Friday 16 November 2012

வைகோவிற்கும்,  நாஞ்சில் சம்பத்திற்கும் போகாத கடுதாசி     - பாகம் 1


           நான் நேற்று தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழனுடைய கலை நுட்ப திறமையையும், உலகிற்கு பெருமை சேர்த்த அறிவுமிக்க தமிழனின் சிற்ப கலையை மிகவும் வியந்து ரசித்துவிட்டு  சற்றே வெளியே வரும்பொழுது கைகளிலோ பிச்சை தட்டுமாய் தெருவில் கைகள் ஏந்தி நிற்கின்ற  இன்றை தமிழர்களின் நிலைமயை நினைத்து வேதனை ஏற்பட்டதனின் வெளிப்பாடுதான் இந்த பதிவு எழுத எனக்கு தோன்றியது,,,

   நம் இனத்தின் அடையாளத்தை முற்றிலுமாக தொலைத்து நாம் வாழ்ந்ததற்கான சாட்சியங்களை அழிக்கும் வேளைகளில் சிங்களவன் இருக்கின்றான்

     தன்னலங்களை ஒதுக்கிவிட்டு ஒன்றாக சேர்ந்து நம் லட்சியங்களை மீட்டெடுப்பதற்கு பதிலாக எங்களவன் ஒரே கொள்கையில் இருதுருவமென அடித்துக்கொள்கிறான் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று  ஐயகோ? இது என்ன கொடுமை

       அரசியலில் ஆதாயம் தேடுவதற்காக எனக்கு தெரிந்து பல அரசியல் கட்சியும் இன்னும் பலர் அரசியல் இயக்கத்தில்  தமிழகத்தில் இருக்கின்றார்கள் ஆனால் மதிமுக, அதற்காக துவங்கப்பட்டதில்லை என்று பெருமை கொண்டிருந்த எனக்கு மிக அதிர்ச்சி செய்தி நீங்கள் இருவரும் சண்டையிடுவது

         தமிழ்நாட்டில் இன்று அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என துவங்கிய மதிமுக கட்சி இன்று இளம் சமுதாயத்தையும்,  எம் தாய் தமிழீழ தாய்நாட்டிற்க்காகவும், நமது உரிமைக்காகவும்  நாம் உலக அரங்கில் நமக்கான பாதையை நாம் கடந்து முடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இன்று உள்ளோம். இத்தருணத்தில் இப்படி இவர்கள் நடந்துகொள்வது மனதிற்கு வேதனை அளிக்கிறது

           மேலும் தமிழக அரசியலில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சி பாதைக்கு  உங்களை போன்ற  தலைசிறந்த  தலைவர்களும் தேவை என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை ஒருபோதும் நாம் மறுக்க  முடியாத உண்மைம்கூட,,,

            நாகரிக உலகில் மனிதன் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து தமிழனுக்கு தமிழன் எதிரியாகவும் நம்பிக்கை துரோகியாகவும் இருப்பதினால்தான் இவ்வளவு பின்னடைவு என்பதனை ஈழ விடிவின் அச்சாணிகளான உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை


             செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை என்பார்கள். ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அப்படிபட்ட  பக்குவபட்ட மரமாக திகழும் உங்கள் கட்சி  உலகில் எந்த மூலையில்   எந்த மனிதனுக்கும் எந்த இன்னல்கள் வந்தாலும் அதற்காக சுயநலமற்று போராடுகின்ற கட்சி மதிமுக, ஆனால் அப்படிபட்ட மதிமுக எனும் விருச்ச மரம்  இன்று ஆனிவேர் நீயா?  நானா?  என்ற நோயால் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது என்றால் அது மிகையல்ல ,

             தமது சுயநலத்திற்காக மனித நேயத்தை மண்ணிற்குள் புதைக்கும் விந்தையான மனிதர்கள் நிறைந்த இப்பூவுலகில் நீங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் எதையும் நாகரிகத்தோடு எதிர்கொள்ளும் வலுவிழந்தோர்  என்ற பாராட்டினை பெற தகுதியை பெற்றுவிட்டீர்கள் என்பது வேதனைதான் எனக்கு

          நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதாலும் அதனால் ஏற்படும்  காயங்களை தனக்கு ஆதாயமாக்கி  சீழ்பிடிக்க வைத்தும் சுகம் காண துடிக்கிறது ஒரு கூட்டம் கொள்கை முழக்க வீரர்களே? இது உங்களுக்கு தெரியாதா முக்கிய செய்தி  என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் இத்தருணத்தில்,

வரப்புயர நீர்  உயருமாம்
நீர் உயர நெல் உயருமாம்
நெல் உயர குடி உயருமாம்
எல்லாம் உயர்ந்து  செழித்த மதிமுக வயலில் பிரிவு எனும் பூகம்பம் ஏற்பட்டது தமிழனின் சாபக்கேடுவோ என்னவோ

           ஒரே கூரையின் கீழ்  இரு வாழ்வா?  அப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லை இப்படியான வாழ்வின் போது  உங்களுக்குள் நீங்களே தரம் தாழ்த்தி பேசிக்கொள்வதில்  எவ்விதத்தில் ஞாயம் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும் எங்களுக்கு

           நீங்கள் இப்போது எடுத்திருக்கின்ற இந்த தவறான  முடிவு எனக்கு மட்டும் என்பதல்ல எம் குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் தயவுசெய்து இது மறுக்க முடியாத உண்மையும்கூட,,,

         உண்மையில் வாய்வீச்சு போராட்டம் தான் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது .அவனவனுக்கு தூக்கம் வர்ற வரைக்கும் தான் வீரம்.அடுத்தநாள் வேலை,பிள்ளை குட்டி அவனவன் பொழைப்பு... என்று மாறிப்போன யுகத்தில் நீங்கள் இருவரும் இருக்கின்றவர்களை இணைந்து செயல்பட்டு துடிப்பான இளைஞர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக அரசியல்செய்வதற்கு வக்கற்றவர்களாக இருப்பதை எண்ணி வருத்தம் அடைகிறார்கள் தமிழக மக்கள்


தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டாலும்
சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்குமாம்
பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்க
அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய வைத்த வீரம் இன்று கூனு குறுகிவிட்டது உலக அரங்கில் நீங்கள் சண்டையிடும் காட்சி

குறிப்பு பாகம் 2ல் சற்றே சூடாக இருக்கும்

நன்றி உங்கள் கருத்தும்,
என்னோடு  கோபமும் பகிர்ந்து கொள்ள
சிகா
9047357920

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..