Monday 19 August 2013

தமிழக அரசியல்பிழைப்புவாதிகளும், நடிப்புகார கூத்தாடிகளும்

தமிழக அரசியல்பிழைப்புவாதிகளும், நடிப்புகார கூத்தாடிகளும்

விழி நிறைந்த ஏக்கத்தில்
மொழியற்றுத் துடிக்கின்றன தமிழனின்  வாழ்வு
ஆனால் எடைக்கல் சுமக்கும் இதயமாய்
பாரம் தாங்காமல் வலிக்கிறது என் மனசு

ஈழத்து  மனிதர்களின் அடிமை வாழ்வின்
கதை கூறி கூறி  அமைதியாய் இருப்பதை விட
நெஞ்சையே உழுக்கும் நினைவலைகளை சற்றே ஓரம்கட்டிவிட்டு
கண்ணீரை கரங்களால் துடைத்துவிட்டு எதிர்காலத்தில் தமிழனின்  வாழ்வாதார இழப்பையே எண்ணி மனதை இரும்பாக்கி மெளனமாய் தொடர்கின்றேன் எழுத்துக்களால்
சுதந்திரம் விடியும் ஈழத்தில் ஒருநாள் என்ற தளராத நம்பிக்கையில்,,,

பாம்புன்னும் மிதிக்க முடியாம பழுதுன்னும் தாண்ட முடியாம

நாமும் மாறி, மாறி ஆட்சி செய்ய ஆட்களை நியமித்துவிட்டோம்
நாம் நன்றாக வாழத் தெரியாதவர்கள்தான், நன்றாக ஆளத்தெரியாதவர்களைத் தேர்ந்தெடுக்கின்றோம் நீங்களும் நானும் இணைந்து. ஆம் ஒரு முட்டாளை தேர்ந்தெடுத்த குற்றத்திற்காக நாம் முட்டாளாக ஆகிவிட்டோம்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மெட்ராஸ் கபே படத்தை பற்றிதான் ஆனால் அதை தடை செய்ய வேண்டும் என எந்தஒரு திரைப்பட கூத்தாடிகளும் ஒரு சம்பிரதாயத்திற்காக கூட வாய் திறக்கவில்லை, எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை?

நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட முதல்வரை பார்க்க துடிக்கவும், வரிச்சலுகை வேண்டும் " "இலவச வீட்டு மனை வழங்கணும் " என்று கேட்கும்  ...... இந்த கூத்தாடிகள் ஏன் இதற்கு ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்ற போது புரிகிறது இவர்களின் நடிப்பும், வேசமும்,


இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வழுவான இந்நேரத்தில். தமிழக திரையரங்கிலும் தலைவா படத்தை திரையிட சொல்லி இளைஞர்கள் பேருந்து மறியல் கடைஅடைப்பு நிகழ்வுகள் ஐயோ கொடுமை


இந்த மெட்ராஸ் கபே  திரைப்படம் என்பது கற்பனை கதை அதில் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல கற்பனை என்று கொக்கரிக்கும் ஓநாய்களே?
கழுத்தறுத்து  -மனித உடலடித்துப் பங்கு வைக்கும் சிங்கள ஓநாய்கள் உங்களுக்கு நட்பு நாடு என்று சொல்லுகின்ற இந்திய தேச பற்றாளர்களே? நானும் சிங்களவன் பீரங்கி தாக்குதல் நடத்துவதுபோலவும் சென்னையை அழிக்க குண்டுமழை பொழிவதைபோலவும், பல இந்திய ரானு வீரர்களை படுகொலை செய்வதுபோலவும் சோனியாவை ராஜபக்சே மானபங்க படுத்துவதுபோலவும் படம் எடுத்தால் இந்திய ஓனாய்கள் ஏற்றுகொள்ளுமா?


இந்த மெட்ராஸ் கபே  திரைப்படம் என்பது கற்பனை கதை அதில் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல கற்பனை என்று வக்காளத்து வாங்கும் யோக்கியர்களே? நாம் நம் தலைமுறையே அழிக்ககூடிய சாவை குறித்துக் கொண்டு மரணத்தை தமக்கு தாமோ வேண்டி எந்த சலனமும் இல்லாமல் தமிழ் மக்களின் தலையனையாய்  400 அனுகுண்டுகளை சுமந்து இருக்கின்ற  கூடங்குளம் அனு உலை வெடித்து தமிழகமே சுடுகாடாகவும், எங்கும் பிண குவியலாகவும் தமிழகத்தில் உயிர்வாழ தகுதியற்ற இடமாக மாறுவதாக நான் படம் எடுத்தால் ஜிங்சக் தட்டும் இந்த அரசியல் பிழைப்புவாதிகளும் திரைப்பட கூத்தாடிகளும் ஏற்றுகொள்வார்களா?

இந்த மெட்ராஸ் கபே  திரைப்படம் என்பது கற்பனை கதை அதில் சொல்லப்படும் அனைத்தும் உண்மையல்ல கற்பனை என்று வாதிடும் தமிழகத்தில் தமிழன் என்று சொல்லி வாழ்வதற்கு அருகதையற்றவர்களே? இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களை சித்தரித்து   படம் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? 


இலக்கியம் பல படித்து
இரவு பல விழித்து
குரள் எடுத்து படித்து தமிழுக்காக குழுறியதாக காட்டிகொண்டு யாருக்கோ கால்பிடித்து  தன் குடும்ப நலனே கதியாக இருக்கின்ற சோனியாவின் விசுவாசமிக்கவர் இந்த படத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய ஒரு போராட்டம் செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் தமிழுக்கு வாலாட்டிய நாய்கள் இன்னும் வெறுமையாய் வெட்டி பேச்சாய் இன்னும் ஏன் ஒதுங்கி ஓடுகிறார்

தமிழ் இனம் முற்றாக அழியட்டும் என்று
சிங்களம் செய்யும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும்
பாதை அமைத்துக் கொடுத்து பார்த்துக்கொண்டு இருக்கின்ற காங்கிரஸ்காரர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தருவார்களா?

இளவரசன் மரணம் எப்படியோ ஒரு துக்க நிகழ்வு அதற்காக அதை வைத்து ஒப்பாரி வைத்து அரசியல் பிழைப்பு நடத்திவரும் ந.....ய வாதி திருமாளவன் தெருவில் இதற்காக இறங்கி போராட சொல்லுங்கள் பார்ப்போம்!

சனியனை பிடித்து பனியனுக்குள் விட்ட கதையாய்
தன்னை கைது செய்ததற்காக மரத்தையும் பேருந்தையும் சேதபடுத்தி 1500 கோடிக்குமேல் சேதம் ஏற்படுத்திய ராமதாசு இதற்காக என்ன செய்தார் வெறும் அறிக்கை மட்டுமே

தமிழகத்தில் வாழும் பெண் கடவுள் நடமாடும் பாரதிகண்ட புதுமை பெண் தங்க தாரகை பித்தளை தாரகை என்றெல்லாம்
கோன வாயான் கொட்டாவி விட்ட கதையாய்
இன்றும் புகழ்கின்ற இன்னும் டவுசர் ஒழுங்கா போட தெரியாதா  நடிகர் சங்க சரத்குமார் இந்த படத்திற்கு என்ன செய்ய போகிறார்


 அருவிகளும் குளங்களும் ஆறுகளும்
நிறைந்திருக்கும் எங்கள் தமிழக மண்
 அத்தனையும் களவு போயிற்று
நம் நிலத்தையும் , நீரையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கும் பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்து போட்டுவிட்டு கண் மண் தெரியாமல் சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் முதல்வருக்கு இது பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர் இதுபற்றி வாய் திறக்க மாட்டார் 
ஏன் எனில் இரண்டு லட்சம் மக்களை ஈழத்தில் போட்டுத் தள்ளி உதவிய இந்திய அரசுக்கு எதிராக வாய் திறக்காத முதல்வர் செயலலிதா  தமிழ் மொழியையைும் தாய்மொழி இல்லாத இன்னொரு மொழியில் கல்வி கற்க வைக்கும் திட்டங்களைத் தீட்டி வருகின்றவர் தமிழனுக்கு ஆதரவாக ஒருபோதும் இருக்க மாட்டார்

சிங்களம் எல்லாவகையான குற்றங்களை செய்தாலும் சரி என்று சொல்லும் நாராயணசாமி இப்போது இந்த மெட்ராஸ் கபே படத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்


காது இருந்தும் கேட்காதவர்களாய்
கண் இருந்தும் எதையும் பார்க்காதவர்களாய்
வாய் இருந்தும் எதையும் பேசாதவர்களாய்
அதிகாரம் உங்கள் கைகளில் இருந்தும்
எதையும் தட்டக்கேட்காத மௌனிகளாய்
எதற்காக இன்னும் இந்த வேசம்
சிங்களம் உங்களை ஏமாற்றுகிறது
எப்பொழுது புரியும் உங்களுக்கு இவை எல்லாம்
ஏன் இன்னும் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்


எனக்கு எப்போதும் என் தாய்மீது வருத்தம் என் மனதுக்குள் இந்தக் கேள்விகளை கேட்டுக் கொண்டு இருக்கின்றேன் ஆம் கருவில் இருந்தபோதே என்னை அழித்திருந்தால் காலமெல்லாம் இம்மண்ணில்
கேடுகெட்ட அரசியல்வாதிகள் வாழும் தேசத்தில் எனக்கும் ஒருஇடமில்லாம் இருந்திருக்கும். இப்படி
வலையில் அகப்பட்ட மான்போல்
அழுது தொலைத்து அலைந்திருக்க அவசியம் இருந்திருக்காது ஒருபோதும் எனக்கு.  சில அரசியல்வாதிகளை கண்டால் காலில் கிடப்பதை எடுத்து அடிக்கவும் எனக்கு தோன்ற அவசியமிருக்காது

உடல் நடுங்கி வாழ்வதற்காக
எனைப் பெற்றாய் தாயே என்னை?
மாற்றானுக்கு
குடை பிடித்து வாழ்வதற்காக பிறந்த அரசியல்வாதிகளினால்
மடல்விரித்து வாழ்கின்ற வாழையைப்போல் வாழவேண்டிய வயதினில் பூமி எங்கும் குருதி நிறைந்த பூமியில் ஏன் என்னை பெற்றெடுத்தாய் என நினைக்கும்போது

இந்த கவிதை நெஞ்சில் அசைபோடுகிறது,,

 தேசம்
என்றிறிந்தோம் - விழிகள் தலைசாய்ந்து எங்கள்
விழி தவிக்க செய்தாயே
மூடி விடைபெற்று சென்றாயே
விடியாத வலியுடன்.
உயிர் பிரிந்து..
உடல் விழுந்து..
விழி மூடி
நான் மாண்டுபோனாலும் என் லட்சியம்
மாண்டுபோகாது எங்கள் வழி..
மறந்து போகாது தனி ஈழமே தமிழரின் தாகம்

உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.!
அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.!
நிலம் இன்றி அகதியாய்
சிறுபான்மை……சின்னமாய் நாங்கள்!
மூத்தவர் ஆண்டு சென்றுவிட….
வந்தவர் நாம் மெனியாய் ..
அடிமையாய் தொடர்கின்றோம் ………
எட்டு கோடியாய் உள்ளோம் ….!
எட்டி உதைத்திட ஒன்று சேர்வோம்……
பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்….
சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம……..
தொழுது நாம் வாழ்ந்த கோவில்
அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று
சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து -
சாகிறான் தமிழன் தினமும் ………….
நிலாச் சோறு உண்ட முற்றம்
அங்கு வீசுகின்றது இரத்தத்தின் நாற்றம்…
மெல்ல வருடிய தென்றலில்
நாளும் அவலமாய் செத்தவன் கூக்குரல்….!
இன்பமாய் விடிந்த காலை கொலையும்
களவுமாய்விடிகின்ற நாட்கள்….!
செம்மொழி பேசினால் தமிழன் சிறையில்
எண்ணிடும் நாட்கள்….!