Tuesday 18 December 2012


மாவீரர் தினமும் எனது வேதனையும்  


     அரைநூற்றாண்டு காலத்துக்கும் மேலாக,எம் இனம் படுகின்ற வேதனைகளை வார்த்தைகளால் எடுத்துச்சொல்ல  மனம் வரவில்லை ஆதலால்  கண்ணில் நீரை சொருகிய நினைவுகளோடு எழுத்துக்களால்,,

     போதும் இந்த கேடுகெட்ட நாஞ்சில் சம்பத் போன்ற  நம்பிக்கை துரோகிகளை நம்பியது போதும் நயவஞ்சகர்களிடம் காலில் மண்டியிட்டு நக்கி பிழைக்கின்ற நிகழ்வு ஒருபக்கம் தமிழகத்தில் தினசரி நிகழ்வாக இருந்தாலும்கூட

     எம் தொப்புள்கொடி உறவுகளின் நிலமையை என் நெஞ்சில்  கொளுத்திவிட்டு  மாவீரர் தினத்தன்று அப்படியே அழுது  தொலைத்துவிட்டு
முள்ளிவாய்காலுடன் முடிந்து போனதென முடங்கி வாழ நினைத்தாலும்  பல நாட்கள் அடுத்த வேலைக்கு செல்ல மனமின்றி எல்லாம் தொலைந்தவனாக  உறங்கிட மனமற்று திரிகின்றேன் உண்மையில் ஒரு மனநோயாளியை போல

     மனிதநேயமற்று தன்நலம் மறந்து  சுயநலமிக்க மனிதர்களாக வாழுகின்ற பெருமை மிக்க தமிழகத்தில்
      நடந்துமுடிந்த மாவீரர் தினத்தில் எங்கள் ஊரில் என்னால் குருதி கொடை கொடுக்கவே மனமில்லை காரணம் வெறும் வெற்று விளம்பரத்திற்காவும் தன் குடும்ப பதவி சுகத்திற்காக மட்டுமே  உணர்வில்லா வெறும் உணர்ச்சியற்ற தமிழின உணர்வு இல்லா பிண்டங்கள் நிறைந்து வாழுகின்ற தமிழக மானுடர்களுக்கு நான் ஏன் குருதி கொடை கொடுக்க வேண்டும் என எனக்குள் கேள்விகள் பிறந்து கடைசியில் கேளியாய் முடிந்துபோனது

இருப்பினும்
     கற்பனைக்கும் எட்டாத, நம்பவே முடியாத  இப்ப நினைத்தாலும் குலை நடுங்குகிற வேதனையாக  கொத்துக் கொத்தாக என் உறவுகள்  செத்து மடியும்போது கைகட்டி வாய் பொத்தி நின்ற தமிழக அரசியல்வாதிகள் வீட்டில் ஒரு எழவுகூட விழ வில்லை என்ற ஆதங்கமே மேலோங்கி நிற்கிறது இப்பவும் என் மனதில் வெறியாய்
 
சிங்கள காடையன்  கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிறான் அங்கே

     ஆனால் எங்களவன் தமிழனக்கு என்ன நடந்தாலும்  வெறும் வெற்று கோசம் ஆர்பாட்டம் மறியல்  மட்டுமே  செய்யமுடிகின்றதே  தவிற வேறு ஒரு மயிரையும் புடுங்க முடியவில்லை

இனி என்ன செய்யலாம்  யாரிடம் கேட்பது யார் பதில் சொல்வார்கள் ஒன்றும் புரியவில்லை,, இருப்பினும்

    மண்ணில் விதைத்த வித்துக்கள் விருச்சமாக்கி
 எம் இனம் வீறு கொண்டெழுமென  உறுதியாய் நான் நம்புகின்ற இந்த வேளையில்

      குருதித் கொடை மட்டுமே இதுநாள் வரை என்னால் செய்ய முடந்தது இனிமேலும் தாமதிக்காமல்

    விண்ணைப் பார்த்து விழி பிதிங்கி நிற்காமல்
காலம் வருமென காத்திருக்காமல்
முயற்சி என்பது
முடிந்தவரை செய்வது இல்லை.
முடியும் வரை செய்வது என நினைத்துதான் முடிவாய் இணையம் வந்துள்ளேன் நான் உங்களைபோன்ற தமிழுறவுகளை நம்பி,,


    இனிமேலும் அஞ்சியோ, அடங்கியோ, ஒடுங்கியோ,  வாழ்ந்தது போதும்  அடிமேல் அடிவைத்து கூடவே எதிரிகளுக்கு பலமான அடியும் கொடுத்து முன்னேறி எம் மண்ணை முழுமையாய் மீட்டு தமிழீழம் படைத்திடும் காலம் வெகு தெலைவில் இல்லை

    இனி நாம் எதிரிகளுக்கு அடிக்கிற அடி அவர்களின் நெஞ்சிலாக இருக்க வேண்டும்

    ஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈய்ந்த மாவீரர் கனவை நனவாக்கிட எம் இன துரோகிகளுக்கு  இறுதிப் பதிலடியை இடியாக  கொடுத்திட காலம் நமக்கு பரிசாய் கொடுத்துள்ளது எம் தலைவன் வழி,,,


    என் இன விடுதலைக்கும் அழிவின் விழிம்பில் இருக்கும் எம் தாய் மொழியின் வளர்ச்சிக்கும்   எது என் பங்கு என உணர்ந்து என்னால்  செயல்பட முடியாவிட்டாலும் எனக்கு காலமிட்ட கட்டளைதான் என் எழுத்து அதை சரியாக பதிவு செய்யவுள்ளேன்  http://kenakkirukkan.blogspot.com/ என்ற எனது வலைப்பூவில் 



     குடும்ப  சூழ்நிலைகளால்  துக்கம், வலி, வேதனை நிறைந்த வாழ்க்கையோடு வாழ்ந்து விம்மிப்புடைத்து வெளியே வர முடியாமல்   நான் வாழ்ந்தாலும்  ஒரு பொதி சுமக்கும் கழுதைகளைபோல் இல்லாமல்  நான் செத்து மண்ணோடு மண்ணாக மக்கிபோகின்ற வரை எம் இன விடுதலைக்கு உற்ற உயிராக என்னை அர்ப்பணிக்க துணிந்துவிட்டேன் துணிவாக


     நெருப்பில் காய்ச்சிய இரும்பில் பட்ட நீரை, மறுபடியும் திரும்பப் பெறுவது எப்படி அரிதோ?! அது போலத்தான் தமிழக அரசியல்வாதிகளான இன துரோகிகள் கருணாநிதி தெருமாவளவன் ராமதாசு செயலலிதா மற்றும் பல அரசியல்வாதிகளிகளின் குணங்களும் அதை மாற்ற முடியாது

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

    என்ற முன்னோர்களின் கூற்றை நினைத்துக்கொண்டு
ஒரு சமூக சிந்தனை அக்கரையோடு இன்னும் புதிய சிந்தனைகளோடு சிகா,லெனின்