Sunday 1 January 2012

நினைத்தாலே பற்றி எரிகிறது வயிறு.

)


நிதி அமைச்சரோ, உள்துறை
அமைச்சரோ, பாதுகாப்பு அமைச்சரோ
அறியாத இந்த விவரங்கள் ?

பணமும்,செல்வாக்கும்,  பதவி சுகமும்
தங்களுக்கு தொடர்ந்தால் போதும்.
இந்த நாடோ, மக்களோ எக்கேடு கெட்டாலும்
அவர்களுக்கு கவலை இல்லை.

இன்றும் 3 வேளை வயிராற சோறு
உண்ண முடியாமல்,
கந்தல் ஆடைகளுக்கு மாற்று இல்லாமல்,
குழந்தைகளை ரோட்டோர மரத்தில் தூளியில்
தொங்க விட்டு விட்டு ரோடு போடும் வேலையில்
ஈடுபட்டிருக்கும் பெண்கள்
-
பள்ளி செல்லும் வயதில் டீக்கடையிலும்,
மளிகைக்கடையிலும் வேலை செய்து கொண்டிருக்கும்
சிறுவர்கள் -

நோய்வாய்ப்பட்டு, சீண்டுவாரற்று,
ரெயில்வே ஸ்டேஷன்களில், பாலங்களில்
படுத்துக் கிடக்கும் ஆதரவற்ற  முதியவர்கள்-
கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் வாயில்களில்
கண் தெரியாமல், கை கால் விளங்காமல்
முடங்கிப்போய் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்
இந்த தேசத்தின் அனாதை மக்கள்-

தெருக்களில் சுற்றித்திரியும் மனநிலை
குன்றிய நோயாளிகள் -
இவர்கள் யாரின் நிலையும் -அவர்கள் மனதை
உறுத்தவில்லை.மனசாட்சியைத் தொடவில்லை.

நினைத்தாலே பற்றி எரிகிறது வயிறு.
கண்டாலே காரித் துப்பத் தோன்றுகிறது !








2 comments:

  1. I have gone through your site information and it is the same opportunity that I was looking for. The facilities, the process that what you are offering are perfectly matched to my Expectation & very soon you will get Response from my side.
    Chevrolet Chevy II AC Compressor

    ReplyDelete
  2. அந்த வயிற்று தீயை எழுத்துக்களில் ஓட விடுங்கள், விடியலை கொண்டு வருவோம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..