Tuesday 7 February 2012

முத்தமிழ் வித்தகருக்கு மு, கலைஞர் அவர்களுக்கு நான் எழுதும் கடிதம் (பாகம் 1)

           தனது 14/வது வயதில் அரசியலில் நுழைந்து இன்றுவைர சக்கர நாற்காலியில் அரசியல் செய்து கிட்டத்தட்ட 2 லட்சம் தமிழர்கள் ஈழத்தில் படுகொலை நிகழ்ந்து இன்னும் இரத்த வாடை மறந்துபோகாத நிலையில் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த பாக்கியத்தை பெற முடிந்த நம் ஒப்பற்ற தமிழின தலைவரான முத்தமிழ் வித்தகருக்கு நான் எழுதும் கடிதம்,,,

வீட்டு பொஞ்சாதி வேம்பு
நாட்டு பொஞ்சாதி கரும்பு

   என நினைத்தீர்களோ என்னவே நீஙகள் மனைவியார் என்றும் துணைவியார் என்றும் தமிழகத்தை ஆட்சி செய்ய பல வாரிசுகள் உங்களுக்கு தேவைப்பட்டது எனக்கொன்றும் வியப்பாக தோன்றவில்லை, காரணம்

   அறுவடை காலத்தில் எலிக்குகூட 5 பொஞ்சாதி தேவைப்படுமாம்
அப்படி இருக்க ஐந்தமிழ் அறிஞரான உங்களுக்கு இருப்பது ஒன்றும் அதிசயமல்ல

                  இன்றைய என்னைப்போன்ற தலைமுறைக்கு தெரியாத விசயமாய் 1970 /ல் அன்றைய ஜவகரீட் என்ற செய்தித்தாள்களில் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது, அதற்கு கனிமொழி என்றும் அப்பா பெயர்                                    மு, கருணாநிதி என மருத்துவ பதிவேட்டில் பெயர் கொடுத்துள்ளதாக அன்றைய நாளேட்டில் ஒரு பெட்டிச்செய்தி வெளியிட்டமைக்காக அன்றே மறுப்புச் செய்தி வெளியிட்டு கனிமொழி எனது மகள் இல்லை அது எனக்குப் பிறக்கவில்லை எனவும் அதுமட்டுமல்லாமல் அந்த செய்தித்தாள் நிறுவனத்தின் உரிமையாளர் திரு, என்,கே,டி சுப்பிரமணியம் அவர்கள்மீது வழக்குப்போட்டு கோர்ட்டு படியேறி தண்டனைகூட பெற்றுக்கொடுத்த கலைஞர் எங்கே

        இன்று டில்லிவரை சென்று 6மாத காலமாக  சோனியாவின் கரிசனையில் உங்கள் மகளை மீட்டெடுத்து  தாரை தப்பட்டை முழங்க வீதியெங்கும் வெடிமுழக்கத்துடன் வரும்பொழுது கற்பு கரசி கண்ணகியின்  சிலை நிறுவ பாடுபட்ட நெறிதவறா உங்களின் வாழ்க்கைபாதையை நினைத்து பெருமைப்பட்டவன் நான் எங்கே,,,

                     இன்றுவரை வாழ்வில் ஏணியாய் இருந்து ஏற்றிவிட்ட தமிழனைவிட சோனியா மேலென்று பதவிகளைத் தற்காத்துக்கொண்டு பகட்டாக உடன்பிறப்பு தன்பிறப்பு சூழ வாழும் ஒருவரை எப்படித் தமிழன் தமிழினத் தலைவன் என்று ஏற்பது என என்போன்ற கேனக்கிருக்கனுக்கு கேள்விகள் பிறந்து கடைசியில் கேலியாய் முடிந்துபோனது

                          தன் மொழியை இனத்தை முனைப்போடு காக்க வந்த நீங்கள் பதைபதைப்போடு தன் பிள்ளைகளை காக்கும் முயற்சியில் களத்தில் இறங்க வந்த விளைவு எந்த ஒரு தமிழனின் நலனுக்கும் உங்களால் பாதுகாப்புத் தரமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, உங்கள் ஆட்சிகாலம் என்பது காலங்காலமாய் நினைத்துப்பார்தோமையானால் உங்கள் குடும்பம் நலன் சார்ந்தே இருக்குமென்பது கண்கூடு

             ஜந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தாலும்கூட ஏற்கனவே நான்குமுறை இருந்த கால கட்டத்தில் பிள்ளைத்தமிழை அறியனை ஏற்ற எந்த ஒரு அடித்தளத்தையும் நீங்கள் அமைக்கவில்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை அரியனைக்குத் தயார்படுத்தியதை முனைப்பு காட்டியதை 

தமிழருக்கு என்றால் கடிதம் எழுதுவதும்
தன் குடும்பத்திற்கு பதவி என்றால் டில்லி விரைவதும் உங்களின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் சொல்லும்

      தான் நேசித்த மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாகம் செய்யமுடியுமோ அந்த அற்புதமான அறப்பணியை செய்த தியாக தீபம் திலீபன் எங்கே

      உங்கள் மகள் தீகார் சிறையில் தனிமையில் இருக்கும்போது கண்ணீர்விட்டும் எங்கள் தொப்புள்கொடி உறவு மாண்டபோது மழை நி்ன்றாலும் தூவானம் நிற்கவில்லை என உயிர்பலியை கேவலப்படுத்தும் நிலைமைக்கு முதுமையோடு தள்ளப்பட்டு நாளொரு கவிதை பொழுதொரு அடுக்குப்பொய் பேசிடும்  முத்தமிழ் வித்தகர்  நீங்கள் எங்கே

         உங்கள் ஆட்சிகாலத்தி்ன் அவலக் காட்சிகளை மக்கள் மனதில் பதிந்துவிடாத வண்ணம் இலவச வண்ணத்தொலைக்காட்சி அறிவிப்புகளும் இடைக்கால மழைக்கால கடன் நிவாரணத் தள்ளுபடிகளும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் கவனம் எந்த வகையிலும் அரசின்மீது விழுந்துவிடாத வண்ணம் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தி குடிமகன்களின் தாழ்வு நிலைக்கு வழிகோலும் நிலைகளையெல்லாம்  மூடிமறைத்துவிட்டு குறிப்பாக தமிழகத்தில் ஆளுமைப் பொறுப்பில் தமிழரல்லாத ஒரு தனவான் ஆண்டுகொண்டிருந்த அவல நிலையை காணமுடிந்த பாக்கியத்தை பெற்றவர்களின் இந்த கேனக்கிருக்கனும் ஒருவன்

     மறைந்த த,கி, என்ற தா,கிருஸ்ணனின் கொலையில்கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தீர்ப்பு சொன்ன நீதிபதி தற்காப்பு கருதி நீதிபதி குரோர்பதி ஆகிவிட்டதாக உங்களைப்போல நானும் கொஞ்சம் கேள்விபட்டேன் இப்படிப்பட்ட நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது நாஞ்சில் கி, மனோகரன் சொன்னதுபோல் அது கருவின் குற்றமாகக்கூட இருக்கலாம்  நான் உண்மையில் நெஞ்சுக்கு நீதி கதை எழுதிய உங்களை நினைத்து பெருமை கொள்வோமாக,,,,


           மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று தந்தை பெரியார் கருத்து சராசரி மனிதனா் பின்பற்றப்படாமல் போனாலும் மொழியின்பால் இனத்தின்பால் பற்றில்லாத ஒருவனை வெற்று ஆள் என்று ஒதிக்கிவிட வேண்டாமென்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்திற்கு இணங்க நம் தமிழை இனத்தை காக்க வந்த காத்தவராயன் கரிகாற்சோழன் வாழும் வள்ளுவர் வாழ்ந்த அண்ணாவின் வாரிசு என்பவர் ஐந்தமிழ் அறிஞர் உலகமகாகவி என்றெல்லாம் உயர்த்தி உள்ளத்தில் குடியமர்த்தி அழகு பார்த்த அப்பாவி தமிழனின் தொப்புள்கொடி உறவுகளான ஈழம் வாழ் தங்கங்களை சிங்கள எச்சங்கள் நஞ்சை பாய்ச்சி நய வஞ்சகமாய் கொத்துக்குண்டுகளை போட்டுக் கொத்துக் கொத்தாய் கொலைசெய்தபோது கையோடு கைகோர்த்தும்  மை தீரும்வரை யுததம் முடியும்வரை கடிதங்கள் எழுதியும் தமிழக மக்கள் மத்தியில் முத்தமிழ் அறிஞரான நீங்கள் ஆடிய நாடகம் ஒருவழியாய் முடிந்துபோனது எம் சொந்தங்களி்ன் உயிர்பசியும்

           தேன்தமிழென்று பேசும் உங்களால் பேச்சு இழந்துபோன தமிழ்ச்சமூகம் உங்கள் ஆட்சியில் கேலித்தனமான போக்குகளைச் சுட்டிக்காட்டும் நிலை வந்தால் செம்மொழி மாநாடு நடத்தி ஈழப் படுகொலை நிகழ்வுகளை மூடிமறைக்கும்  முயற்சியை வெளிப்படுத்த முயன்றால் ஏவல்துறையை  ஏவிவிட்டு என்னைப்போன்ற இளைஞர்களை சிறையில் தள்ளுவதை சிறப்பான பணியாக சீராய்ந்த தமிழறிஞர் உங்கள் ஆட்சிகாலத்தில் சிறப்பாக செய்தீர்கள் உங்களோடு சேர்த்து விஞ்ஞான ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ஞாஞ ஊதுகுழல் ஊதிக்கொண்டிருக்கும் திரு, சுப,வீ, திரு, அடிமைமணி (வீரமணி ஆகியோர்களுக்கு தெரியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் தமிழின தலைவருக்கு நான்,,,,,,

      உங்கள் உடல் உள்ளவரை கடல்கொள்ளாத ஆசையாய் தன் மகனை முதல்வராக்கவேண்டும் என்ற தனியாத ஆசையாய் இருக்கும் முன்னால் முதல்வரே உங்களின் பஞ்சடைத்த காதினால் இன்று மொத்த தமிழினமும் பேச மறுத்து நெஞ்சடைத்து ஊமையாய் நிற்பது உங்களுக்கு தெரியுமா?

        ஒரு காலத்தில் தனது வசீகர பேச்சால் முழக்கமிட்டு ஊர்கூட்டி பெருமையோடு கட்சிவளர்த்த சம்பத் போன்றோர்கள் வழிநடத்திய உங்கள் கட்சி இன்று கற்புக்கு புது இலக்கணமிட்ட குஸ்பு காமெடி நடிகர் வடிவேல் போன்ற தண்டங்களை வைத்துக்கொண்டு நீங்கள் கட்சி வளர்ப்பதை வேடிக்கை பார்த்திட இந்த கேனக்கிருக்கனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்கின்றேன்,,,

       அந்த அம்மா தங்கத் தாரகையோ அல்லது பித்தளை தாரகையே கொலைகாரன் ராஜபக்சேவை தண்டிக்க வேண்டுமென ஒண்டி ஆளா நின்னு சட்டமன்றத்தில் தீர்மானம்கூட போட்டுவிட்டது தன்னை கடலிலே தூக்கிப்போட்டாலும் கட்டுமறமாக மிதக்கும் தலைவரே இப்போது உங்களுக்கு இருக்கும் தமிழின தலைவர் என்ற நொண்டி பட்டத்தை   எங்கே கொண்டு புதைப்பீர்கள்  சொல்லுங்கள் பார்ப்போம்

       நான்தான் உங்கள் வீட்டு வேலைக்காரன் என வார்த்தையால் வசீகரித்து வாக்குகேட்டதி்ன் பாவத்திற்காக இன்று உங்கள் குடும்பமே ஒவ்வொரு சிறைச்சாலையாக கொள்ளைக்காரன் என்ற பட்டத்தோடு போகும்போது உண்மையில் உங்களுக்கு வாக்களித்த பாரம தமிழர்கள்மீது எனக்கும் கோபம்தான் வருகிறது

          84 வயதிலும் தன் குடும்பத்திற்கு முடிசூடிட காத்துக்கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞரே தமிழர்களின் கவனத்தை திருப்பும் அளவிற்கு ஈழ விடுதலையோ அல்லது தமிழின அழிப்போ முக்கியமானதாக இருக்காது ஏனெனில் தமிழைக்காக்க தண்டவாளத்தில் தலைவைத்து படுத்ததாக சொன்ன காலத்தில் கூட கவியரசு கண்ணதாசன் சிறைக்குபேனாரே தவிற இந்த சிறுகுணத்தார் சிறைக்கு செல்லவில்லை என்பதை வயதி்ல் சிறியவனாக இருந்தாலும் நானும் எனது தாத்தா சொன்னதை அறிவேன்,,

         முத்தமிழ் அறிஞரே வாழும் வள்ளவரே உங்களை இன்னும் புகழந்து  எழுதிட இந்த கடிதத்தில் இடம் இல்லாததினால் நிச்சயம் அடுத்த கடிதத்தில் உங்கள் புகழ் தொடரும்

                                       இப்படிக்கு
தமிழனாய் உங்கள் ஆட்சிகாலத்தில் வாழ்ந்ததற்கு வெக்கப்படும் கேனக்கிருக்கன் 

3 comments:

  1. தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
    வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
    தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
    நான் தான் " கலைஞன் " என்றான்…

    ReplyDelete
  2. நாள் முழுவதும் யோசித்து கலைஞரை புகழ்ந்து எழுதினாலும் நீங்க நறுக்குனு நச்சுனு சூப்பரா நாளு வரியில ரொம்ப புகழ்ந்துவிட்டீர்கள் நம்ம கலைஞரை நன்றி

    ReplyDelete
  3. கருணாநிதியை பற்றி எனக்கு தெரியாத பல விஷயங்களை பட்டியலிட்டு இருக்கிறீர்கள் நண்பரே.. நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..