Tuesday 3 January 2012

நீங்களும் தெரிஞ்சுக்கனும்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை செய்தி தொகுப்பில் முதன்மைச்செய்தியாக மத்திய அமைச்சர் திரு. கபில்சிவ் அவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ற பிப்ரவரி 6 ம் தேதிமுதல் பேஸ்புக், டுவிட்டர் போன்ற இணையத்தள சேவையை தணிக்கை செய்த பின்பே வெளியிட வேண்டும் என்றும் அதில் அரசுக்கு எதிராகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் விதத்தில் கருத்து இருந்தால் தடைசெய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,


 ஏதோ ஒரு சிலர் வேண்டுமனால் சில அரசியல்வாதிகளோடு பெண்களை இணைத்து வெளியிட்டு இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக கருத்து சுதந்திரமிக்க உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டு (ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க்கூடிய ஒரு கேவலமாக உள்ள இந்திய நாட்டில் திரு, கபில்சிவ் அவர்களின் கருத்தை நாம் ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டும்.

தனக்கெதிராக டில்லி இளைஞர்கள் தான் செய்த கோல்மால் வேலைகளை இணையத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டதினால் திரு, கபில்சிவ் இவ்வாறு தனது திருவாய்யை மலர்ந்துள்ளார். அதில் இந்தியாவில் பல இளைஞர்களும், பல குடும்ப பெண்களும் சமுதாயத்தில் சீர்கெட்டுபோனதர்கு காரணம் டுவிட்டர், பேஸ்புக் போன்ற இணையத்தளம் என்றும்  இதனால் எதிர்கால இந்தியாவின் நலன் கருதி தடைசெய் வேண்டுமென மத்திய அரசுக்கு பரந்துரை செய்துள்ளார்,

எனது கேள்வி

அன்றாடம் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் சாலையின் ஒரத்தில் பல ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இதைப் பார்த்து மாணவ, மாணவிகள் கெட்டுவிடமாட்டார்களா என்ன?

பல படங்களில் பருவ பெண்களை தோளில் சுமந்து உப்பு மூட்டை சுமப்பதும், இரவு நேர விடுதியில் (நைட் கிளப்பில்) அரைகுறை ஆடையுடன் போதையில் மதுவுடன், மாதுவும் சேர்ந்து ஆடுவது உங்களுக்கு தெரியாதா மிஸ்டர் கபில்சிவ் அவர்களே?

உண்மையில் மந்திரி கபில்சிவ்க்கு   அக்கரை இருக்குமானல் ஒரே ஒரு முறைமட்டும் இந்தியாவில் அதுவும் இலவசம் என்ற பெயரில் ஆடு, மாடு, கோழி, தாலி எனகொடுத்து மனித மூளையை மழுங்கடித்து வைத்திருக்கும் எங்கள் தமிழ்நாட்டில் ஓடிக்குகொண்டிருக்கும் தமிழ் படங்களை மொழிமாற்றம் செய்து உங்கள் குடும்பத்தோடு ஒரு முறை படத்தை பாருங்கள் எங்கள் தமிழ் சமுதாயம் எவ்வளவு மோசமாக போகிறது என்று உங்களுக்குத் தெரியும் இதை உங்களால் தடை செய்ய முடியுமா?

திரு, கபில்சிவ் அவர்களே
உண்மையில் சமுதாய சீர்கேட்டை தடுப்பவராக நீங்கள் இருந்தால் இன்று செல்போனில் இளசுமுதல் பெரிசுவரை எந்தளவுக்கு கெட்டு குட்டிச்சுவரா போச்சுனு தெரிந்திட நீங்களும் ஒவ்வொருவரின் சிம்கார்டை பார்த்தால் தெரியும் உண்மை வெளிச்சம்

முல்லை பெரியார் அனை விசயத்தில் உருப்படியாக ஒரு முடிவு எடுக்க வக்கற்ற  மன்மேகான் சிங்  கொலைவெறி பாடலை பாடிய தனுசுக்கு விருந்து கொடுத்ததை பாராட்டியும்  டில்லிவரை சென்று  ஊழல் எதிர்ப்பு  பெரிசுக்கு ஆதரவு தெரிவித்த  நடிகர் விஜய் முல்லை பெரியார் அனை விவகாரத்தில் வாய்மூடி  மவுனிப்பதையும் பாராட்டியோ அல்லது புத்தாண்டு தினத்தன்று நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் வெற்றிபெற வேண்டி  நடிகர் விஜயின் கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்ததை போற்றியும் ,  ரஜினி குணமாக வேண்டி கையில் அக்னி சட்டியுடன் டிரஸ் இல்லாமல் உடம்பில் வேப்பிழையுடன் வீதி சுற்றியதையும் புகழந்துகொண்டு இணையத்தில் வெளியிட்டால் பேஸ்புக்கை தடைசெய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் நானும் மடத்தனமாய்

 ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள் வெள்ளத்தை அனைபோட்டு தடுத்திட முடியாது எங்களுக்கும் சூடு சொரணை உள்ளது. நாங்களும் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பல அரசியல்வாதிகளை நம்பி எங்கள் வாழ்வை தொலைத்தது போதும். ஊழலின் உறைவிடமாக மாறிப்போன இந்தியாவின் பல அரசியல்வாதிகளின் அந்தரங்கத்தை இணையத்தின் வாயிலாக பாமரனுக்கும் அதிலும் தமிழனுக்கு ஒரு நவீன கருவியாக இருப்பது டுவிட்டர் மற்றும் பேஸ் புக் போன்றவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்


நன்றி° உங்களின் மேலான கருத்தினை எதிர்பார்ப்புடன் சிகா,லெனின்

2 comments:

  1. ம்ம்...அரசியல்வாதிங்களப் பத்தி எனக்கு கொஞ்சம் தெரியாதுதான்...உங்கப் பதிவுகளைப் பார்த்ததுக்குப் பிறகு..பசுத் தோல் போர்த்திய புலிகளைப் பார்க்கிறேன்... அருமை உங்கள் பதிவுகள்..சிந்திக்க வைக்கிறது..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..