Wednesday 22 February 2012

அனுக்கழிவும் அப்துல்கலாமும் பாகம் 2

அனுக்கழிவும் அப்துல்கலாமும் பாகம் 2


ஓட்டை வாளியில் நீரைச் சேமிப்பது"
எப்படி என்ற புதுவழிமுறையை அறிமுகப்படுத்தி அவ்வப்போது கூடங்குளம் திறக்க வேண்டுமென கொடிபிடித்து  ஆர்பாட்டம் செய்கின்ற இத்தருனத்தில்
 
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன
 கூதலென்ன என்ற கதையாய்

   கூடங்குளம் அணு உலையை கட்டி முடித்துவிட்டார்கள், தடுத்து நிறுத்தமுடியாது என்று கைகட்டி நிற்காமல் இப்போது முனைந்தாலும் கூடங்குளம் அணு உலையை இயங்காமல் நிறுத்த முடியும் என்ற எனது நம்பிக்கை வீன் போகாது என  தைரியத்தில்  திரு, கலாம் அவர்கள் மின்னஞ்சல் முவரிக்கு அனுப்பினேன் பல கேள்விகள் இன்றுவரை எவ்வித பதிலையும் காணவில்லை

அத்தொகுப்பிலிருந்து சில இங்கே

      அனு உலைக்கு எதிரானவர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என நீங்கள் சொன்ன கருத்திற்கு நான் எதிரானவன் என்றாலும்
 
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
என்பதால்

     இந்தியாவில் அதிலும் உயர்ந்த இடத்தில் இருந்த இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற முறையில் நீங்கள் எனக்கு பதில் கண்டிப்பாக சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில்,,,
 
  நடுவர்மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஒரு சொட்டுத் தண்ணீரும் காவிரியில் தர முடியது என்று அடாவடி செய்யும் கன்னடத்தானுக்கு எதிராகவோ 

      உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தீர்ப்புரைத்த பிறகும் அதைக் காலில் போட்டு மிதித்து முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவது என்ற முயற்சியில் இறங்கியிருக்கிற மலையாள அரசுக்கு எதிராகவோ

      ஓரத்தில் கசிந்து வருகின்ற பாலாற்றைக் கூட வழிமறித்து தடுப்பணை கட்டும் ஆந்திராவிற்கு எதிராக நீங்கள் எப்போதாவது எத்தனை முறை தனது திருவாயை திறந்துள்ளீர்கள் என உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லியிருந்தால்  நிச்சயம் துளி அளவாவது உங்கள்மீது எனக்கு அன்பும் பாசமும் இருந்திருக்கும்.

   போர் வெற்றி எனும் போதையில் ஆடுகின்ற இலங்கை அரசுக்கு தன் கோவணத்தைக்கூட உருகிக்கொடுக்கும் இந்தியா இலங்கைக்கு சென்று கொலைகாரனுடன் விருந்து சாப்பிட்ட நீங்கள் இங்கிருந்து சிலவருடங்களித்து மின்சாரம் கொடுக்கமாட்டோம் என்பதற்கு ஏதேனும்  உத்திரவாதம் அளிக்க முன் வருவீர்களா? இந்தியாவின் மூத்த குடிமகன் திரு, கலாம் அவர்களே  சொல்லுங்கள் பார்ப்போம்
 
என்னசெய்வது
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம்
இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.



கூடங்குளத்தில் இதுவரை 90 நபருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது அதில் எத்தனை பேர் தமிழர்கள் என்பதை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?

விபத்தே ஏற்படாது 100 சதவிகிதம் பாதுகாப்பானது  தரமானது உயர்தரமானது என ஆணு,,,, விற்பதை போல் திரும்ம திரும்ம சொல்லும்  நீங்கள்   விபத்து ஏற்பட்டால்
    முதல் மணியோசை கேட்டால்  பாதுகாப்பான உறைவிடத்திற்கு செல்ல வேண்டும்  எனவும்

    இரண்டாவது மணியோசை கேட்டால் அயோடின் மாத்திரை சாப்பிட வேண்டும் எனவும்  சொல்வது ஏன்?

     அடுத்து வாயில் வெள்ளை துணி அணிந்துகொண்டு ஊருக்கு வெளியே செல்ல வேண்டும் என ஒத்திகை நிகழ்வு நடத்தி காட்டியது ஏன்? இதை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது இதற்கு என்ன பதில் சொல்ல போகிரீர்கள்

   கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள விவிஇஆர் 1000 அணு உலையின் மையப் பகுதியில் தடித்த எஃகால் ஆன பெட்டகம் உள்ளது. மிகையான நியூட்ரான் மோதுதல் நடக்கும்போதும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரணமாக அன்றாடம் நடக்கிற நியூட்ரான் மோதலின்போதும் அந்த அணு உலைச் சுவர் மச்சுப்போய்  ஓட்டை விழுவதற்கான வாய்ப்பு  அதிகமாக உண்டு எனவும் அதுபோல் மெத்வதேவிடம் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் குளிர்விக்கும் தண்ணீர் கருப்பகுதியைத் தாக்கி ஓட்டை போட்டு கதிர்வீச்சை வெளிப் படுத்தக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது   என்பது உண்மையா பொய்யா?


* கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துவிட்டால் கொக்கைப் பிடித்துவிடலாம்
என்ற புதிய அத்தியாத்துடன் நிலநடுக்கம் ஏற்படாது என கூவி கூவி சொல்லும் திரு கலாம் அவர்களே
 
          கூடங்குளம் பகுதியில் 2003ல் இலேசான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதையும் 2006 மார்ச் 10 ஆம்நாள் கூடங்குளம் அருகிலுள்ள அஞ்சுகிராமம், அழகப்பபுரம், சாமித்தோப்பு ஆகியவற்றில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டு வீடுகளின் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டதை இந்திய அரசின் ஆய்வுக் குறிப்புகளும் தமிழக அரசின் வருவாய்த் துறைக் குறிப்புகளும் பதிவு செய்துள்ளது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?
 
    தற்போது 2011 ஆகஸ்ட்டில் தமிழ்நாட்டின் 7மாவட்டங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்பு 1996லும் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை இந்த பதிவின்மூலம் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
 
  கைகாவில், நரோராவில், தாராப்புரில், கல்பாக்கத்தில் அனைத்து இடங்களிலுமே தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவின் காரணமாகவோ அடிக்கடி நிகழ்வுகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டுள்ளது என்றும் கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச் சூழலில் கலந்துள்ளது என்றும் இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர்ஏ. கோபாலகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்
 
     இதுவரை அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ ஆட்சியாளர்களிடமிருந்தோ  பகலில் மட்டுமே கணவுகானச்சொன்ன உங்களைப்போன்ற அனுவிஞ்ஞானிகளோ யாராவது உருப்படியாக எதாவது அவர்களுக்கு பதில் அளித்தது உண்டா?  இதுவரை

     அணு உலையின் ஆயுள்காலம் முடிந்தபின் அதிலிருந்து வருகிற கதிரியக்க கழிவுகளை மிகத் தடிப்பான சுவருள்ள ஈயப் பெட்டகங்களில் அடைத்து 3000 அடிக்குக் கீழே குறைந்தது 25000 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இவ்வளவு நீண்ட காலத் திற்கு எந்தக் கண்காணிப்புக்கும் உத்தரவாதம் அளித்திட மத்திய மாநில அரசிடமிருந்து எழுத்து பூர்வமாக விரிவான வெள்ளை அறிக்கை அளித்திட உங்களால் முடியுமா?
* சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரி
கேட்டானாம் புல்லட் என்ற கதையாய்

 
       காவிரி நீரை தரமறுக்கின்ற கர்நாடக அரசுக்கு நாள்தோறும்
11 கோடி யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டிலிருந்து கொடுத்து வருகின்றோம்

     இங்கு வாழும் எங்கள்  தமிழக அரசியல்வாதிகளிடமும் பாமர தமிழ்சாதியினரிடமும் ஒற்றுமை இல்லாததினால் விரைவில் உடைபட போகும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்திற்கு நாள் தோறும்
9 கோடி யூனிட் மின்சாரம்

    பாலாற்றை மறிக்கும் ஆந்திராவிற்கு  நாள்தோறும் 6 கோடி யூனிட்
 இப்படி தமிழனுக்கு எதிராக இருக்கின்ற மற்ற மாநிலங்களுக்கு
மீண்டும் கூடங்குளம் மின்சாரத்தை கொடுக்கமாட்டீர்கள் என உறுதி அளித்திட உங்களால் முடியுமா?

      கடலலை மின்சாரம், காற்றாலை மின்சாரம், கழிவிலிருந்து மின்சாரம், கதிரொளி மின்சாரம் இதன்மீது  இந்தியஅரசும் தமிழகஅரசும் கவனம் செலுத்தாமல் அழிவை ஏற்படுத்தும் அணு உலையை ஏன் அமைக்க வேண்டும்
  
       மக்களை விட கூடங்குளம் ராஜீவ் ஒப்பந்தமென்பதால்  மனித உயிர், எலிகளை விட அதிலும் தமிழன் உயிர் மிகவும்  மலிவானது என நினைத்தார்களோ என்னவோ ப,சிதம்பரமும் ஈ,வே,கே, எஸ் மற்றும் பல அரசியல்வாதிகள் அனைவரும் கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என போராட்டத்தை மிகவும் கொச்சைபடுத்துகின்ற பல அயோக்கிய அரசியல் வாதிகளே


 வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்பு பணம் எவ்வளது தெரியுமா? அதைபற்றி வாய் திறப்பாரா சிதம்பரம் அதைப்பற்றி நீங்களாவது எதாவது இதுநாள்வரையில் சொல்லியது உண்டா?

     ஜப்பான் சுனாமி மற்றும் அணு உலை விபத்தால் பாதிக்கப்பட்டபோது அந்நாட்டு பிரதமர் மக்களிடம் சென்று ‘நான் உங்களுடன் இருக்கிறேன்’ என்று பெருமையாக சொல்லி கூடவே இருந்து உதவிகள் பல செய்தார் ஆனால், இங்கு இந்தியாவில் போபால் விபத்து ஏற் பட்டபோது அப்போதைய முதல்வர் டெல்லி போய் பயந்து படுத்துக்கொண்டார் என்பது எங்கள் தமிழ்சாதிக்கு எத்தனைபேருக்குத்தெரியும்

    கூடங்குளம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் பொதுநலன் வழக்குத் தொடுத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன், முன்னாள் கப்பற் படைத் தலைவர் எல்.ராமதாஸ்,முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால்,அணு விஞ்ஞானி பி.எம்.பார்கவா  அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன்  வை,கோ சீமான் போன்றவர்கள் தேசத் துரோகியா? வெளிநாட்டில் பணம் வாங்கிக்கொண்டா கூடங்குளத்திற்கு எதிராக போராடுகிறார்கள் சொல்லுங்கள் ராஜிவ்  அனுமானிகளே?
 
  இத்தாலியில்  ஜூன் மாதம் 11 ஆம் தேதி  நடைபெற்ற ஒரு பொது வாக்கெடுப்பில் அணு உலைகள் அமைக்கக் கூடாது என்று தொண்ணூறு சதவிகித மக்கள் வாக்களித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
அப்படியானால் அவர்களெல்லாம் முட்டாளா?
   அப்படி வாக்கெடுப்பு என்ற வாய்ப்பை எங்களுக்கு வழங்கிட முயற்சி செய்வீர்களா திரு, கலாம் அவர்களே

     ஆறுகோடி ரூபாயில் பாலம் கட்டுவதற்கு  அரசு டென்டர்  என்றால்  வெறும் 6 மூட்டை சிமெண்ட்டை வைத்தே  பாலம் கட்டும் நம் திறமைமிக்க  ஊழல்மிகுந்த நம் பாரத தேசத்தில்  அதுவும் நம் தமிழகத்தில் அனுக்கழிவுகளை ஏறக்குறைய 10,000  ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.  அதற்கு ஏதேனும் உத்திரவாதம் அளிக்க முடியுமா?
நக்கிற நாய்க்குச் செக்கென்ன
 சிவலிங்கமென்ன? என மக்களை வழிநடத்துகின்ற மத்திய மந்திரி செய்த ஊழலினால் காமன்வெல்த்து போட்டியின்போது கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது இப்படி ஊழலில் திறமை மிக்க உள்ளவர்களை நம்பி எப்படி அனுக்கழிவை பாதுகாப்பது   சொல்லுங்கள் நீங்கள்
* சொல்லிக் கொடுத்த புத்தியும்
கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்? பார்ப்போம்
  
         ஒரு டீ ஸ்பூன் புளுட்டோனியம் 300 கோடிபேருக்கு புற்றுநேயை உருவாக்க வள்ளது அப்படி என்றால் வருடத்திற்கு 1000 கிலோ புளுட்டோனியத்தால் என்னவெல்லாம் நடக்கும் நீங்களே கற்பனை செய்து பாருங்கள் திரு, கலாம் அவர்களே
 
      ஐ,நா, உறுப்பு நாடுகள்192 நாடுகள் மட்டுமே அனு உலை வைத்திருக்கும் நிலையில் வளர்ச்சியடைந்த ஜெர்மனி போன்ற நாடுகள் அனு உலை உருவாக்கத்தை முற்றிலுமாக தடுத்திருக்கும் நிலையில் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் அமைப்பதற்கு காரணம் என்ன?

        ஆந்திரா மாநிலம் நாகார்சுனாசாகர் மற்றும் கேரளா மாநிலம் பூதான்கெட்டு பகுதியில் நிறுவப்பட உத்தேசித்திருந்த இந்த கூடங்குள அனு உலை அந்த மாநிலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பால் இடமாறி கூடங்குளத்தில் அமைக்கிறார்கள் அப்படி என்றால்
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்
அந்த கதையாய்
    தமிழன் என்றால் கேனக்கிருக்கனா? அல்லது ஈனப்பிறவி இழிச்சவாயன் என்பதாலா?
      2011 சூலை மாதம் ரஸ்யா பிரதமர் மெத்தவதே ரஸ்யா சுற்றுச்சுழல் அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து தந்த அறிக்கையில் தற்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் விவி,இ,ஆர் 1000 அனு உலையில் 31 குறைபாடுகள் உள்ளதை சுட்டிகாட்டியுள்ளார்கள் அதைப்பற்றி  உங்களால் விளக்கமாக தமிழக மக்களுக்கு சொல்ல முடியுமா

     கூடங்குளத்தில் மிகப்பெரிய கொதிகளன்களின்மூலம் கடலில் 1300 டிகிரி பாரன்கீட்டுக்குமேல் வெப்பத்துடன் கடலில் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு ஏற்படுமா ஏற்படாதா?

      இதுபோல், கல்பாக்கத்தில் பாதுகாப்பு, ஒத்திகை  நடைபெற்றபோது அங்கிருந்த இரண்டு பஸ் இயங்கவில்லை. அதோடு வாக்கி டாக்கியும் செயல்படவில்லை. கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை. என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா
    மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளதும். கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளதும் இவற்றில் மருத்துவர்களும் செலிவியர்களும்  பாதிபேர் இல்லையென இங்கு இருக்கின்ற அறவேக்காடு யுவராஜ் போன்றவர்களுக்கு தெரியுமா தெரியாதா
    கல்பாக்கத்தில்அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி ஒருவருக்காவது இருக்கிறதா  மருந்துகள் போதிய அளவு  உள்ளதா பாமர தமிழ்சாதியின் மேல் அக்கறை இல்லாத அம்மா ஜெ நீண்ட நாள் நலமுடன் வாழ தீச்சட்டி ஏந்திடும் நம் பெருமைமிக்க ஆளும் கட்சி மந்திரி எம், எல்,யேவுக்கு தெரியும் சொல்லுங்கள் பார்ப்போம்

     இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பாக அம்பலப்பட்ட ஊழலை  வெளியிட்ட போது  உங்கள்மீதும் பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பலபேருக்கு சந்தேகம் வந்துள்ளது உங்களுக்கு தெரியுமா கலாம் அவர்களே

    அணு உலைகளோடு வாழ்வது என்பது மடியில் அணுகுண்டைக் கட்டிக்கொண்டு இருப்பதற்கு நிகரானது என்று

    அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தெரியுமா தெரியாதா

     1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.

    கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் பொதுமக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை.  என்பது எத்தனைபேருக்குத்தெரியும்



(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.


    அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.

   இந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் விவரங்களை பாருங்கள்.

எண்

திட்டம்

மின் உற்பத்தி அளவு

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

(ரூபாய்)

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 வட சென்னை படி – 2 2 * 600 = 1200 MW 1200 MW 4650 கோடிகள் முதலாவது சனவரி 2012
இரண்டாவது பிப்ரவரி 2012
2 மேட்டூர் படி – 3 600 MW 600 MW 3106 கோடிகள் மார்ச் 2012
3 த.நா.மி.வா. – NTPC – வல்லூர் 3 * 500 = 1500 MW 1041 MW 8444 கோடிகள் முதலாவது டிசம்பர் 2011
இரண்டாவது மார்ச் 2012
மூன்றாவது அக்டோபர் 2012
4 த.நா.மி.வா. – NLC – தூத்துக்குடி 2 * 500 = 1000 MW 387 MW 4910 கோடிகள் நவம்பர் 2012
5 ஏழு சிறு நீர்மின் திட்டங்கள் 90 MW 90 MW 1556 கோடிகள் டிசம்பர் 2011 -
மார்ச் 2012
6 கூடங்குளம் அணுமின் நிலையம் 2 * 1000 = 2000 MW 925 MW நடுவண் அரசு மார்ச் 2012
7 கல்பாக்கம் விரிவாக்கம் 2 *250 = 500 MW 167 MW நடுவண் அரசு மார்ச் 2012
8 நெய்வேலி இரண்டாம் படி விரிவாக்கம் 2 *250 = 500 MW 230 MW நடுவண் அரசு முதலாவது ஆகஸ்டு 2011
இரண்டாவது சனவரி 2012

மொத்தம் 7390 MW 4640 MW

இந்த அட்டவணையின் படி 2012 ஆம் ஆண்டு முடிவிற்குள் தமிழகத்திற்கு 4640 மெகாவாட் மின்சாரம் புதிதாக கிடைக்கத் தொடங்கிவிடும். இதற்கும் மேலாக இந்த 2012 ஆம் ஆண்டு கீழ்கண்ட திட்டங்களைத் தொடங்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 வட சென்னை படி – 2 800 MW 4800 கோடிகள் 2012 2015
2 வட சென்னை படி – 4 1600 MW 9600 கோடிகள் 2012 2016
3 உடன்குடி 1600 MW 9600 கோடிகள் 2012 2016
4 எண்ணூர் விரிவாக்கம் 600 MW 3600 கோடிகள் 2012 2015
5 குண்டா (Kundah Pumped Storage) 500 MW 1200 கோடிகள் 2012 2016

மொத்தம் 5100 MW 28800 கோடிகள்

இவையும் தவிர்த்து கீழ்கண்ட புதிய மின் உற்பத்தி திட்டப்பணிகளுக்கு அரசு அதிகாரிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 உடன்குடி – விரிவாக்கம் 800 MW 4800 கோடிகள் 2013 2016
2 உப்பூர் அனல் மின் நிலையம் 1600 MW 9600 கோடிகள் 2013 2016
3 எண்ணூர் – மாற்று திட்டம் 600 MW 3600 கோடிகள் 2012 2016
4 தூத்துக்குடி – படி 4 800 MW 4800 கோடிகள் 2012 2016

மொத்தம் 3800 MW 22800 கோடிகள்

இதுவும் போதாது என்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை 18000 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறப்பு அமைப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள் (M/s. Coastal Tamil Nadu Power Limited). இத்திட்டத்திற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கருத்துக்கேட்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
காற்றாலை மின் உற்பத்தியிலும் தனியார் உதவியுடன் காற்றாலை மின்சாரத்தை மேலும் 10000  மெகாவாட் அதிகப்படுத்த  வாய்ப்பிருப்பதாக மின்சாரவாரிய அறிக்கை தெரிவிக்கிறது.


மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் திட்டங்களினால் வரும் சில ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கிடைக்க இருக்கின்ற மின்சாரம் 27540 மெகாவாட்.  இதில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க இருப்பதென்னவோ 925 மெகாவாட் மட்டுமே


இன்னும் பல விவாதங்களுடன் பல விமர்சனங்களுடன்
பதவு போட இருக்கும் உங்கள் அன்பு
சிகா,லெனின் 90747357920
 

4 comments:

  1. உண்மையை உலகத்துக்கு உணர்த்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நான் பதிவு எழுதிட உங்கள் கருத்தும் அன்பும் ஆதரவும் எனக்கு தேவை மிக்க நன்றி

      Delete
  2. அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை

    http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_15.html

    ReplyDelete
  3. என் இனிய நண்பரே நான் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்காமல் எதை எதையோ அனுப்பிவைத்துள்ளீர்கள் நான் கூடங்குளம் தரகர் கலாம் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு உங்களால் ஆக்கபூர்வமான பதில் இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..