Thursday 14 June 2012

உண்மையில் வெக்கி தலைகுனிந்தேன் தமிழராக பிறந்தமைக்கு

        பர்மா தொடங்கி ஈழத்தில் மட்டுமல்ல தற்போது கேரளா மட்டுமல்ல தமிழன் வாழுகின்ற செல்லுகின்ற இடமெல்லாம் செருப்படி வாங்கி சிவப்பாய் குருதி வழியும் முகத்தோடு தமிழர்களை வழிநடத்திட வக்கற்ற தமிழ் தமிழர் என்று சொல்லி வயிறு வளர்க்கின்ற தலைவர்கள் நிறைந்து வாழுகின்ற பெருமை மிக்க தமிழகத்தில்


            ஏழைத்தாயின் வற்றிய மார்பில் பால் வராமல் குழந்தை கதற... கதற அழுகின்றபோது உண்மையான அன்பு செலுத்து கின்றவர்களும்  பிறருக்கு உதவுகின்ற பண்பு நிறைந்த மனிதர்கள் மட்டுமே  கடவுள் என்பதை மறந்துவிட்டு குடம் குடமாய் பால் அபிசேகம் செய்கின்ற பெருமை மிக்க இந்திய திருநாட்டில்

         இன்றுவரை அவமானம் குறித்தோ அல்லது அடிமைத்தனம் குறித்தோ கவலைகள் ஏதுமற்றவர்களாக மதிமயக்கி வைத்துள்ளனர் வாழ்ந்தாருக்கு ஜால்ரா அடிக்கமட்டுமே தெரிந்த இந்த அரசியல்வாதிகள்



          பல்லி சொல்லும் பலனை அறிய  பஞ்சாங்கத்தை பார்க்க தெரிந்த நம் வீட்டு அறிவிஜீவிகளுக்கு தன் மகன், மகள் பள்ளி சென்றால் அறிவுமட்டுமல்ல அகிலத்தையும் வென்றெடுக்கலாம் என்பதை மறந்துவிட்டு தற்போது புதுக்கோட்டை இடைத்தேர்தலில்  வீதியில் கொடிபிடிக்க மட்டுமே எம் உறவுகளை பயன்படுத்திக் கொண்டிருப்பதை நேரில் பார்த்தபோது உண்மையில் வெக்கி தலைகுனிந்தேன் தமிழராக பிறந்தமைக்கு

கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்
இன்று 

      கால் வயிறு கஞ்சிக்கு வழியின்றி முள்வேளி முகாமில் கையேந்தி நிற்கிறது  ஒருவேளை உணவிற்காக... இதுதான் கொடுமையிலும் கொடுமை

       யார் ஆட்சிக்கு வந்து எத்தனை இலவசங்கள் கொடுத்தால் என்ன
என்னதான் அய்.டி. இன்டெர்நெட், செல்போன் சாட்டிலைட்
ஆயிரம் வந்தாலென்ன

பசிமேயும் வயிறுகள் வியர்வை சுரப்பிகள் பொங்கி
வற்றாத வடிகால்களோடு குருதி வழிகின்ற கைகளோடும்
தொண்டைக்குழி சேர்ந்து வறுமையும்  வறண்டு
இயற்கை வெயிலில் மூச்சுக்குழல் அடைத்து
துர்நாற்றமும் வாழ்கையின் உயிரோடு கலந்த  நிழலென இன்றுவரை தொடரத்தான் செய்கிறது நம் தமிழகத்தில் பாதி இடங்களில் இதுதான் இவர்கள் அரசியலில் செய்ய இன்றைய சாதனை

கணவனை இழந்த கண்ணகி சீற்றம் கோபம்  நியாயம்  என்று இன்றுவரை வீரப்பு பேசுகின்றவர்களும் 

துரோபதி சபதம் தூமையான வாக்கு சரிதான்  என்பவர்களும்


தருமனின் யுத்தம் காலத்தின் கட்டாயம் என்று போர்பரணி கொட்டுகின்றவர்களும்


      எம் சொந்த மண்ணில் ஆயிரமாயிரம் இரத்த உறவுகள் கொத்துக்குண்டுகளால் கொன்றொழிக்கும்போதும் விரட்டி அடிக்கும்போது எம் உறவுகளின் ஆவேசமும் நியாயம்தான் என  நீதி பேசிட உலகில் எந்த ஒரு நாயும் வரவில்லை. கடைசிவரை தீவிரவாதம் என வாதம் செய்தார்களே தவிற வேறு என்ன செய்தார்கள் இங்குள்ளவர்கள்


  பல இளைஞர்களுக்கு, தேவை திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் என்பதை உணர்ந்து  நாம்இனி இலவசங்கள் தேவையில்லையென நீங்களும் நானும் வெறுத்தால் மட்டுமே இனி தமிழினம் தலைத்தோங்கும்

         ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவேண்டும் என்பதற்காக , நம் அரசியல்வாதிகள் தமிழகத்தை உலக நாடுகளிடம் கடன்வாங்கி தன்னை மட்டும் வளமாக்கிக்கொண்டு தமிழனை மட்டும் அப்படியே  ஏழையாக இருக்க செய்துள்ளனர் இவர்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண
இன்னும் எத்தனை ஆண்டுகாலம்தான் நம்மை
ஏழையாகவே வைத்திக்க போகின்றனரோ தெரியவில்லை

வேதமும், வீரமும், கல்வியும், கலையும்,  காவிரி தென்பெண்ணை பாலாறும், செந்தமிழோடு முத்தமிழும் நிறைந்து வான்புகழ் கொண்ட வள்ளுவனும்,   கவிபாடிய கம்பனும் அறிவு செறிந்து புகழ் சேர்ப்பதற்கு பெருமைகளோடு வளமையும் மண்டிக் கிடக்குந்த தமிழ்நாடு அன்று  

    இன்று டாஸ்மாக் கடையில் தன்சுயசரித்திரத்தை அடகு வைத்துள்ளனர் தமிழகத்தில் பாதி தமிழர்கள்  ஐயோ பாவம்

       நாம் எல்லாம் இழந்துவிட்டோம் இனி இழப்பதற்கு ஒன்றுமே நம்மிடம்  ஏதுமில்லை...

கணவனை இழந்த கண்ணகி சீற்றம் கோபம்  நியாயம்  என்று இன்றுவரை வீரப்பு பேசுகின்றவர்களும்
 

துரோபதி சபதம் தூமையான வாக்கு சரிதான்  என்பவர்களும்
 

தருமனின் யுத்தம் காலத்தின் கட்டாயம் என்று போர்பரணி கொட்டுகின்றவர்களும்
 

எம் சொந்த மண்ணில் ஆயிரமாயிரம் இரத்த உறவுகள் கொத்துக்குண்டுகளால் கொன்றொழிக்கும்போதும் விரட்டி அடிக்கும்போது எம் உறவுகளின் ஆவேசமும் நியாயமும்! நீதி பேசிட உலகில் எந்த ஒரு நாயும் வரவில்லை கடைசிவரை தீவிரவாதம் என வாதம் செய்தார்களே தவிற வேறு என்ன செய்தார்கள் இங்குள்ளவர்கள்

வரலாற்றில் தமிழக்ததில் வாழுகின்ற துரோகிகளை என்றைக்குமே  மன்னிக்கப் போவதில்லை

இனிமேலும்  இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளிடம் நம்மை  அடகு வைத்துவிடக்கூடாது. காரணம்  இவர்கள் நமது கோவணத்தையும் விற்று காசாக்கி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மையும்கூட

 எங்கோ தேசம் கடந்து தலைவர் வாழுகிறார் என்ற மகிழ்ச்சியோடு தெளிவான சிந்தனைகளோடு உங்கள் திட்டுதலையும், குறைகளையும் எப்போதும்  மிகவும் ஆசையாக காத்திருக்கும்  


சிகா, லெனின் கீரமங்கலம் 9047357920

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..