விதத்தில் ஞாயம் சொல்லுங்கள்

              கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்பெக்ரம் வழக்கில் கரைபடிந்த சிதம்பரரம் கையினால் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  மாவட்டத்தில் மட்டும் 4369 பேருக்கு ரூ.37.79 கோடிக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது  வாங்கிய கல்விக்கடனக்கு அனைவரும் வட்டி கட்டிகொண்டுதான் வருகிறார்கள்

ஏதோ நம்மாள்  முடிந்ததொன்றை அழகாய்
 கல்வி அறிவின்மூலம் இந்த பூமி பந்தில்  மாற்றுவதற்காக